முகநூலில் எழுதிய இந்தக் குறிப்புகள் புத்தகம் வாங்கிப் படிக்க நினைப்பவர்களுக்கு உதவும். தேடும்போது பெயர்கள் நினைவில் வரும் அல்லவா?
கவிதைகள்
முன்பு இதழ்களில் வரும் கவிதைகளை வாசித்து வாசித்து கவிகள் பற்றிய மதிப்பீடு உருவாகிவரும். அம்மதிப்பீட்டை ஒட்டிப் பின்னர் தொகுதிகள் வரும்போது வாங்கலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்வேன். இப்போது அந்த இடத்தை முகநூலின் பங்கும் முடிவு செய்கிறது. இதழ்களில் வரும் கவிதைகளைத் தாண்டி முகநூல் கவிதைகளும் வாங்கிப் படிக்கவேண்டிய கவிகளின் பட்டியலை உருவாக்குகின்றன
இந்தப் புத்தகக் காட்சியில் ஏற்கெனவே பெருங்கவிகளாக வலம்வரும் கவிகளின் பெருந்தொகுதிகளும் புதிய தொகுதிகளும் வருவதாக விளம்பரங்கள் காட்டுகின்றன. கவிதை வாசிப்பில் ஆர்வமும் விருப்பமும் இருப்பவர்கள் பின்வரும் பெருங்கவிகளின் தொகுப்புகளையும் புதிய தொகுப்புகளையும் வாங்கலாம்
1. யவனிகா ஸ்ரீராம்
2. ரியாஸ் குரானா/இலங்கை
3.சுகுமாரன்
4.மனுஷ்யபுத்திரன்
5.கருணாகரன்/ இலங்கை
6. சுகிர்தராணி
7.இளங்கோ கிருஷ்ணன்
இவர்கள் அல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளில் வாசித்துப் பிடித்துப் போன கவிகளென ஒரு பட்டியல் உண்டு. சிலரது கவிதைகள் குறித்து எனது வலைப்பூவில் கட்டுரைகள் உள்ளன.
1.மின்ஹா - நாங்கூழ், கடல், காற்று, கங்குல் - இலங்கை
2. மா.காளிதாஸ் - பெருஞ்சொல்லின் குடல்,
3 ஸ்டாலின் சரவணன் - ரொட்டிகளை விளைவிப்பவன்
4. அ.ரோஸ்லின் - வாழைக்குலைக்கும் பிரபஞ்சம்
5. பெரு .விஷ்ணுகுமார் - ழ என்ற பாதையில் நடப்பவன்
6. அம்பிகா குமரன் - காலம்
7. ஜிதேந்திரன் - கல்சூடாக இருக்கிறது
8. ரூபன் சிவராஜா- எழுதிக் கடக்கின்ற தூரம் (புலம்பெயர்)
9. சுகன்யா ஞானசூரியின் நாடிலி (அகதி/ இந்தியா)
10 தில்லை- விடாய்/இலங்கை
11.தேவசீமா- வைன் என்பது குறியீடல்ல:
12. கண்ணம்மா -சன்னத்தூறல்
13 கவிதா லட்சுமி- சிகண்டி/ நார்வே
14 லறீனா- ஷேக்ஸ்பியரின் காதலி/ இலங்கை
15. இன்பா -கீச்சொலிகள்-சிங்கப்பூர்
16. ஸ்ரீவள்ளி -பொல்லாத மைனாக்கள்
17அம்பிகா வர்ஷினி -இந்த இரவு ஒரு சிறிய நூலகம்
18 ஆ.திராவிடமணி-கௌதமருக்காகக் காத்திருக்கிறேன்
19 ரியாலாஸ் -யசோதரையின் வீடு / இலங்கை
20.மைக்கல் கொலின்-இவனைச் சிலுவையில் அறையுங்கள் -இலங்கை
நாவல் இலக்கியம்
தமிழ் இலக்கியம் உலகத் தமிழ் இலக்கியமாக விரிவடைந்துகொண்டிருக்கிறது என்பதைப் பேசும் நோக்கத்தோடு கடந்த இரண்டு ஆண்டுகளில் வாசித்த இந்த நாவல்களில் பலவும் புலம்பெயர்ந்த / ஈழத்தமிழ் நாவல்கள். நீங்களும் வாசிக்கலாம் என்று பரிந்துரை செய்கிறேன். சிலவற்றைப் பற்றி எழுதியிருக்கிறேன்.
1.தாமரைச் செல்வி - உயிர்வாசம் (அவுஸ்திரேலியப் பின்னணி)
2. ஈழவாணி -கொச்சிக்கடா ( இந்தியப்பின்னணி)
3.ஏதிலி - அ.சி.விஜிதரன்(இந்தியப்பின்னணி
4. குமிழி - ரவி (இந்தியப்பின்னணி
5. சயந்தன் - அஷோரா
6..ஷோபா சக்தி - இக்சா (போர்க்காலம்)
7. கோ.புண்ணியவான் - கையறு ( மலேசியா/ இரண்டாம் உலகப்போர் பின்னணி)
8.ஆசி.கந்தராசா - ஒரு அகதியின் பேர்ளின் வாசல் (ஜெர்மனி/ போருக்கு முன்னும் போர்க்காலத்திலும்)
9.நாகரத்தினம் கிருஷ்ணா -சைகோன் புதுச்சேரி -( வியட்நாம்)
*************
இவை தவிர வாசித்த தமிழ்நாட்டு நாவல்கள்:
1.எஸ்.ராமகிருஷ்ணன் - சஞ்சாரம்
2.இமையம் - இன்னும் உயிரோடிருக்கிறேன், வாழ்க! வாழ்க!!
