இடுகைகள்

சங்கரதாஸ் சுவாமிகள்: வாழ்வும் பணியும்

படம்
தமிழை இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பேசுவது மரபு. ஒவ்வொரு பிரிவிற்கும் அதற்கெனச் சிறப்பாகப் பணியாற்றியவா்களைத் தமிழா்கள் நினைவில் வைத்து மரியாதை செலுத்தவும் தவறுவதில்லை. இயல் தமிழக்காகத் தமிழா்கள் நினைவில் வைத்துக்கொள்ளும் பெயா்கள் எண்ணிக்கையில் அதிகமானவை. இசைத் தமிழுக்கோ இவ்வெண்ணிக்கை மிகவும் குறைவு. நாடகத் தமிழுக்கு அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் பல பெயா்கள் நினைக்கப்படுகின்றன. தனது சிலப்பதிகாரக் காப்பியத்தினூடாக அரங்கேற்று காதையை எழுதிய இளங்கோவடிகள் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டில் நாடகத்தமிழுக்கு இலக்கணம் எழுதிய பரிதிமாற் கலைஞா் என்னும் வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரி வரை பல பெயா்கள் அதில் உண்டு. அப்பெயா்களுள் சங்கரதாஸ் சுவாமிகளின் பெயா் தனித்துவம் வாய்ந்தது. 

நியாயங்கள்

1980 களில் பல கிராமங்களிலும் கல்லூரி வளாகங்களிலும் அரங்கேறிய நாடகம் நியாயங்கள். நான் நடித்த முதல் தெருநாடகம் அதுதான். பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்த நாடகத்திற்குத் தேவை இருக்காது என்று நினைத்த காலம் உண்டு. ஆனால் அப்போதைய தேவையைவிடக் கூடுதல் தேவையுடையதாக மாறியிருக்கிறது. சாதிய முரண்களை உள்ளடக்கிய தெருநாடகங்களின் முன்னோடி வடிவம் இது. நினைவிலிருந்து அதனை எழுதியுள்ளேன். அரங்கேற்ற நினைப்பவர்கள் மேடையேற்றலாம்.

காவாலம் நாராயண பணிக்கருடன் நேர்காணல்

படம்
புதுவை நாடகப்பள்ளிக் காலத்தில் எனது அறிதலுக்காகவும் மாணவர்களுக்குக் கற்பிக்கவுமெனத் தேடிச்சேகரித்த பனுவல்கள் பல.    நாடகத்திற்கென வந்த தி எனக்ட் , தி ட்ராமா ரெவ்யூ , சீகல் தியேட்டர் க்வார்ட்டர்லி போன்ற இதழ்களில் வந்த நேர்காணல்கள் பலவற்றை தொகுத்து வைத்திருந்தேன். அவற்றில் வந்த சிறுநாடகங்களை மாணவர்களின் மேடையேற்றத்திற்காகத் தமிழில் மாற்றம் செய்து கொடுத்ததுண்டு. அதேபோல் அப்போது வந்த வெளி, புதிய நம்பிக்கை போன்ற இதழ்களுக்காக நேர்காணல்களை மொழிமாற்றம் செய்ததுண்டு.  அப்படி மொழிமாற்றம் செய்த ஒரு நேர்காணல் இது. மலையாள முன்னோடி நாடகாசிரியராக அறியப்பட்ட நாராயணப்பணிக்கர் (1928-2016), பின்னர் இந்திய அளவிலும் உலக அரங்கியலின் போக்கிலும் தாக்கம் செலுத்தியவர். கவிஞராகவும் நாடகாசிரியராகவும் இயக்குநராகவும் அவர் பெற்ற விருதுகளும் கவனங்களும் முக்கியமானவை. நாடகத்திற்கென சங்கீத் நாடக அகாதெமி விருதும், பெல்லோஷிப்பும், பத்மபூஷன் என்ற தகைகையும் பெற்றவர்

எஸ்.ரா.வின் ஞாபகக்கல்: நல்லதொரு உருவகக்கதை

படம்
எஸ்.ராமகிருஷ்ணனின் ஞாபகக்கல், பெண்ணென்னும் பொதுப்பெயருக்குரியவளாக இருக்கும் வரை அவளுக்குள்ளிருக்கும் விருப்பங்கள், ஆசைகள், கனவுகள் எல்லாம் குடும்பத்தின் பாத்திரம் ஒன்றைத் தாங்கும்போது தொலைந்துபோகும் மாயத்தை உருவகமாக முன்வைத்துள்ளது. ஆண் முதன்மைக்குடும்ப அமைப்பில் பெண்களின் விருப்பங்களைத் தொலைத்துக்கட்டும் பாத்திரங்களாக மனைவி, அம்மா போன்ற பாத்திரங்கள் இருப்பதைக் கதை விவரிப்பின் மூலம் உணர்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். குறிப்பாக இந்தியக் குடும்ப அமைப்பின் மீது நேரடியான விமரிசனத்தைக் கதை முன்வைக்கிறது.

கூட்டம் - ஒற்றை

  கூட்டம்- ஒற்றை . இவ்விரண்டில் எது முந்தியது என்று கேட்டால் ஒற்றையென்னும் தனிமையே முந்தியது எனச் சொல்பவரும் உண்டு. கூட்டமாக இருந்தவர்களே தனியர்களாக மாறினார்கள் என்பவர்களும் உண்டு. ஒன்றுக்குப் பின் உருவானதே இரண்டு, மூன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி என்னும் எண்ணுப்பெயர்கள்.

பா.செயப்பிரகாசம் என்னும் தெக்கத்திக்காரர்

படம்
நிலப்பரப்பு சார்ந்தும் சொல்முறைகள் சார்ந்தும் பேசப்பட வேண்டிய கதாமாந்தர்கள் சார்ந்தும் கரிசல் இலக்கியத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியவர் சூரியதீபன். அந்தப் பெயர் அறிமுகமானது மன ஓசை இதழ் வழியாகவே. ஆனால் அதற்கும் முன்பே பா.செயப்பிரகாசம் என்ற பெயர் அறிமுகம். கரிசல் எழுத்தின் முன்னத்தி ஏராகக் கி.ராஜநாராயணன் பெயரை முதலில் வைத்துத் தொடங்கும் பெரும்பாலான பட்டியல்களில் மூன்றாவதாக வந்து நின்றவர் பா.செயப்பிரகாசம். இரண்டாவது பெயர் பூமணி.