நீயா நானாவில் அன்னா ஹசாரேயும் நானும்
விஜய் தொலைக்காட்சியின் நீயா நானாவில் தொழில் நுட்பக் கல்வி X சமூக அறிவியல் கல்வி என்ற தலைப்பிலான விவாதத்தின் விருந்தினராக அழைக்கப்பட்ட நான் அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதாவைப் பற்றிய விவாதத்திலும் கலந்து கொள்ள நேர்ந்ததைத் தற்செயல் நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். என்னைப் போலவே அந்த நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்திருந்த கிழக்குப் பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரியும் அன்னா ஹசாரே பற்றிய விவாதத்திலும் கலந்து கொண்டார்.