இடுகைகள்

மன்னாருக்குப் போகும்போது -உரையாடல்கள் காலத்தின் வடிவம்

படம்
எழுத்தும் பேச்சும் இருவேறு வெளிப்பாட்டு வடிவங்கள். இரண்டிலும் சாதிக்கத் தெரிந்தவர்கள் குறைவு. இரண்டையும் லாவகமாகக் கையாளத் தெரிந்தவர்கள் பெருஞ்சாதனையாளர்களாக மாறி விடுவார்கள். 

நாடு திரும்பியுள்ள அகதிகளின் ஒரு வகைமாதிரி

படம்
முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து முடிந்து 10 ஆண்டுகள் ஓடிவிட்டன. இலங்கைத் தீவுக்குள் தமிழர்களின் இருப்பு கேள்விக்குள்ளாகிக் கொண்டிருப்பதாக நினைத்தவர்களின் முணுமுணுப்புகள் வெளிப்பட்ட காலத்திற்கு முள்ளிவாய்க்கால் அழிவுக்கும் முன் 30 ஆண்டுகள் போகவேண்டும். உரிமைகளுக்கான போராட்டமாகத் தொடங்கிப் பின்னர் தனிநாட்டுக்கான கோரிக்கையாக மாறிய பின் அந்நாடு போர்க்கள பூமியாக மாறியது. போர்க்களம் சிங்களப் பேரினவாதத்திற் கெதிரானதாகத் தோன்றி, தமிழர் இயக்கங்களுக்குள்ளேயே வென்றெடுக்கும் போராக மாறியது ஒருகட்டம். அக்கட்டத்தில் இந்திய அரசின் அமைதி காக்கும் படையின் நுழைவு இன்னொரு திசையையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியது. அதன் வெளியேற்றத்திற்குப் பின் நடந்த போரில் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளான சிங்களப் படைகளோடும், மறைந்து திரிந்த வல்லாதிக்கப் பேரரசுகளோடும் மோதி வீழ்ந்தனர் முள்ளிவாய்க்காலில். 

பூனைக்குட்டியும் பூக்குட்டியும் ஒரு காரோட்டியும்

ஒரு பயணத்தில் நினைவில் இருப்பவர்கள் எப்போதும் நீண்டகால நண்பர்களாக மட்டுமே இருப்பதில்லை. அவர்களைத் திரும்பத் பார்த்திருப்போம்; அவர்களோடு பேசியிருப்போம்; பேசியனவற்றுள் உடன்பட்ட கருத்தும், உடன்படாத கருத்துமெனப் பலவும் வந்து போய்க் கொண்டே இருக்கும்.

எழுத்துகள் - எழுத்தாளர்கள்

படம்
அபிலாஷின் பத்தி எழுத்துகள் உயிர்மை.காம் இணைய இதழில் அபிலாஷ் இன்னொரு பத்தித் தொடரை எழுதப் போகிறார் என்றொரு விளம்பரத்தை மனுஷ்யபுத்திரன் பகிர்ந்துள்ளார். உயிர்மை கண்டுபிடித்து வளர்த்தெடுத்த எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன். அவரது புனைவுகளில் -சிறுகதைகளிலும் நாவலிலும் - அதிகப்படியான விவரணைப் பகுதிகளும், தர்க்கம் சார்ந்த விவரிப்புகளும் இடம்பெற்று புனைவெழுத்தின் அடையாளங்களைக் குறைத்துவிடும் விபத்துகளைச் சந்தித்திருப்பதாகக் கருதியிருக்கிறேன்; ஆனால் அவரது கட்டுரைகள் - அவை தனிக்கட்டுரைகள் ஆனாலும் சரி, பத்தித்தொடர்களாக எழுதப்படும் கட்டுரைகளும் முன்மாதிரி இல்லாத வகைமை கொண்டவை.

தேய்புரிப் பழங்கயிறென நெளியும் நவீனக் கவிதைகள்- லறீனாவின் ஷேக்ஸ்பியரின் காதலி

எழுதவிரும்பும் ஒருவர் முதலில் தொடங்குவது கவிதையாக இருக்கிறது. ஒன்றைப் பார்த்தவுடன் - ஒன்றில் பங்கேற்றவுடன் -ஒன்றால் பாதிக்கப்பட்டவுடன் அதைக் குறித்துச் சொல்வதற்கேற்ற இலக்கியவடிவம் கவிதை. அக்கவிதை வடிவத்திலேயே தொடர்ந்து செயல்படுகிறவர்கள் உணர்வை எழுதுவதிலிருந்து மெல்லமெல்ல நகர்ந்து அறிவையும் கருத்தியலையும் சிந்திப்பு முறைமைகளையும் கவிதையாக்கும் முயற்சிக்கு நகர்கிறார்கள். அப்படி நகரும்போது அந்தக் கவிஞர்கள் அந்த மொழியில் இயங்கும் காலத்தின் கவியாக அடையாளப் படுகிறார்கள். நவீனத்துவத்தை உள்வாங்கிய பாரதியின் தொடக்கக் காலக் கவிதைக்கும் பிந்தியக் காலக்  கவிதைகளுக்குமான வேறுபாட்டைக் கவனிப்பவர்களுக்கு இது புரியும் . 

கவிமனம் உருவாக்குதல்

தனது மனத்திற்குள் உருவாகும் சொற்களும், சொற்களின் வழி உருவாகும் உருவகங்களும் படிமங்களும் எல்லோரும் பேசுவதுபோல இல்லை. வித்தியாசங்கள் இருக்கின்றன என உணரும்போது ஒரு மனித உயிரி இலக்கிய உருவாக்க மனநிலைக்குள் நுழைகிறது. வெளிப்படும் வித்தியாசநிலை நிலையானதாகவும் நீண்டகாலத்திற்கு அந்த மனித உயிரியைத் தக்க வைக்கும் வாய்ப்பிருப்பதாக உணரும் நிலையில் கதைகளையோ, நாடகங்களையோ எழுதும் முயற்சியில் இறங்குகிறது. ஆனால் சொல்லி முடித்தவுடன் உருவாகும் உணர்ச்சிநிலையை ரசிக்கும் மனித உயிரி கவிதையில் செயல்படும் வாய்ப்பையே விரும்புகிறது.