3.சரவணன் சந்திரன் - அத்தாரோ
4.அல்லி பாத்திமா - பாண்டிச்சி
5. சோ.தர்மன் -பதிமூனாவது மையவாடி
6.சுகுமாரன் - பெருவலி
சிறுகதைகள்
இதழ்களில் வரும்போது வாசிப்பதின் வழியாகவே எனக்குள் சிறுகதைக்காரர்களின் அடையாளம் உருவாகியிருக்கிறது. சில நேரங்களில் போட்டிகளின் நடுவர்களில் ஒருவர் என்பதின் வழியாகவும் வாசிக்கப்பட வேண்டிய சிறுகதை ஆசிரியர்கள் எனப்பரிந்துரைகள் செய்வதுண்டு. கடந்த மூன்று ஆண்டுகளில் அச்சிதழ்களைத் தாண்டி இணைய இதழ்கள் வழியாகப் புதிய எழுத்தாளர்களின் கதைகள் நிறைய வாசிக்கக் கிடைக்கின்றன. வாசித்த பலரது கதைகள் குறித்து அவ்வப்போது முகநூலிலும் வலைப்பூவிலும் எழுதியதுண்டு. அவர்களில் எத்தனைபேரின் தொகுதிகள் இந்தக் கண்காட்சியில் வந்துள்ளன என்று தெரியவில்லை. அதனால் எழுத்தாளர்களின் பெயர்களையே இங்கே தருகிறேன். அவர்களின் தொகுதிகள் வந்திருந்தால் வாங்கிப் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.
1. சரவண கார்த்திகேயன் - 10 -க்கும் மேற்பட்ட கதைகளை வாசித்துக் குறிப்புகள் வைத்துள்ளேன்
2. திருச்செந்தாழை -பெரும்பாலான இணைய இதழ்களில் இவரது கதைகள் தொடர்ச்சியாக வந்துள்ளன. வாசித்துள்ளேன்
3.சித்துராஜ் பொன்ராஜ் வித்தியாசமான பின்னணிகளில் ஆண்களையும் பெண்களையும் நிறுத்தி மனவுணர்களை எழுதிக்காட்டும் சிங்கப்பூர் எழுத்தாளர். 10 கதைகளுக்கும் மேல் வாசித்துள்ளேன்.
4.பிரமிளா பிரதீபன் - இவரது கதைகளுக்கு விரிவான முன்னுரை எழுதியுள்ளேன். பெண்களின் உணர்வுகள் இவரது கதைகளில் வெளிப்படும் விதம் அலாதியானது
5. பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் - முன்பே தொகுப்பு வந்துள்ளது.
6 ஹேமா- சிங்கப்பூர் எழுத்தாளர்களில் கவனிக்கத்தக்க சிறுகதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்
7.நவீன்.ம. - வல்லினம் இதழை நடத்துபவர். அண்மைக்காலச் சிறுகதைகள் முன்பிருந்த போக்கிலிருந்து மாறுபட்டு வெளிப்படுகிறார்
8.விஜயராவணன் - தொகுப்பு வந்துள்ளது. நடுவில் இவரது எழுத்துகளை வாசித்திருக்கிறேன் அகழில் வந்த கதை கவனிக்கப்பட்ட கதை
9. தமிழ்க்கவி -போர்க்கால நினைவுகளை எழுதும் இலங்கத் தமிழ் எழுத்தாளர்
10 தாட்சாயினி - போருக்குப் பின்னான இலங்கைவாழ்க்கையைப் பதிவுசெய்கிறார்
11.ஜெகன்னாதன் - கவனம்பெற்ற கதைகளை எழுதியிருக்கிறார். தொகுப்பு வந்துள்ளது
12.அனோஜன் பாலகிருஷ்ணன் -புலம்பெயர்
13தெய்வீகன் - புலம்பெயர்
14கலாமோகன் - புலம்பெயர்
புலம்பெயர் எழுத்தாளர்களில் கலாமோகனின் அனுபவங்கள் ஐரோப்பிய வாழ்க்கையின் குறுக்குவெட்டுத்தோற்றத்தை அகதியின் பார்வையில் தருவது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் தெய்வீகன் சிறுகதை வடிவத்தைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கிறார். போர்க்கால நினைவுகளிலிருந்து விலகவில்ல்லை. அனோஜனின் கதைகள் புலம்பெயர் இருப்பில் உருவாகும் தவிப்புகளைக் குறிப்பாக காமஞ்சார்ந்த தவிப்புகளை எழுதிக்காட்டியவராக அடையாளப்படுத்தியுள்ளன.
15. மயிலன் சின்னப்பன் -புதிதாக எழுதுகிறார். சமூக முரண்பாடுகளுக்குள் இருக்கும் மனிதர்கள் இவர்களது பாத்திரங்கள்
16. எம்.கே.மணி
17. சுஷில்குமார்
இவ்விருவரது கதைகள் அதிக எண்ணிக்கையில் வாசிக்கவில்லை. ஆனால் வாசிக்கவேண்டிய எழுத்தாளர்கள்
18 லாவண்யா சுந்தரராஜன்
19 அகிலா
20 கிருத்திகா
நிறையக் கதைகளை வாசித்திருக்கிறேன். வெவ்வேறு பொருண்மைகளில் எழுதுகிறார்கள். தனித்த அடையாளமாகச் சொல்லும்படியாக ஒன்றும் தோன்றவில்லை
21 அம்பிகா வர்ஷினி -மதுரையின் அடையாளம் கொண்ட எழுத்துக்காரர். ஒரு அணிந்துரை கொடுத்துள்ளே
கருத்துகள்