அமெரிக்காவில் பணிவாய்ப்புக் குடிநுழைவுகள் - சில திருப்பங்கள்

அமெரிக்க அதிபராகத் திரு டொனால்ட் ட்ரம்பைத் திரும்பவும் தேர்ந்தெடுத்தபோது அமெரிக்கா தனது ஜனநாயக முகத்தைக் கழற்றிக்கொள்ளத் தொடங்கியிருப்பதாகப் பலரும் சொன்னார்கள். ஆனால் அண்மைக்காலத்தில் உலகெங்கும் உருவாகிவரும் "மண்ணின் மைந்தர்கள் அரசியலின் விளைவு" என்றே நினைக்கத்தோன்றியது. சொந்த நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தும் நோக்கத்தைத் தவறாகச் சொல்லமுடியாது என்ற மனநிலை உலகெங்கும் தோன்றியுள்ளது. இதன் தொடர்ச்சியில் தான் அமெரிக்க அதிபரின் வரிவிதிப்புக் கொள்கைகளையும் குடிநுழைவுக் கட்டுப்பாடுகளையும் பார்க்கவேண்டும்.