அடையாளம் அழிக்கும் புனைவு வெளி

இந்த ஐந்து கதைகளும் புத்தம் புதிதான கதைகள். 2015, நவம்பர் மாதத்தில் வந்த இதழ்களில் அச்சான கதைகள். கதைகளை எழுதியவர்கள் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களும்கூட. எழுதியனுப்பிவிட்டு அச்சேறுவதற்குக் காத்திருக்காமல் அனுப்பினால் உடனே அச்சாகும் வாய்ப்புள்ள எழுத்தாளர்கள். அதுதான் அவர்களை அறியப்பட்ட எழுத்தாளர்களாக ஆக்குகிறது. அறியப்பட்ட எழுத்தாளர் என்பது அவர்களின் எழுத்தின் வழியாக அறியப்பட்ட அடையாளமே. எப்படி அறிந்திருக்கிறோம் என்பதோடு அவர்களின் கதைகளின் விவரங்களை முதலில் தந்துவிடலாம். அறியப்பட்ட எழுத்தாளர்கள்: வாசிக்கக் கிடைத்த கதைகள்: அம்பை-தன்னுணர்வு கொண்ட பெண்ணியப் புனைவு எழுத்துகளின் தனிக் குரல் . அவரது கதை: தொண்டை புடைத்த காகம் ( இந்து தமிழ், பக் 190 -195) · ஆண்- பெண் உறவின் சிக்கலான புள்ளிகளை- பாலியல் சார்ந்த ஈர்ப்பினை லாவகமாக எழுதுவதில் தேர்ச்சி பெற்ற கை வண்ணதாசனின் கை. அவரது கதை: சற்றே விலகி, உயிர் எழுத்து, (பக்.44- 48) · சாதியமுரண் சார்ந்த கிராம வாழ்வில் தலித்துகளின், குறிப்பாகத் தலித் பெண்களின் துயரத்தையும் தணிந்து போய்விடாத தன்னம்பிக்கையையும் சிறுகதைகளாகத் தொடர்ந்து எழுதிவரு...