இடுகைகள்

வேலியிடப்பட்ட குடும்பங்கள்:பாமாவின் முள்வேலி

படம்
வேலி என்னும் சொல்லுக்குச் சொத்து, எல்லை, வரையறை, பாதுகாப்பு எனப் பருண்மையான பொருள்கள் உண்டு. நாலுவேலி நிலம், பயிரை மேயும் வேலிகள், வேலிதாண்டிய வெள்ளாடு எனச் சொற்கோவைகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறோம். அப்படிப் பயன்படுத்தும் சொற்கோவைகள் பால் வேறுபாடின்றி இருபாலாருக்கும் பொதுவாகவே இருக்கின்றன. ஆனால் தாலியே வேலி எனச் சொல்லும்போது பாலடையாளம் பெற்று பெண்ணுக்குரியதாகச் சொற்கோவை மாறி நிற்கிறது. வேலியாக மாறும் தாலிதான் பெண்ணுக்குப் பெரிய பாதுகாப்பு என்பதை உறுதிப்படுத்தும் கருத்தியல் தோற்றத்தின் – பரப்பின் – இருப்பின் கருவியாக மாறிப் பெண்களைச் சுற்றி வலம் வருகிறது.

கலைஞர் சந்ரு

படம்
முகநூலின் வருகைக்குப் பின்னர் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் திருப்பும் பக்கங்களெல்லாம் பார்க்கக் கிடைக்கின்றன. நண்பர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக்கொள்ளும் வாழ்த்துகளும் கேட்கின்றன. ஓவியர் சந்ரு அவர்களுக்கு நேற்றுப் பிறந்தநாள் என்பதை அவரது ரசிகர்கள் முகநூலில் நிரப்பி வைத்து விட்டனர். ரசிகர்களில் பலபேர் அவரது மாணாக்கர்களாகவும் இருந்துள்ளனர் என்பதையும் காணமுடிகின்றது. கலைஞராகவும் ஆசிரியராகவும் இருப்பதின் மகிழ்ச்சியை நேற்று முழுவதும் அனுபவித்திருக்கக் கூடும். வாழிய கலைஞர் சந்ரு. வாழ்த்துகள் 

மழலையர் பள்ளிகளும் குறைகூலித் தொழிலாளிகளும்

புதிய கல்விக்கொள்கை விருப்பத்தேர்வாக இருந்த மழலையர் வகுப்புகளைக் கட்டாயக் கல்வியின் பகுதியாகப் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையின் பின்னால் உள்நோக்கங்கள் இல்லை என வாதிடுபவர்களுக்கு உள்நோக்கம் இருக்கிறது. குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் வழியாக மூன்று வயதிலேயே வேதங்களைப் பாராயணம் செய்யவும், சுலோகங்களை மனனம் செய்யவும் பழக்கப்படுத்தும் குடும்பச்சூழலை மட்டுமே அறிந்தவர்களின் முன்வைப்பு இது. இதே முறையைப் பின்பற்றித் தேவாரப் பதிகங்களையும் ஆழ்வார் பாசுரங்களையும் மனனம் செய்யும் குடும்பங்களும் உண்டு. இவ்விரண்டு போக்கிலிருந்து விலகித் தினம் 10 குறள் என மனனம் செய்யும் திணிப்பைத் திறன் வளர்க்கும் கல்வியாகச் செய்துகொண்டிருக்கும் வீட்டுக் கல்வி இந்தியாவில்/தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருக்கிறது. சிறப்பான வாழ்க்கைமுறை வாய்ப்புகளைக் கொண்ட குடும்பங்களின் நடைமுறை. இந்த நடைமுறையைப் பொதுக்கல்வியின் பரப்புக்குள் கொண்டுவருவதின் நோக்கம் என்னவாக இருக்கும்? குழந்தமைப் பருவத்திலேயே தனது இயலாமையை உணர்ந்து பின்வாங்கும் கூட்டத்தை உற்பத்தி செய்யும் தந்திரம் இது எனச் சொலவது குற்றச்சாட்டல்ல. நிகழப்போகும் நடைமுற

தனித்தலையும் பெண்கள் : கலைச்செல்வியின் இரவு

படம்
பெண்ணின் எதிர்நிலை ஆண்.பெண்ணும் ஆணும் இரண்டும் பால்சுட்டும் பொதுப் பெயர்கள். பால் சுட்டும் பொதுப்பெயர்கள் பாத்திரத்தின் பெயராக மாறும்போது எதிர்ப்பாலுக்கான பாத்திரம் ஒன்றை மொழி உருவாக்கிக் கொள்கிறது. சில பாத்திரங்களுக்குப் பொதுச்சொற்களே போதும் என்றும் மொழி கருதுகிறது. குழந்தை என்ற சொல் பாலடையாளம் இல்லாத பொதுச்சொல். ஆனால் சிறுமியும் சிறுவனும் பாலடையாளங்கள் கொண்ட சொற்கள். தமிழ் மொழியில் பெண்பால் விகுதிகள் எனவும் ஆண்பால் விகுதிகள் எனவும் சொல்லின் இறுதி நிலைகள் இருக்கின்றன. அவ்விறுதிநிலைகளைக் கொண்டு தமிழின் பெயர்ச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன.

உள்ளே மட்டுமில்லை அர்த்தங்கள்- இமையமும் புதியமாதவியும்

இமையத்தின் பணியாரக்காரம்மா கடந்த உயிர்மையில் இமையம் எழுதியுள்ள பணியாரக்காரம்மா கதையை வாசித்து முடித்தவுடன் இந்தக் கதையின் விவாதம் பிரதிக்கு வெளியே இருப்பதாகத் தோன்றியது. எனக்குத் தோன்றியது போலவே அக்கதையை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும் என்று சொல்வதற்கில்லை. அப்படித் தோன்றாத வகையிலே தனது எழுத்துத் திறனை முழுமையாக இமையம் காட்டியுள்ளார். ஆனாலும் இந்திய மனிதர்களை அவர் எழுதுவதால், அவர்களின் இயங்குதளம் – இந்தியச்சாதி அமைப்பின் இயங்குமுறையின் வீரியத்தால் கதையின் விவாதம் கதைக்கு வெளியே இருப்பதாகத் தோன்றும்படி சில வரிகள் வந்து விழுந்துவிட்டன. 

நெறியாளரும் ஆய்வாளரும்

எனது நெறியாளர்  2003-இல் நான் பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் எம்ஃபில் படித்துக் கொண்டிருந்தபோது, ஆய்வுக்காக நாடகம் தொடர்பான குறிப்புகளைத் தேடிக்கொண்டிருந்தேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இருந்த ராமசாமி சாரைப் பற்றிக் கேள்விப்பட்டு, கே.டி.சி. நகரிலுள்ள அவர் வீட்டிற்குச் சென்றேன். நாடகம் தொடர்பான பரந்த அறிவைப் பெற வேண்டுமென்று ‘வெளி’ பிரதிகளைத் தந்தார். நாடகத்திற்காக வந்த இதழ் ‘வெளி’. 

ஆசிரியரும் மாணவர்களும்

என் குருவும் நானும்- நீண்ட நாள் மாணவி சாராள் தக்கர் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் படித்த நான், 2001 ஜூன் மாதம் நான் முதுநிலை தமிழ் சேருவதற்காக என் தந்தையுடன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சென்றேன்.. சான்றிதழ்களை நகல் எடுக்க அந்த செராக்ஸ் கடைக்கு முன்னால் காத்திருந்தேன். அதன் பக்கத்தில் தான் தமிழ்த்துறை அலுவலகம்.