இடுகைகள்

இரங்கல் பாக்களில் ஒரு மாயநடப்பியல் கதை-வெய்யிலின் அக்காளின் எலும்புகள் தொகுப்பை முன்வைத்து

படம்
அக்காவைக்  காக்கா தூக்கிச் சென்றுவிட்டது அவ்வளவுதான் *****  கையிலிருக்கும் மண்ணாலான செப்பு கண்ணாடிக்குடுவை பீங்கான் பொம்மை எலக்ட்ரானிக் சாதனம் எனக் கையாள்வதில் கவனமாக இருக்கும் பொருளைக் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தையை எப்படிச் சமாளிப்பது. போனால் போகட்டும் என்று நினைத்தால் குழந்தையின் கையில் கொடுக்கலாம். கொடுத்த அடுத்த கணம் அந்தப் பொருளைப் போட்டு உடைத்துவிடக்கூடும். அதனால் கொடுக்கக் கூடாது.

பண்டிகைகள் - விளையாட்டுகள் - பொழுதுபோக்குகள்

ஐபிஎல் என்னும் மெலோ-டிராமா காதல், அன்பு, பாசம், தியாகம், இனிமை, பசுமை... இப்படியான சொற்களால் வருணிக்கக்கூடிய காட்சிகளைக் கொண்ட நாடகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டால் தான் பார்வையாளர்கள் நாற்காலியின் நுனியில் வந்து அமர்வார்கள். நாயகன் சரியாக மாட்டிக்கொண்டுவிட்டானே? இப்படியொரு சதியில் சிக்கியவன் தப்பிப்பானா? அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் நாயகியைக் கைகழுவித்தான் ஆகவேண்டும் எனப் பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்து ஆர்வத்தை உண்டாக்கவேண்டும். இதனை இவ்வகையான நாடகம் எனச் சொல்லத் தமிழில் சரியான சொல்லொன்று இல்லை. ஆங்கிலத்தில் அதனை மெலோடிராமா (Melo-drama ) என்று வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர். இவ்வகை உணர்வை உண்டாக்கக் காட்சி அமைப்புகளுக்கும் அதில் பங்கேற்று நடிப்பவர்களுக்கும் உதவும் விதமாகப் பாடல்களும் இசைக்கோர்வைகளும் ஒளியமைப்புத் திட்டமும் இணந்து கூடுதல் லயத்தை உண்டாக்கும் என்ன நடக்குமோ? ஏது நிகழுமோ? என்பதுதான் மெலோடிராமாவின் அடிப்படை உணர்வுத்தூண்டல். இதுவரையிலான ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டங்கள் ஒரு மெலோடிராமாவின் கச்சிதத்தோடு நகர்ந்து கொண்டிருக்கின்றன. முதல் இரண்டு வாரங்களில் கணித்துச் சொன்

எஸ்.விஸ்வநாதனின் குளிர்ந்த கரம் பற்றுதல் இனி இல்லை

சென்னை நகரம் பிடிக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஒவ்வொரு முறை போகும்போதும் சிலரைப் பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டு போவேன். அதன் போக்குவரத்து நெருக்கடியும் போகவேண்டிய தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரமும் சேர்ந்து கிளம்புவதையே தடுத்துவிடும். பார்க்க நினைத்தவர்களைப் பார்க்காமலேயே வருத்தத்துடன் - தொலைபேசியில் பேசிவிட்டுத் திரும்பிவிடுவேன். இரண்டு வாரங்களுக்கு முன்னால் தொலைபேசியில் வருத்தத்துடன் பேசிவிட்டு வந்த நண்பர் எஸ்.விஸ்வநாதன். இனி அவரோடு தொலைபேசியிலும் பேசமுடியாது. இனி அவரது குரலும் அன்பாய்ப்பிடித்துக்கொள்ளும் கைகளின் குளிர்மையும் இனி இல்லை.

