இடுகைகள்

நவீனத் தமிழ் எழுத்து என்னும் வரையறை

படம்
எல்லாவகையான ஆய்வுகளிலும் கருதுகோள் ஒன்று வேண்டும் என வலியுறுத்தப்படும். ஒற்றைக் கருதுகோளோடு தொடங்கும் ஆய்வுகள் துணைக் கருதுகோள்களையும் உருவாக்கிக் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளையும் முன் வைக்கலாம். ஆய்வேடுகளில் குறிப்பான கருதுகோள் இல்லாமல் பரந்துபட்ட நோக்கம் ஒன்றை முன்வைத்துக் கொண்டு தொகுத்தும் பகுத்தும் வைக்கப்படும் ஆய்வுகளும்கூட அதற்கான பயன்மதிப்பைப் பெறக் கூடியனதான்.

கீசக வதம் என்னும் அஞ்ஞாத வாசம்

படம்
வாசமென்னும் சொல்லாடல்கள்  வாசம் என்பது மூக்கினால் உணரப்படும் ஒருவித உணர்ச்சி. நறுமணங்கள் நல்ல வாசம்; விரும்பக் கூடியது. துர்மணங்கள் மூக்கைப் பொத்திக் கொள்ளச் செய்பவை. விரும்பாதவை; விரும்பத்தாகவை. இது ஒருவிதப் பொருண்மை. வாசத்திற்கு இன்னொரு பொருள் உண்டு. வாசம் என்பது வாழ்தல்; வாழ்க்கை.  வாழ்க்கை என்பது மனைவி மக்களோடு உண்டும் களித்தும் உறங்கியும் வாழ்தல். காதலித்தும் காதலிக்கப்பட்டும் காமம் துய்த்தும் பிணங்கிக் குடும்பமாக வாழ்வதல். அதன் வெளி வீடு. வீட்டிற்குள் உற்றார் உறவினர்களை அனுமதித்துச் சடங்குகள், விழாக்கள், கொண்டாட்டமென வீட்டிலிருந்து வாழ்தலின் பரிமாணங்களைக் குடும்ப வெளியிலிருந்து புறவெளிக்குள் நீட்டித்து வாழ்தல்.

உடலரசியலே நாட்டு அரசியலாக… ஈழவாணியின் வெண்ணிறத்துணி

படம்
ஒரு மொழியில் எழுதப்பெற்ற பனுவல்களின் மீது பெண்ணியத் திறனாய்வு என்ன வகையான வாசிப்புகளையும் திறனாய்வுகளையும் செய்கிறது? என்ற கேள்விக்குப் பல்வேறு பதில்களைச் சொல்கிறது கோட்பாடாகத் தொடங்குதல் Beginning theory(1995) என்னும் நூல். அந்நூலின் ஆசிரியரான பேரி பீட்டர் Barry Peter ஒரு கல்விப்புலத் திறனாய்வாளர். திறனாய்வுக்கான கோட்பாடுகளின் தோற்றத்தையும் இயங்குதளங்களையும் முன்வைத்து வரைவுகளை உருவாக்கிய அவர் ஒவ்வொரு திறனாய்வுக் கோட்பாட்டையும் இலக்கியப் பனுவல்களின்மீது செய்முறைத் திறனாய்வாக ( Practical Criticism) நிகழ்த்திக் காட்டியுள்ளார். பெண்கள் எழுதிய பனுவல்களைத் திறனாய்வுக்குட்படுத்தும்போது என்ன செய்யவேண்டும் என்பதற்குப் பின்வரும் இரண்டு பதில்களை முதன்மையாகச் சொல்கிறது.

மணிரத்னத்தின் அரசியல்: விமரிசனமும் மாற்று அரசியலும்

படம்
(இருவா், ஆய்த எழுத்து படங்களை முன்வைத்து)  தமிழ் சினிமா முற்றமுழுதுமாக வியாபார சினிமாவாக மாறிவிட்டது மட்டுமல்ல, சினிமா பார்ப்பவா்களையும் வியாபார சினிமாவின் இன்பதுன்பங்களில் – லாப நஷ்டங்களில்ள பங்கேற்க வேண்டியவா்களாகவும் மாற்ற முயல்கின்றன. சினிமா செய்திகளைத் தரும் பத்திரிகைகளின் பங்கும் அவற்றில் உண்டு. பெரும் முதலீட்டில் எடுக்கப்படும் சினிமா வியாபார ரீதியாக வெற்றியடைந்தே தீர வேண்டும் என்ற மனோபாவம் உண்டாக்கப்படுகிறது. மணிரத்தினத்தின் “இருவர்“ வியாபார ரீதியாகத் தோல்வியடைந்தபோது வெளிப்படுத்தப்பட்ட வருத்தக்குரல்களின் உளவியல், சமூகவியல், பொருளியல் காரணிகள் ஆராயப்பட வேண்டியவை. 

