இடுகைகள்

எதிர்பாராத சந்திப்புகளும் நிகழ்வுகளும் -அமெரிக்கா

படம்
மூன்றுமாதப் பயணம் என முடிவானபோது பெரும்பாலும் சந்திப்புகளும் நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டன. அமெரிக்காவில் ஜூன் மாதம் இருப்பது என்றும் ஜூலையில் கனடாவிற்குப் போய்விட்டுத் திரும்பவும் ஆகஸ்டு முதல் வாரம் திரும்பிவிடுவது என்றும் திட்டம். அமெரிக்காவில் இருக்கும் சில நண்பர்கள் இந்த ஆண்டும் பெட்னா நிகழ்வுக்கு வாருங்கள் என்றார்கள். ஆனால் 2016 நியூஜெர்சியில் நடந்தபோது கலந்துகொண்ட நிலையில் திரும்பவும் அழைப்புக் கிடைக்காது என்று அதே தேதியில் வேறு இடத்தில் குடும்பத்தினரின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

பரப்பிக் கிடக்கும் நூலகங்கள்

படம்
என்னைப்போலவே ஊர் சுற்றுவதில் ஆர்வமுள்ள நண்பர் ஒருவர் ‘ ஒரு ஊருக்குப் போய்த் தங்கவேண்டுமென்றால், முதலில் சென்று சில மணி நேரங்களை அருங்காட்சியகங்களில் செலவழிக்க வேண்டும்’ என்பார். ஆனால் நான் புதிய இடம் ஒன்றில் ஒரு வாரத்திற்கும் மேல் தங்க வேண்டும் என்றால், அந்த இடத்தில் திரை அரங்குகள் எங்கே இருக்கிறது? எனக் கேட்டுக்கொள்வதைப் போலவே, பத்திரிகைகள் விற்கும் கடை எங்கே இருக்கிறது? என்று தெரிந்துகொள்வேன். அதேபோல் பொது நூலகம் எங்குள்ளது என்றும் கேட்டுக்கொள்வது வழக்கம்.

பேரங்காடிகளும் சிற்றங்காடிகளும்

படம்
இந்திய நகரங்கள் பலவற்றில் இன்றும் கூட வீட்டுக்குப் பக்கமாக வரும் தள்ளுவண்டிகளையும்  பழவண்டிகளையும் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் தான் அதிகம். கோவை மாநகரத்தில் நான்கு தளக்கட்டடத்தில் குடியிருக்கும் எங்களுக்குத் தேவையான கீரை வகைகளையும் காய்கறிகளையும் வாரம் ஒருமுறை கொண்டுவரும் காய்கறி வண்டி ஒருமணி நேரம் நின்று விற்பனை செய்துவிட்டுத்தான் போகும்.   எனது பாண்டிச்சேரி வாழ்க்கையிலும் நெல்லை, மதுரை வாழ்க்கையிலும் பலசரக்குச் சாமான்களுக்கு மட்டுமே அங்காடிகள் செல்லும் வழக்கம் இருந்தது.  வீடுதேடி வரும் மீன்காரர்களிடம் வாங்கும் மீன்கள் பழைய மீன்களாக இருக்குமோ என்று அச்சமில்லாமல் வாங்கலாம். மீன் சந்தையில் விற்கும் மீன்கள் குளிர்சாதனப் பெட்டிகள் வைத்து எடுக்கும் வசதிகளோடு இருக்கும். ஆனால் மிதிவண்டியிலும் இருசக்கர வாகனத்திலும் வருபவர்கள் அன்றாடம் வாங்கி விற்பனை செய்பவர்கள்.  மேற்கு நாடுகளில் வீடு தேடிவரும் அங்காடிகள் என்ற எண்ணமே இல்லை, ஒவ்வொன்றுக்கும் தரம், பாதுகாப்பு ரசீதுபோடுதல் என்பது முக்கியம் என்பதால் அங்காடிகளுக்குப் போய் பொருட்கள் வாங்குவதே நடக்கிறது 