ஓரங்க நாடகமும் ஓராள் நாடகமும்

படம்
ஓரங்க நாடகம் (One - Act Play) என்பதையும் ஓராள் நாடகம் (Mono -Acting) என்பதையும் பல நேரங்களில் குழப்பிக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாகக் கல்வி நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளில் இக்குழப்பம் உச்சநிலையை எட்டியிருக்கிறது. இவ்விரு சொற்களும் நாடகவியல் (Dramatics), அரங்கவியல் (Theatre) என்ற இரண்டின் வேறுபாட்டோடு தொடர்புடைய சொற்கள். உரையாடல்களே நாடக இலக்கியத்தின் அடிப்படைக்கூறு. அவ்வடிப்படைக்கூறு ஒரு குறிப்பிட்ட வெளியில் நடக்கும்போது காட்சி என்னும் சிற்றலகு உருவாகிறது. காட்சிகளில் இருக்கும் தொடர்புகளால் அங்கம் என்னும் பேரலகு வடிவம் கொள்கிறது.  அங்கங்கள் நாடக இலக்கியத்திற்குத் தேவையான முரண்களால் வளர்ந்து உச்சநிலையை அடைந்து முடிவை நோக்கிச் சென்று நாடகமாக மாறுகிறது. இவ்வளர்ச்சியையும் முடிவையும் ஒரே அங்கத்தில் தருவதாக எழுதப்படும் நாடகம் ஓரங்க நாடகம். இதற்கு மாறாக ஓரங்க நாடகத்தையோ, பல அங்கங்கள் கொண்ட நாடகத்தையோ, அதற்குள் இடம்பெற்றிருக்கக் கூடிய பல்வேறு கதாபாத்திரங்களையும் ஒரே நடிகர் தனது குரல், உடல் அசைவுகள், ஒப்பனைகள் வழியாக வேறுபடுத்திக் காட்டி நடிக்கும் நிகழ்வு ஓராள் நாடகம். இவ்வேறுபாட்டை

அத்திவரதர்: பண்பாட்டுச் சுற்றுலாவியல்

படம்
  சென்ற ஆண்டு தாமிரபரணியில் மகாபுஷ்கரணி. இந்த ஆண்டு அத்திவரதர். 12 ஆண்டுகள் இடைவெளியில் கும்பமேளாக்கள். அதே 12 ஆண்டுகள் கணக்கு வைத்து பெருங்கோயில்களில் கும்பாபிஷேகங்களும் நடக்கின்றன. வட இந்தியாவில் அலகாபாத், உஜ்ஜையினி, ஹரித்துவார், நாசிக் என நான்கு நகரங்களில் நடக்கும் கும்பமேளாக்கள் முக்கியம் எனச் சொல்லிக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டிற்குக் கும்பகோணத்தில் கும்பமேளா நடத்துகிறார்கள்.

நவீனத் தமிழ் எழுத்து என்னும் வரையறை

படம்
எல்லாவகையான ஆய்வுகளிலும் கருதுகோள் ஒன்று வேண்டும் என வலியுறுத்தப்படும். ஒற்றைக் கருதுகோளோடு தொடங்கும் ஆய்வுகள் துணைக் கருதுகோள்களையும் உருவாக்கிக் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளையும் முன் வைக்கலாம். ஆய்வேடுகளில் குறிப்பான கருதுகோள் இல்லாமல் பரந்துபட்ட நோக்கம் ஒன்றை முன்வைத்துக் கொண்டு தொகுத்தும் பகுத்தும் வைக்கப்படும் ஆய்வுகளும்கூட அதற்கான பயன்மதிப்பைப் பெறக் கூடியனதான்.

கீசக வதம் என்னும் அஞ்ஞாத வாசம்

படம்
வாசமென்னும் சொல்லாடல்கள்  வாசம் என்பது மூக்கினால் உணரப்படும் ஒருவித உணர்ச்சி. நறுமணங்கள் நல்ல வாசம்; விரும்பக் கூடியது. துர்மணங்கள் மூக்கைப் பொத்திக் கொள்ளச் செய்பவை. விரும்பாதவை; விரும்பத்தாகவை. இது ஒருவிதப் பொருண்மை. வாசத்திற்கு இன்னொரு பொருள் உண்டு. வாசம் என்பது வாழ்தல்; வாழ்க்கை.  வாழ்க்கை என்பது மனைவி மக்களோடு உண்டும் களித்தும் உறங்கியும் வாழ்தல். காதலித்தும் காதலிக்கப்பட்டும் காமம் துய்த்தும் பிணங்கிக் குடும்பமாக வாழ்வதல். அதன் வெளி வீடு. வீட்டிற்குள் உற்றார் உறவினர்களை அனுமதித்துச் சடங்குகள், விழாக்கள், கொண்டாட்டமென வீட்டிலிருந்து வாழ்தலின் பரிமாணங்களைக் குடும்ப வெளியிலிருந்து புறவெளிக்குள் நீட்டித்து வாழ்தல்.