பிகில்: குறையொன்றும் இல்லை

படம்
தனது பார்வையாளர்கள் கூட்டம் எது எனத் தீர்மானித்துக் கொண்டபின் அதற்கான படம் எடுப்பதும், அந்தப் பார்வையாளர் களுக்குக் குறையில்லாமல் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவதும் நேர்மையான செயல் என்பதை நாம் ஒத்துக் கொள்வோம் என்றால் பிகில் நேர்மையான படம். அதனைக் குறைசொல்லும் விதமாக- புறமொதுக்கும் விதமாக - ஒரு காட்சியும் இல்லை.திகட்டத் திகட்டக் காட்சிகளை அமைத்துள்ளார். நயன்தாரா,கதிர், ஜாக்கி ஷெராப், யோகிசேது, ஆனந்தராஜ், திவ்யதர்சினி, விவேக், கு.ஞானசம்பந்தன் எனப் பார்த்த முகங்களும் விளையாட்டு வீராங்கணைகளாகப் பத்துப்பன்னிரண்டு பெண்களும், அடியாட்களாகப் பல ஆண்களும் நடித்துள்ளார்கள். இரண்டு பெண் விளையாட்டு வீராங்கணைகளுக்காகத் தனித்தனிக் கதைகள், தந்தை - மகன் என இரண்டு விஜயுக்குமே பின்னோக்கு உத்தியில் முன் கதைகள், குத்துப்பாட்டு, உத்வேகமூட்டும் சிங்கப்பெண்ணே என்னும் பாட்டோடு, இரண்டு ஜோடிப்பாடல்கள் எனக் கச்சிதமாகப் படம் உருவாக்கப்பட்டுப் பார்வையாளர்கள் இருக்கையிலிருந்து கவனம் திரும்பாமல் படம் பார்க்கிறார்கள் மொத்தத்தில் குறையொன்றும் இல்லை.

கலையியல் நோக்கம் கொண்ட சினிமா: ஜல்லிக்கட்டு என்னும் இந்திய அபத்தம்

படம்
ஜல்லிக்கட்டு: இந்திய அபத்தம் ஒரு சினிமாவைத் திரை யரங்கில் வெளியிட்ட பின் குறிப்பிட்ட காலம் காத்திருந்தால் இணையம் வழியாகப் பார்க்கும் வாய்ப்புகளையும் வசதிகளையும் தொழில் நுட்பம் உருவாக்கி விட்டது. தொலைக்காட்சிப் பெட்டியின் குறுந்திரையில் புதிய படம் ஒன்றைப் பார்ப்பதை விரும்பாத என்னைப் போன்றவர்களுக்குச் சென்னை போன்ற பெருநகரம் ஒருவிதத்தில் வரம். உடனடியாக இல்லையென்றாலும் ஒருவார இடைவெளிக்குள்ளாவது ஜல்லிக்கட்டு போன்ற படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. ஜல்லிக்கட்டு படத்தை இயக்கியுள்ள லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் முந்திய படம் அங்கமாலி டைரீஸ். படமாக்கப்பட்ட விதம், விவாதிக்கும் பொருண்மை காரணமாகக் கவனித்துப் பேசப்பட்ட படம். அந்தப் படத்தை விடவும் கூடுதல் கவனத்துடன் விவாதிக்கப்படக்கூடிய படமாக வந்துள்ளது. ஜல்லிக்கட்டு. ஒருவிதத்தில் இந்திய சினிமாவை உலக சினிமாவிற்குள் நகர்த்தும் முயற்சி என்றுகூடச் சொல்லலாம்.

தேர்வுகள் -வேலைகள்- தரம்

தினக்கூலிகளுக்குப் பதில் மணிக்கூலிகள்  கல்லூரிக் கல்வியில் இணையவழி வருகைப் பதிவைப் பல்கலைக்கழக மானியக்குழு இப்போது வலியுறுத்துகிறது. அதனை ஏற்றுப் பல்கலைக்கழக கல்விக்குழுக்கள் விதிகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு உள்மதிப்பீட்டுத் தேர்வின் போதும் அதற்கு முன்னர் மாணாக்கர்களின் வருகைப்பதிவு கணக்கிடப்பட வேண்டும் எனக் கடுமையாகச் சொன்னபோது ஒரு கல்லூரியின் முதல்வர் அதனை மறுத்துப் பேசினார். மாணாக்கர்களின் வருகைப்பதிவில் இவ்வளவு கறாராக இருக்க வேண்டியது அவசியமா? எனக் கேள்வி எழுப்பியதோடு, இப்படியான கறாரான வருகைப்பதிவு கல்லூரியில் சேரும் மாணாக்கர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடும் என்றார். இந்த ஆண்டுமுதல் வருகைப்பதிவை கறாராகப் பின்பற்றினால் இப்போது இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு படிக்கும் மாணாக்கர்களில் பலரும் இடையில் படிப்பைத் தொடராமல் நின்றுபோகும் (drop out ) வாய்ப்பும் உண்டு என்று வருத்தப்பட்டார்.