இடுகைகள்

புறமாகவும் அகப்புறமாகவும்- கருணாகரனின் கவிதைகளுக்குள் ஒரு பயணம்

படம்
தொடர்ச்சியாகக் கவிதை வடிவத்தைத் தனது முதன்மையான வெளிப்பாட்டு வடிவமாகக் கொண்டிருக்கும் கவி. கருணாகரன். அவரது மூன்று கவிதைகளை யாவரும் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு கவிதைக்கும் தனித்தலைப்புகளின்றி- கருணாகரன் கவிதைகள் – எனப் பதிவேற்றம் பெற்றுள்ள அம்மூன்று கவிதைகள் உருவாக்கும் உணர்வுகள் அதற்குள் இருக்கும் காலப்பின்னணியால் அர்த்தம் கொள்கின்றன . 

தலைப்புப் பொருத்தம் தேடி ஒரு வாசிப்பு

விடுமுறைதினத்தில் ஓர் அனார்க்கிஸ்ட் கதையை முன்வைத்து  சில பனுவல்களின் தலைப்பு உருவாக்கும் ஆர்வம் காரணமாக வாசிப்பு ஆரம்பமாகும். அப்படி ஆரம்பிக்கும் ஆர்வம், தலைப்புக்கான பொருத்தம் அல்லது தொடர்பு எங்கே இருக்கிறது தேடிக்கொண்டே வாசிக்கத் தொடங்கும். ஒற்றைச் சொல்லாக - பெயராகவோ, பெயர்ச்சொல்லாகவோ - இருக்கும் தலைப்புகள் அப்படியொரு ஆர்வத்தைத் தூண்டுவதில்லை. உருவகமாகவோ, குறியீடாகவோ, படிமமாகவோ அமையும் தலைப்புகள் கவிதைக்கான தலைப்புகளாக இருந்து வாசிப்பின்பத்தைக் கூட்டும். கதைகளிலும் கூட சில தலைப்புகள் ஆரம்பத்தில் நேர்ப்பொருளிலிருந்து விலகிச் சூழலில் வேறுவிதமான அர்த்தங்களுக்குள் வாசிப்பவரை நகர்த்திக் கொண்டு போவதுண்டு. 

கதைசொல்லுதலின் சாகசம் - ஜெயமோகனின் பத்துலட்சம் காலடிகள் கதையை முன்வைத்து

ஜெயமோகன் சமகாலத்தமிழின் முதன்மையான கதைசொல்லி. அவரது பத்துலட்சம் காலடிகள் அண்மையில் வந்துள்ள சிறுகதைகளில் முக்கியமான கதை.  சில நாட்களாக இந்தப் பொருள் தரும் சொற்றொடர்கள் இணையப் பக்கங்களில் ஆங்காங்கே தொடர்ச்சியாக வாசிக்கக் கிடைக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் ஜெயமோகனை முதன்மையான கதைசொல்லி என்று மதிப்பீட்டுச் சொல்லால் பாராட்டிச் சொல்வதற்கு ஒருவர் காரணங்களை அடுக்கிக் காட்டத் தேவையில்லை. ஆனால் இந்த (கொரோனா) அடங்கல் காலத்தில் நாளொன்றுக்கு ஒரு கதை என்று தவறாமல் தனது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் வரிசையில் முப்பதாவது கதையாக வந்துள்ள ஒரு கதையை முக்கியமான கதை -ஆகச் சிறந்த கதை -உன்னதமான கதை – என்று சொல்வதற்குப் போதுமான காரணங்களை முன்வைக்க வேண்டும். காரணங்கள் சொல்லாமல் முன்வைக்கப்படும் சொற்றொடர் விமரிசனச் சொல்லாக இருக்காது. போகிற போக்கில் வாசிக்காமலேயே கூடச் சொல்லப்படும் மதிப்பிட்டுக் குறிப்பாகவே கருதப்படும்.

