அனோஜனின் புனைவு உலகம்
சமநிலை பேணும் குடும்ப அமைப்பு ================================== ஆதிக்கம் செய்தல், அடங்கிப்போதல் என்ற இரட்டை நிலைகள் எப்போதும் ஒருபடித்தானவை அல்ல. இவ்விரண்டுக்குமே மாற்று வெளிப்பாடுகள் உண்டு என்பது தனிநபர் உளவியலும் சமூக உளவியலும் பேசும் சொல்லாடல்கள். போலச் செய்யும் மந்திரச்சடங்குகளில் கூட ஆதிக்கத்திற்கெதிரான மந்திரச் சடங்குகள் உண்டு எனப் பேசும் மானிடவியல், அதிகாரத்தின் குறியீட்டைக் கேலிசெய்தும், இழிவுசெய்தும் ஏவல்கள் செய்து திருப்தி அடைவதுண்டு எனப்பேசுகிறது.