இடுகைகள்

எஸ்.ரா.வின் ஞாபகக்கல்: நல்லதொரு உருவகக்கதை

படம்
எஸ்.ராமகிருஷ்ணனின் ஞாபகக்கல், பெண்ணென்னும் பொதுப்பெயருக்குரியவளாக இருக்கும் வரை அவளுக்குள்ளிருக்கும் விருப்பங்கள், ஆசைகள், கனவுகள் எல்லாம் குடும்பத்தின் பாத்திரம் ஒன்றைத் தாங்கும்போது தொலைந்துபோகும் மாயத்தை உருவகமாக முன்வைத்துள்ளது. ஆண் முதன்மைக்குடும்ப அமைப்பில் பெண்களின் விருப்பங்களைத் தொலைத்துக்கட்டும் பாத்திரங்களாக மனைவி, அம்மா போன்ற பாத்திரங்கள் இருப்பதைக் கதை விவரிப்பின் மூலம் உணர்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

இந்தியக் கிரிக்கெட்: விளையாட்டு -தேர்தல் அரசியல் – அதிகாரம்

படம்
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான நல்லதொரு அணியுடன் இந்தியா வந்துள்ளது தென்னாப்பிரிக்கா. டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகச் சாம்பியன் என்ற தகுதியும் அதற்கு உள்ளது. அதைத் தக்கவைக்கும் முயற்சியுடன் தனது அணியைத் தயார் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவுடனான 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை வென்று திரும்பவும் நிரூபிக்கும் வாய்ப்பைத் தவறவிடாது என்பதை முதல் டெஸ்டின் ஆட்டப்போக்கில் கோடி காட்டியது.

வினையும் எதிர்வினையும்

படம்
நடிகர் விஜயை எதிர்கொள்ளுதல் திராவிட முன்னேற்றக்கழகம் தனது எதிரிக்கட்சியாக அஇஅதிமுகவை முன்வைத்து அரசியல் நகர்வுகளைச் செய்வதே சரியானது. அப்படித்தான் அதன் பொறுப்பாளர்கள் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் அதன் ஆதரவாளர்களும் கருத்தியல் முன்வைப்பாளர்களும் அப்படி நகர்வதில்லை. 

ஈரோடு தமிழன்பனை நினைத்துக் கொள்கிறேன்

படம்
  இலக்கிய மாணவனாகக் கல்வித்திட்டத்திலும் பாடத்திட்டத்திலும் கற்கவேண்டிய கவிதைப்போக்குகள், அவற்றில் முதன்மையான கவி ஆளுமைகள், அவர்களின் கருத்துலகம், அதனை வெளிப்படுத்தும் வெளிப்பாட்டு முறை சார்ந்த வடிவங்கள், சொல்முறைமைகள், இலக்கிய வரலாற்றிலும் வாசிப்புத்தளத்திலும் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் எனச் சில அடிப்படைகள் உண்டு. இலக்கியக்கல்வியைத் தேர்வு செய்த நான் , மாணவப்பருவத்திலேயே இந்த அடிப்படைகளைப் புரிந்துகொண்டவனாக இருந்தேன். அதன் தொடர்ச்சியில் இலக்கியங்களைக் குறிப்பாகச் சமகால இலக்கியங்களைக் கற்பிப்பவனாக இருந்தவன் என்பதால் கூடுதலாக மதிப்பீடுகளையும் உருவாக்கிக் கொண்டிருந்தேன்.

ஜெயமோகனுக்கு வாழ்த்து

படம்
 தமிழகத்தின் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆளுமைகளுக்குத் தங்கள் பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டங்களை வழங்குகின்றன. பெரும்பாலும் தொழில் அதிபர்கள், திரைத்துறைப் பிரபலங்களுக்கு வழங்கும் அத்தகைய பட்டங்களின் நோக்கம் அந்நிறுவனங்களின் வணிக நோக்கத்தோடு தொடர்புடையன.