இடுகைகள்

ஒரு வாழ்க்கை: இரண்டு புனைவுகள்

படம்
தமிழக முதல்வர்களில் திரு.எம்.ஜி.ராமச்சந்திரனின் வாழ்க்கைக்கும் அவரது பாதையைத் தொடர்ந்த செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கைக்கும் பல ஒற்றுகைகள் உண்டு. இருவரின் வாழ்நாட்கள் மட்டுமல்லாமல், மரணங்களுமே சந்தேகங்களும் மூடுண்ட ரகசியங்களும் நிறைந்தவை. அவர்கள் உயிருடன் இருக்கும்போது வெளிப்படாத வாழ்க்கை நிகழ்வுகள் மரணத்திற்குப் பின்னர் எழுதப்பட்டன; சொல்லப்படுகின்றன. திரைப்படங்களாக எடுக்கப்படுகின்றன. ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை ஒரு மாதத்திற்கு தலைவி என்ற பெயரில் இணையதளப்பரப்பில் (அமேசான் பிரைம்) வெளியிடப்பெற்றுப் பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. அதற்கும் முன்பு 2019 இல் இன்னொரு இணையதளப்பரப்பில் (எம்எக்ஸ் பிளேயர்) குயின் என்ற பெயரில் ஒரு தொடராக அவரது கதை வந்த து. 11 பகுதிகளைக் கொண்ட அத்தொடர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பார்க்கக்கிடைத்துத் தலைவியைவிடப் பலமடங்குப் பார்வையாளர்களை ஈர்த்தது. வாக்கு அரசியலில் வெளிப்படைத்தன்மை எதிர்பார்க்கப்படும் ஒன்று. சிறுவயது முதலே அரசியல் இயக்கத்தோடு இணைந்த சொந்த வாழ்க்கையைக் கொண்டிருந்த தலைவர்களைத் தமிழக முதல்வர்களாகத் தெரிவு செய்த தமிழ்நாட்டு வாக்காளர...

வேதாகமத்தின் வாசனை வீசும் கவிச்சொற்கள்

தமிழ்க்கவிதை மரபில் செவ்வியல் அகக்கவிதைகளுக்கு நீண்ட தொடர்ச்சியும் நீட்சியும் உண்டு. அத்தொடர்ச்சியை உரிப்பொருள் சார்ந்த நீட்சி எனவும், வடிவம் சார்ந்த நீட்சி என்றும் அடையாளப்படுத்தலாம். அன்பின் ஐந்திணைகளான முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்பனவற்றின் உரிப்பொருட்களான இருத்தல், ஊடல், புணர்ச்சி, இரங்கல், பிரிவு என்பனவற்றிற்கு அதிகம் தொடர்ச்சி உண்டு. அதனை இங்கே விரிவாகச் சொல்ல வேண்டியதில்லை. ஏனென்றால் அந்த நீட்சியை மைக்கல் கொலினின், “இவனைச் சிலுவையில் அறையுங்கள்” எனத் தலைப்பிட்ட கவிதைத் தொகுதியில் காணமுடியவில்லை. அதற்கு மாறாக அகக்கவிதையின் வடிவத் தொடர்ச்சியின் நீட்சியாக அவரது கவிதைகள் அமைந்துள்ளன. அப்படியான ஒரு தொனி ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும்போது என்னை வந்து மோதுவதை உணர்ந்துகொண்டே இருக்க முடிந்தது.

பிரமிளா பிரதீபன் கதைகள் -ஒரு வாசிப்புக்குறிப்பு

  கடந்த கால் நூற்றாண்டுக்கால இலங்கைத் தமிழ் இலக்கியத்தைப் போரின் பின்னணியிலேயே வாசித்துப் புரிந்து கொண்டிருக்கிறது தமிழக வாசகப்பரப்பு. ஆனால் எனது வாசிப்பின் தொடக்கம் அப்படியானதல்ல. காத்திறமான இலக்கிய வரலாற்றுப்பார்வைக்காகவும் இலக்கியத் திறனாய்வுக்காகவும் இலங்கையின் ஆளுமைகளை வாசித்த தொடக்கம் என்னுடையது. அத்தோடு கே.டானியலின் புனைகதைகளும் ஜீவாவின் மல்லிகையும் எனது தொடக்கநிலை வாசிப்புக்குள் இருந்தன.

