இடுகைகள்

தமிழில் திரை விமர்சனம்

படம்
ஒரு சினிமா வெளிவந்து முதல் காட்சி முடிவதற்கு முன்பே சில நூறு விமரிசனக்குறிப்புகள் வந்துவிழும் காலத்தில் இருக்கிறோம். சமூக ஊடகங்களின் வரவால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தில் தமிழ்ச் சினிமா உலகம் -சினிமாவைத் தொழிலாக நம்பியிருக்கும் தொழிலாளர்களும் வணிகர்களும் பெரிதாகப் பாதிக்கப்படுகிறார்கள் எனப் பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சிறுகதை -ஒரு வலைத்தொடர் -ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி

மறுவிளக்கம் என்னும் புத்தாக்கம்: இமையத்தின் இன்னொரு நகர்வு இம்மாத உயிர்மையில் 'தண்டகாரு(ர)ண்யத்தில் சீதை' (காருண்யம் அல்ல; காரண்யம் என்பதே சரியான சொல்) என்றொரு சிறுகதை அச்சாகியுள்ளது; எழுதியுள்ளவர் இமையம். தலைப்பில் சீதை என்னும் இதிகாசப்பாத்திரத்தின் பெயரைச் சூட்டியதின் வழியாக அவரது புனைவாக்கத்தில் புதிய தடமொன்றின் முதல் கதையாக அமைந்துள்ளது இந்தக் கதை . அவர் எழுதிய சிறுகதைகளைப் பெரும்பாலும் வாசித்திருக்கிறேன். இதைத்தான் அவரது முதல் மறுவிளக்கக்கதையாக வாசிக்கிறேன். தொடர்ந்து தனது சிறுகதைகளுக்கான பாத்திரங்களைச் சமகால வாழ்க்கையிலிருந்து தெரிவு செய்து எழுதுபவர். இந்தக் கதையில் அதிலிருந்து விலகி, இதிகாச நிகழ்வொன்றை மறுவிளக்கம் செய்துள்ளார்.மரபான ராமாயணங்களில் கணவனின் கால்தடம்பற்றி நடக்கும் சீதையை விவாதிக்கும் பெண்ணாக எழுதிக்காட்டியுள்ளார். அந்த விவாதங்களில் தனது கணவன் ராமனிடம் பல வினாக்களை எழுப்புகிறாள்;விடைகள் சொல்லாமல் ஒதுங்கிப்போனாலும் விடாமல் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறாள்; தனது சிந்தனையைத் தனது கருத்தாக முன்வைக்கிறாள். “ராமன் என்பதும் ராமனுக்கான அதிகாரம் என்பதும் அவனுடைய கையிலிரு...

முழுமையைத் தேடியுள்ள வலைத்திரை

படம்
மொத்தம் 10 பகுதிகளைக் கொண்ட ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ யை வெளியீடு கண்ட ஏப்ரல் மாதத்தில் ஒருமுறை பார்த்தேன். எனது அயல்நாட்டுப் பயணம் காரணமாக எழுத முடியாமல் போய்விட்டது. ஆனால் நடிப்புக்கலைக்கும் கருத்துநிலைக்கும் முக்கியத்துவம் தந்த ஒரு தொடர்பற்றி ஒரு விமரிசனக்குறிப்பொன்றை எழுதாமல் விட்டதில் மனக்குறை இருந்தது. அதனால் திரும்பவும் பார்த்தபின்பே எழுதுகிறேன். 

இலக்கிய ஆய்வுகளும் சமுதாய அறிவியலும்

படம்
இன்று தமிழ் ஆய்வுகள், தமிழியல் ஆய்வுகளாகக் கல்வி நிறுவனங் களுக்குள் மாறிவிட்டன.புதிதாகத் தொடங்கப்படும் ஒரு பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை, தமிழியல் துறையாக அமைக்கப்பட வேண்டும் என வல்லுநர் குழுக்கள் பரிந்துரைக்கின்றன. பல்கலைக் கழகத்திற்கு வெளியே செயல்படும் தமிழ் சார்ந்த உயராய்வு நிறுவனங்களும் தமிழியல் ஆய்வு நிறுவனங்களாகவே செயல்படுகின்றன.

நம்பிக்கைகள், தொன்மங்கள், வரலாறுகள் – புனைவுகளாக்கப்படும் போது

படம்
அண்மையில் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது நினைவில் வரவில்லை. ஆனால் பார்த்து முடித்தவுடன் திரும்பத் திரும்ப நினைவில் வந்ததைத் தள்ளவும் முடியவில்லை. பார்த்து முடித்த படம் ஏ.ஆர்.முருகதாஸ், உதயநிதி ஸ்டாலின், சூர்யா கூட்டணியில் வந்த 7-ஆம் அறிவு. நினைவுக்கு வந்த படம்  நடிகர் நாசரின் இயக்கத்தில் வந்த தேவதை.