இடுகைகள்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

படம்
இந்தியச் சாதீய முறை, இந்தியச் சமுதாய வரலாறு பற்றிய ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கின்ற அதே நேரத்தில் அவர்களுக்கு அறைகூவல் விடுக்கும் சிக்கலாகவும் இருக்கிறது.இந்திய வரலாற்றையறிய உதவும் சான்றுகளுள் மிகத் தொன்மையானவைகளாகக் கருதப்படும் வேதங்களின் காலத்திலிருந்தே தொடர்ந்து சாதிப்பிரிவுகள் இருந்து வந்துள்ளன. தமிழ் நிலப்பரப்பிற்குள் ஆகத் தொன்மையான தனிநூல் தொல்காப்பியம். அதன் முன்பின் இலக்கியங்கள் சங்கக் கவிதைகள். இவைகளும் ஒருவித சாதிவேறுபாடுகளைக் காட்டியுள்ளன. இந்தக்கட்டுரை தமிழக வரலாற்றில் சாதியமைப்பு இறுக்கமும் பெருக்கமும் பெற்றதாகக் கருதப்படும் நாயக்கர்களின் காலத்தில் சாதிகளின் இருப்பு நிலையை மையப்படுத்தி அக்கால சமூக அசைவியக்கம் எவ்வாறு இருந்நது எனப் பேச முயல்கிறது. அம்முயற்சியில் முதலில் சாதிகள் பற்றிய தகவல்களையும் அவற்றின் இயல்புகளையும் விவரித்துவிட்டு, அதன்பின்னர் அதன் கட்டமைப்பையும் அசைவுகளையும் பற்றிப் பேசுவது என்ற முறையிலைப் பின்பற்றியுள்ளது.

விலானொவ் அரண்மனை : இயற்கையும் செயற்கையும்

படம்
போலந்து நாட்டில் எதையெல்லாம் பார்க்க வேண்டும் என்ற விவரங்களைத் தருவதில் என்னுடைய மூன்றாமாண்டு மாணவிகள் காஸ்யாவும் மரிஸ்யாவும் போட்டிபோட்டுக் கொண்டே இருப்பார்கள். முதலில் பார்க்க வேண்டிய நகரம் க்ரோக்கோ எனச் சொன்னதோடு அங்கு பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றியும் சொன்ன காஸ்யாவிடம் க்ராக்கோ பயணத்திற்குப் பின் பேசிக் கொண்டிருந்தபோது,. வாவெல் அரண்மனையையும் அங்கு சேமிக்கப்பட்டுள்ள பொக்கிஷங்கள் உண்டாக்கிய பிரமிப்பையும் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது குறுக்கிட்டு ”உங்களை எளிமையின் பிரமிப்பைக் காட்டும் அரண்மனை ஒன்றுக்கு அழைத்துப் போகிறேன்; ” என்றார் மரிஸ்யா. . ” எந்த அரண்மனை விலனோவாவா?” என்று பதிலின் வழியாகவே கேள்வியைக் கேட்டுவிட்டு “ மரிஸ்யா ஊருக்குப் பக்கத்தில் இருக்கிறது” என்ற தகவலையும் காஸ்யா சொன்னாள். விலனொவ் அரண்மனையின் பின்புறக் கோட்டை மதில் மரிஸ்யாவின் வீடு வார்சாவில் இல்லை. வார்சா பல்கலைக் கழகத்திலிருந்து 30 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருக்கிறது. அங்கிருந்து வார்சாவிற்குள் நுழைய ஒவ்வொரு நாளும் விலானொவ் நகரத்தின் பேருந்து நிலையத்தில் இறங்கித் தான் வர வேண்டும். மரி

இன்னொரு தேசத்தில்: இருப்பும் இயக்கமும்

படம்
போலந்துக்கு வந்து சேர்ந்த முதல் மாதத்திலேயே தெரிந்து கொள்ள வேண்டிய பல விசயங்களைப் பத்து மாதங்களுக்குப் பின்னர் தெரிந்து கொள்ளத் தொடங்கினேன். ஓராண்டு முடியப் போகும்போது நான் சந்திக்கும் இந்தப் பிரச்சினைகளை மற்றவர்கள் உடனடியாக எதிர்கொள்ள வேண்டி யதிருக்கும். எவர் ஒருவரும் இன்னொரு நாட்டிற்குப் போய் நீண்டகாலம் தங்க நேரிடும் போது சந்திக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் இவை என்பதால் கொஞ்சம் கூடுதலாக அவற்றை விளக்கலாம் என நினைக்கிறேன். இதனை இருப்பும் இயக்கமும் சார்ந்த பிரச்சினைகள் எனச் சுருக்கிச் சொல்லலாம். மனிதன் வாழ்கிறான் என்றால் ஓரிடத்தில் இருக்கிறான் என்பதும் அங்கிருந்து இயங்குகிறான் என்பதும் தானே பொருள்.

க்ராக்கோ நகரத்து உப்புச் சுரங்கம்

படம்
க்ராக்கோவுக்குப் போகிறேன் என்று சொன்னபோது ’உப்புச்சுரங்கத்திற்கும் போய் விட்டு வாருங்கள்’ எனச் சொன்னது  அன்புக்குரிய மாணவி காஸ்யா. எங்களுக்கு வழிகாட்ட ஜெக்லோனியப் பல்கலைக்கழக இந்தியவியல் துறை மாணவி எம்மிலி மாதவியை ஏற்பாடு செய்திருந்தார் அதன் பேராசிரியர். 

பாரம்பரியம் பேணும் பழைய நகரங்கள்

படம்
போலந்தின் பெருநகரங்கள் ஒவ்வொன்றிலும் பழைய நகரம் என ஒரு பகுதி இருக்கிறது எனச் சொல்கிறார்கள். இதுவரை நான் போன நான்கு நகரங்களிலும் பழைய நகரப் பகுதிகளைப் பார்த்து விட்டேன். இன்னும் சில நகரங்களுக்குப் போக வேண்டும். போலந்தில் மட்டுமல்லாமல் ஐரோப்பா முழுவதும் பழைய நகரங்கள் பேணப் படுகின்றனவாம். பார்க்க வேண்டும்.

இந்தியத்தனம் நிரம்பிய நவீன நாடகங்கள் : இந்திரா பார்த்தசாரதி, கிரிஷ் கர்னாட் ஓர் ஒப்பீடு

படம்
ஒட்டுமொத்த மனித குலத்திற்கு இந்தியாவின் கொடை என்ன? என்ற கேள்விக்கு, " இந்தியத்தனம் தான் இந்தியாவின் கொடை; அது மட்டும் இல்லையென்றால்,வெறும் கைகளில் ஏந்திய கிண்ணத்துடன் தான் உலகத்தின் முன்னால் இந்தியா நின்றிருக்க வேண்டும்" என்று புகழ்பெற்ற கலைவிமரிசகரும் வரலாற்றாய்வாளருமான ஆனந்த குமாரசாமி சொன்னதாக ஒப்பியல் அறிஞர் சி.டி.நரசிம்மய்யா எழுதியுள்ளார் [C.D.Narasimhaiah,2003,P.5]. தொடர்ந்து சி.டி.நரசிம்மய்யா, இந்தியத்தனத்தின் கூறுகள் எவையெனக் கூறுவதை ஏற்றுக் கொள்வதில் அறிஞர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.