பயிலரங்கு அறிவிப்பு
தமிழியல் ஆய்வுகள் :
நிகழ்ந்துள்ளனவும் நிகழ்த்தப்படவேண்டியனவும்
தலைவர், தமிழியல்
துறை
மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி
-627012
---------------------------------------------------------------------------------
04-12-2015
எமது துறை அடுத்தமாதம்
மூன்று நாள் பயிலரங்கு ஒன்றினை நடத்திடத் திட்டமிட்டுள்ளது.
அப்பயிலரங்கில் தமிழியல் ஆய்வின் பல்வேறு பரிமாணங்கள் விவாதிக்கப்பட உள்ளன. ஆய்வேட்டின்
கட்டமைப்பு, ஆய்வு முறையியல், ஆய்வு அணுகுமுறைகள், தரவுகளின் பரிமாணங்கள் எனப் பலவற்றைக்
குறித்துத் தமிழின் மூத்த பேராசிரியர்களும் இளையதலைமுறை வழிகாட்டிகளும் பயிலரங்கப்
பயிற்றுநர்களாகக் கலந்துகொண்டு பயிற்சியளிக்க உள்ளனர்.
2016, ஜனவரி,
6,7,8 தேதிகளில் நடைபெறும் இப்பயிலரங்கில் தமிழியல்புல இளநிலை ஆய்வுப்பட்ட மாணவர்கள்,
முனைவர் பட்ட ஆய்வாளர்கள் ஆகியோருடன், இளைய
நெறியாளர்களும் கலந்துகொள்ளலாம். இம்மூவருக்கும் உதவும் வகையில் பயிலரங்கு திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 70 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முதலில்
வருபவர்களுக்கே முன்னுரிமை. உரிய தொகையுடன்
உங்களின் ஆய்வு தொடர்பான விவரங்களை அனுப்பினால் பயனுள்ளதாக அமையும்., உங்களின்
பங்கேற்பை உறுதிசெய்யக் கடைசி நாள்: 2015,
டிசம்பர், 24.
பங்கேற்க விரும்புபவர்கள்
தொடர்புகொள்ளவேண்டிய முகவரி:
பேரா.அ.ராமசாமி
தமிழியல்
துறை
மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி
-627012
ramasamytamil@gmail.com அலைபேசி:919442328168
குறிப்பு:
·
பயிலரங்கில்
மட்டும் கலந்துகொள்பவர்கள் மதிய உணவு, தேநீர், பயிலரங்கப் பொருட்களுக்காக ரூ.
300/ செலுத்திட வேண்டும்.
·
வெளியூரிலிருந்து
வந்து மூன்று நாட்களும் விடுதியில் தங்கிப் பங்கேற்பவர்கள் தங்கல், மற்றும் உணவுக்கான
வேண்டுகோளின்படி ஏற்பாடுசெய்து தரப்படும்.
(ஞா.
ஸ்டீபன்)
கருத்துகள்