எழுத்தில் வரையப்பட்ட சித்திரங்கள்

கலை இலக்கியங்களின் முதன்மை வெளிப்பாடு ‘போலச்செய்தல்’ என்னும் பிரதியாக்கத்தை நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. அவற்றின் நோக்கத்திற்கும் அடிப்படைக்கூறுகளின் கலவைக்கும் ஏற்பக் கலை, இலக்கிய வடிவங்களும் வகைகளும் மாறுபடுகின்றன. எழுத்துக்கலைகளைத் தனது வெளிப்பாட்டுக்கருவியாகக் கைக்கொள்ளும் ஒருவர் அவரது எழுத்தில் மனிதர்களைப் பிரதியாக்கம் செய்வதை முதன்மை நோக்கமாக கொள்கிறார் என்றாலும், எல்லா வடிவத்திலும் அதுதான் முதன்மையாக இருப்பதில்லை. கவிதையில் மனித உணர்வுகளையும் நாடகத்தில் மனிதர்களின் முரண்நிலையையும் கதைகளில் நேரடியாக மனிதர்களின் மொத்த அடையாளங்களையும் காட்டிவிட முடிகிறது. கதைகளிலும் கூட, எந்த உணர்வுகளைத் தூக்கலாக நிறுத்திக்காட்டலாம் என்பதன் வழியாகவும், வாசிப்பவர்களிடம் எதனைக் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என்று தீர்மானிப்பதன் மூலமும் கதைகளின் வகைப்பாடுகளைச் சுட்ட முடியும்.

மதுரையை எழுதும் எழுத்து

  முப்பது ஆண்டுகளுக்கு முன் மதுரையைவிட்டு வெளியேறி புதுச்சேரி, நெல்லை, வார்சா, பாளையங்கோட்டையென்ச் சுற்றிவிட்டுத் திரும்பவும் மதுரைக்கருகில் இருக்கும் திருமங்கலத்திற்குக் குடிவந்துவிடலாம் முடிவுசெய்தேன். அதனால்   இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையின் இலக்கிய நிகழ்வுகள் பற்றிய தேடல்கள் தொடங்கின. அத்தேடலில் புதிதாக எழுத வந்திருக்கும் மதுரைக்காரர்களின் இலக்கியப்பனுவல்களைப் பத்திரிகைகளிலும் இணையப் பக்கங்களிலும் வாசிக்கத் தொடங்கினேன்.

மிதக்கும் வெளிகளை எழுதுதல்: நவீன கவிதையின் இரண்டு புதுமுகங்கள்

படம்
இலக்கிய உருவாக்கம் பற்றிப் பேசும் இலக்கியவியல் நூல்கள் முன்வைக்கும் அடிப்படை விதிகள் சில உள்ளன. காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் இலக்கியத்திற்குரிய பொதுக்கூறுகளாக முன்வைக்கின்றன. அம்மூன்றையும் ஓர்மைப்படுத்தி இணைப்பதின் வழியாக இலக்கிய வடிவங்கள் பொதுத்தன்மையோடு உருவாகின்றன. அவ்விலக்கிய வடிவங்களின் வெளிப்பாட்டுப் பாங்கும் அதன் வழி உருவாகும்/உருவாக்கும் மனநிலை சார்ந்து வடிவங்களின் சிறப்புநிலைகள் கவனம் பெறுகின்றன.

தலைவி : இரக்கங்களையும் ஏற்புகளையும் நோக்கி.....

படம்
நம்முன்னே நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்த்து விளங்கிக் கொள்ளவேண்டும். அதனதன் சூழலில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த அடிப்படையிலேயே நிகழ்வில் இடம்பெறும் பாத்திரங்களுக்கு / மனிதர்களுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலையை வழங்க வேண்டும் என்று சொல்வது நிதானமான பார்வை. வளர்ந்த சமூகத்து மனிதர்கள் அப்படியே நடந்துகொள்கிறார்கள். ஆனால் தமிழர்கள் அப்படி நடந்துகொள்வதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இப்படிக் குற்றம் சாட்டுபவர்கள் அப்படி இருக்கிறார்களா? என்பதைத் தனியாகக் கேட்டுக்கொள்ளலாம்.