வேளாண்மை: இந்தியாவும் கனடாவும்

படம்
இந்திய விவசாயத்தின் பெருங்குறை நானொரு சிறுவிவசாயக்குடும்பத்திலிருந்து வந்தவன். எங்கள் விவசாயம் நஷ்டமான விவசாயமாக இருந்ததற்கு முதல் காரணம் விளைச்சலைச் சேமித்து வைக்கக் கொள்கலன் எதுவும் இருக்கவில்லை என்பதே. நான் ஆரம்பப்பள்ளியை முடித்தபோது வீட்டின் உறுப்பினர்கள் 10 பேர். பத்துப் பேரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட வீட்டில் இடம் இருந்ததில்லை. பெரும்பாலும் வீட்டிற்கு முன்னால் இருக்கும் திண்ணையிலும் தொம்பரைக் கற்களிலும் தான் அமர்ந்து சாப்பிடுவோம்.ஆனால் தோட்ட விவசாயமும் காட்டு விவசாயமும் இருந்தது. 60 மூடை நெல்லும் 25 மூடை நிலக்கடலையும் ஒரே நேரத்தில் அறுவடை செய்தார்கள். அதனை எல்லாம் களத்து மேட்டிலிருந்தே விற்பனைக்குக் கொண்டுபோவார்கள். அல்லது வியாபாரிகள் வந்து வாங்கிப் போய்விடுவார்கள்.

ஒட்டாவா என்னும் ஆற்றங்கரை நகரம்

படம்
ஒட்டாவா: இடையில் ஓடும் ஆறு நகர நாகரிகம் ஆற்றுப்படுகைகளில் உருவானதாக வரலாறு சொல்கிறது. இந்திய ஆறுகளின் பெருக்கத்தால் உருவான வேளாண்மைச்சமூகம் அதன் கரைகளில் பெருநகரங்களை உருவாக்கியிருப்பதைத் தமிழ்நாட்டில் பார்க்கிறோம். மதுரையின் கரையில் இப்போதிருக்கும் மதுரைக்கும் முன்னால் நதிக்கரையோர நகரமாகக் கீழடி இருந்திருக்கலாம் எனப் புதிய தொல்லியல் ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் புத்துலகங்களான அமெரிக்காவும் கனடாவும் ஓடும் ஆறுகளின் பெயர்களிலேயே நகரங்களை உருவாக்கியுள்ளன. அதிலும் வேளாண்மை நாடான கனடா ஆறுகளின் பெயரிலும் ஏரிகளின் பெயரிலும் பெருநகரங்களைக் கொண்டிருக்கிறது.

கனட்டாவில் முதல் வாரம்

படம்
நீளும் வாரக்கடைசிப் பயணமாக அமெரிக்காவின் 3 மாநிலங்களில் சுற்றி விட்டுக் கனடாவின் ஒட்டாவா நகருக்கு வந்தாகிவிட்டது. மூன்று நாட்கள் ஓய்வாக நகர்ந்துள்ளன. மகன் ராகுலனின் வீடிருக்கும் பகுதி கனாட்டா ஒட்டாவாவின் தென்கிழக்குப் புறநகர்ப் பகுதி. வரிசைவீடுகள் அதிகம். முக்கியமான தகவல் தொழில்நுட்பக்கூடங்கள் இங்கேதான் இருக்கின்றன.

விடுதலையின் கதையைத் தொடங்கும் பிலடெல்பியா..

படம்
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரைப் பார்க்கும் திட்டம் எனது பயணத்திட்டத்தில் இல்லை. எதிர்பாராது நடந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். கனடாவில் ஒருமாதம் இருந்தபின்பு திரும்பவும் டல்லாஸ் வரவேண்டும். டல்லாஸுக்கு ஒட்டாவாவிலிருந்து நேரடியாக விமானம் இல்லை. அங்கிருந்து டொரண்டோவுக்கோ, மாண்ட்ரியாலுக்கோ போய் விமானம் ஏறவேண்டும். ஒட்டாவிலிருந்து ஒரு உள்நாட்டு விமானம் ஏறித் திரும்ப அமெரிக்காவிற்குள் நுழையும் பன்னாட்டு விமான சேவையைப் பெறவேண்டும். முதலில் போட்ட திட்டப்படி மாண்ட்ரியாலுக்குக் காரில் போய் அங்கிருந்து விமானமேறி டல்லாஸ் போகும்படியாக பயணச்சீட்டுப் போட்டிருந்தோம். ஏற்கெனவே மாண்ட்ரியால் பார்த்துவிட்ட நிலையில் புதியதொரு ஊரைப் பார்த்துவிட்டு அனுப்பிவைக்கலாம் என்று மகன் நினைத்தார்.