இடுகைகள்

அறிந்த உண்மையிலிருந்து விடுதலை-சுனில் கிருஷ்ணனின் இயல்வாகை:

ஜெயமோகனை ஆசானாகக் கருதும் சிஷ்யர்களின் கதைகளால் நிரம்பியிருக்கிறது ம.நவீனின் வல்லினம். மார்ச்,1,2020 இதழில் சுனில் கிருஷ்ணன் எழுதியுள்ள கதைத் தலைப்பு : இயல் வாகை.  சுனில் கிருஷ்ணனின் கதையைப் பற்றிப் பேசுவதற்கு முன் சில குறிப்புகள்:  இயல்வாகை ஒரு மரத்தின் பெயர். அதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் மின்னலாக தோற்றம் தரும். மஞ்சள் அடிப்படை வண்ணங்களில் ஒன்று. மற்ற இரண்டு அடிப்படை வண்ணங்கள் பச்சை, நீலம். 

யாதேவியும் சர்வஃபூதேஷுவும்

தனது உடலை ஓர் ஆண் தொடக்கூடாது என நிபந்தனையாக்கும் ’எல்லா ஆன்ஸெல்’ என்னும் பிரெஞ்சுக்காரிக்கு முன்னால், தனது மருத்துவ முறையின் நுட்பங்களை - செயல்படும் நுணுக்கங்களைச் சொல்லி ஏற்கச் செய்யும் ஸ்ரீதரப்பொதுவாளின் பேச்சுதான் கதை, ஆயுர்வேத மருத்துவனான தன்னால் அவளின் உடல் நோயை மட்டுமல்ல; உளநோயையும் குணப்படுத்த முடியும்; அதையும் தாண்டி எதிர்கால வாழ்க்கையையே திசைதிருப்பிவிட முடியும் என்பதைத் தீர்க்கமான நம்பிக்கையோடு முன்வைக்கிறான். தன்னுடைய மருத்துவம் அனுபவ மருத்துவம் என்பதைத் தாண்டி, யாதுமாகி நிற்கும் பராசக்தியை நம்பும் வாழ்முறையின் வழியாக உருவான மருத்துவம் என்பதில் அவன் காட்டும் பெருமிதமே கதையில் முதன்மையாக வெளிப்பட்டுள்ளது 

நிலவெளிப்பயணம்

சென்னை-78,கே.கே.நகர், முனிசாமி சாலை, மஹாவீர் காம்பளக்ஸ், எண்.6, டிஸ்கவரி புக் பேலஸ் முகவரியிலிருந்து அதன் புதிய வெளியீடான நிலவெளி -மாத இதழ், ஆளஞ்சல் மூலம் வந்து சேர்ந்த நேரம் நேற்று(16-05-2019) மாலை 6 மணி. 24 மணி நேரத்தில் படித்து முடித்துவிட நினைக்கவில்லை. என்றாலும் முதல் இதழ் என்பதால் 68 பக்கங்களையும் வாசித்து விடுவது என்று கங்கணம் கட்டி வாசிக்கத் தொடங்கினேன். மொத்தமாக நான்கு அமர்வுகள்.

ராஜுமுருகனின் ஜிப்ஸி: கருத்துரைகள் தொகுதி

படம்
பெரும்பாலான மனிதர்கள், அளிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து விடும்போது மிகக் குறைவானவர்கள் அளிக்கப்பட்ட வாழ்க்கையை நிராகரித்துவிட்டு, தனக்கான வாழ்க்கையைத் தேர்வுசெய்கிறார்கள். அவர்கள் தேர்வுசெய்த வாழ்க்கைக்குள் இருக்கும்போது ஏற்படும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து, எதிர்த்துநின்று வெல்கிறார்கள். உதாரணமனிதர்களாக - வரலாற்று ஆளுமைகளாக அறியப்படுகிறார்கள்.

இயல்பானதும் இயைபற்றதுமான இரண்டு திரைப்படங்கள்:

படம்
வகைப்படுத்திப் புரிந்துகொள்ளுதல், விளக்குதல், விமரிசனம் செய்தல், மதிப்பீட்டுக் கருத்தை முன்வைத்தல் என்பன கலை இலக்கிய விவாதத்தை முன்னெடுப்பவர்கள், கடைப்பிடிக்கும் எளிய உத்தி. முன்னெடுப்பு அல்லது சோதனை முயற்சிப் படங்களில் வளர்நிலைப் பாத்திரங்களுக்குப் (Round Characters) பதிலாகத் தட்டையான பாத்திரங்களின் (Flat Characters) அகநிலை விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பழமலையும் சந்ருவும்-சந்திப்பும் நினைவுகளும்

படம்
முகநூலின் வருகைக்குப் பின்னர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் திருப்பும் பக்கங்களெல்லாம் பார்க்கக் கிடைக்கின்றன. நண்பர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக்கொள்ளும் வாழ்த்துகளும் கேட்கின்றன. அதேபோல் நண்பர்களின் சந்திப்புகளும் படங்களாக விரிகின்றன. அண்மையில் கவி. பழமலய்யைச் சந்திக்க நேர்ந்தது. ஓவியர் சந்ருவிற்குப் பார்க்காமலேயே வாழ்த்துச் சொல்ல முடிந்தது.