ரவிக்குமார்: எழுத்தாளுமையும் அரசியல் ஆளுமையும்

படம்
மக்களாட்சி செயல்படும் நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களிடம் மக்களின் எதிர்பார்ப்புகள் ஒன்றுபோல இருப்பதில்லை. மேற்கு நாடுகளில் தங்கள் சார்பாக அரசமைப்பு அவைகளுக்குச் செல்லும் உறுப்பினர்களின் அறிவார்ந்த செயல்பாடுகளே முதன்மையாக எடை போடப்படும். அச்செயல்பாடுகளின் அடிப்படையில் அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்கள் உறுப்பினர்களாக இருக்கும் கட்சிகள் வாய்ப்பு வழங்கும். மக்களும் தேர்ந்தெடுப்படுவார்கள். இந்தியா போன்ற கீழைத்தேய நாடுகளில் இந்தத் திறன்மட்டும் -அறிவார்ந்த அவைப்பங்கேற்பு மட்டும் போதாது.

முன்னுரைத்துச் சென்றார் தோப்பில்.

இலங்கையில் வெடித்த குண்டுகளின் ஆணிவேர்கள் எங்கே இருக்கின்றன என்பதைச் சொல்ல இயலாதுதான். ஆனால் ஒரு ஊருக்குள் - ஒரு தெருவுக்குள் நுழையும் புதுவகை அரசியலுக்கும் மரபான மனிதர்களுக்குமான முரணைப் பேசிய தோப்பில் முகம்மது மீரானின் அஞ்சுவண்ணம் நாவல் முன்பே சொல்ல முயன்றது என்பது இப்போது நினைவுக்கு வருகிறது. இந்தியாவை முன்வைத்துச் சொல்லப்படும் பல செய்திகளும் விவாதங்களும் விளக்கங்களும் இலங்கைக்கும் பொருந்தும். ஏனென்றால் இலங்கையும் முரண்பட்ட இன, மத, சாதி வேறுபாடுகளால் அலைக்கழிக்கப்படும் பரப்புதான். அஞ்சு வண்ணம் தெரு நாவல் வெளியானது 2008 .வாசித்த பின் அப்போது எழுதிய குறிப்பு இது. திரும்பவும் படித்தால் இன்னும் விரிவாக எழுதலாம்.: ********* **************** அந்நாவலை வாசித்து முடித்தவுடன் ‘இதுசமகால வாழ்வை விசாரிக்கும் நாவல்’ என்று வகைப்படுத்திப் புரிந்து கொள்ள வேண்டும் என நினைத்ததை விட ‘அஞ்சு வண்ணம் தெரு சமகால அரசியலை - அதன் நுட்பமான இயங்குநிலைகளை ஆழ்ந்த கரிசனத்தோடு விவரிக்கும் நாவல்’ எனச் சொல்வதே சரியாக இருக்கும் எனத் தோன்றியது. ஒவ்வொரு நாவலையும் சாதாரணமாக வாசித்து விட்டுப் போய்விடலாம். ஆனால் அது எழுப்ப

தன்னை முன்வைக்கும் நவீனத்துவம் - கவிதா லட்சுமியின் சிகண்டி

படம்
கேட்கும் இடத்தில் இருந்து வாசிக்கும் கவிதை வாசகர்களுக்குத் தர்க்கம் சார்ந்த புரிதல்களையும் காரணகாரியங்கள் கொண்ட விளக்கங்களையும் முன் வைப்பதைத் தவிர்ப்பது கவிதையின் அழகியல் கூறுகளில் ஒன்றாக முன் வைக்கப்படுகிறது. நேரடி விளக்கங்களைத் தவிர்த்து முன்வைக்கப்படும் சொற்களின் வழி உருவாக்கப்படும் குறியீடுகள், படிமங்கள், உவமங்கள், உருவகங்கள் போன்றவற்றின் வழியாக வாசிப்புத்தளங்களைக் கவிதைகள் உருவாக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நிலையில் தான் கவிதை எழுத்துக் கலைகளில் உச்சம் எனக் கருதப்படுகிறது. இப்படிக் கருதப்படுவதின் பின்னணிகள் முழுமையும் ஏற்கத்தக்கன அல்ல.