இடுகைகள்

ஏற்பின் விளைவுகள்

 எ னது திறனாய்வுப்பார்வை எழுத்தின் அடிப்படைக்கட்டுமானங்கள் - காலமும் இடமும் கருப்பொருளும் உரிப்பொருளுமான - மூன்றின் இயைபுப் பொருத்தம் குறித்து முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தொல்காப்பிய இலக்கியவியல் கற்றுத்தந்துள்ள பாடம். இந்த இயைபுப் பொருத்தத்தையே காலம், இடம், பாத்திரங்களின் வினை ஆகியவற்றின் ஓர்மை (Unity of Time, Space and Action)யென அரிஸ்டாடிலும் சொல்கிறது என்பதும் நான் கற்றுத்தேர்ந்த திறனாய்வு அறிவே.

சுரேஷ்குமார் இந்திரஜித்தின் நுண்கதைகள்

படம்
சிறுகதை வடிவத்திலிருந்து நுண்கதை வடிவத்தின் முதன்மையான வேறுபாடு, வெளியையை எழுதுவதில் இருப்பதாகத் தோன்றுகிறது. கதாபாத்திரங்கள் உலவும் புனைவு வெளியை விரிவாக எழுதுவதற்கு நுண்கதை வடிவத்தில் வாய்ப்பில்லை. ஒன்று அல்லது இரண்டு பாத்திரங்களைக் கதைக்குள் உலவிவிட்டு, அவர்களிடையே ஏற்படும் முரணுக்குப்பின்னால் எழும் மனப்போராட்டங்களையும் உளவியல் சிக்கலையும் எழுதுவதற்கு ஏற்ற வடிவமாக நுண்கதைகள் இருப்பதைத் தொடர்ந்த வாசிப்பில் உணரமுடிகிறது.

கோடைகாலம் - நினைவுகள்

படம்
போன வருடத்தை விட இந்த வருட வெயில் கூடுதல் - ஒவ்வொரு வருடக் கத்திரி வெயிலின் போதும் இந்த வாக்கியத்தை யாராவது சொல்லக் கேட்டிருக்கிறேன்.

துன்பியலும் அபத்தமும் கலந்த கலவை: இமையத்தின் இப்போது உயிரோடிருக்கிறேன்.

படம்
துன்பியல் முடிவுகளைச் சந்திக்கும் பாத்திர உருவாக்கம் எப்போதும் இலக்கியத்தின் சக்தி வாய்ந்த வெளிப்பாடாக இருந்து வருகிறது. துன்பியல் முடிவைத் தவிர்க்கும் வாய்ப்புகளைக் காட்டத் தவறியதற்காக அந்தப் பாத்திரத்தைத் சுற்றி வாழ்ந்த மனிதர்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் குற்றச்சாட்டுகளை வைப்பதின் வழியாகவே திறன்வாய்ந்த எழுத்தின் – எழுத்தாளரின்- தனித்துவம் உருவாகிறது. ஒரு பாத்திரம் தானே தெரிவுசெய்த வாழ்க்கைமுறையின் காரணமாக ஆகப்பெரும் துன்பியல் முடிவைச் சந்திக்க நேர்ந்தது என்பதைத் தனது பனுவலில் முன்வைக்கும் எழுத்தாளர்கூட, தன்னையும் உள்ளடக்கிய சமூகத்தைக் குற்றவுணர்வுக்குள் நிறுத்தி விவாதிக்கும் சாத்தியங்களைத் தவறவிடுவதில்லை. உலக இலக்கியத்தில் கொண்டாடப்படும் இலக்கியப்பனுவல்களைக் கவனித்தால் இந்தக்கூற்றின் உண்மை புரியவரலாம்.

உலகக்கவிதை நாள் -2022

உலகக் கவிதை நாளுக்காக ஒவ்வொரு வருடமும் நான் வாசித்த/ பிடித்த/ அறிமுகம் செய்ய நினைக்கும் கவிதைகளை முகநூலில் பகிர்வதுண்டு. இந்த ஆண்டும் மார்ச் 15 கவிதைகளுக்கான நாளில் 15 பேருடைய கவிதைகளைப் பகிர்ந்தேன். இந்தப் பதினைந்துக்குள் சம அளவில் பெண்களின் கவிதைகள் இடம்பெற வேண்டும் என நினைத்தேன். அதேபோல் இன்றைய தமிழ்க்கவிதைகள் என்பன வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் வெளிக்குள் மட்டும் எழுதப்படுவன அல்ல. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களால் எழுதப்படுபவை. இப்பதினைந்து கவிதைக்குள் அந்தப் பரப்பும் கவனத்தில் கொள்ளப்பட்டன. தனித்தனியாக வாசித்த இந்தக் கவிதைகளை மொத்தமாக வாசிக்கலாம். அப்படி வாசிக்கும்போது வெவ்வேறு போக்குகள் தமிழ்க் கவிதைக்குள் இருப்பதை உணரமுடியும்.

உக்ரைன்: போர்களும் போர்களின் நிமித்தங்களும்

எது முந்தியது....கோழியா, முட்டையா?  கதைதான். நடப்பது  உக்ரைன் - ரஷ்யப் போரா? ரஷ்யா - உக்ரைன் போரா? ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை முன்வைத்து மாற்றிச் சொல்லலாம்.

இணக்க அரசியல் -இரண்டு குறிப்புகள்

இணக்க அரசியல் என்பதை விட்டுக்கொடுத்தல் எனப்புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. ஆனால் எதிரில் இருப்பவர்கள் யார் என்பதுதான் ஒரு நிலைப்பாட்டின் வரையறையை உருவாக்குகிறது.