தூக்கம் தொலைந்த இரவானது
இரண்டு மணி நேரத்திற்கொருமுறை என்று இரவு முழுவதும் நேரலைகளைப் பார்த்துப் பார்த்துக் கண்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டன. கனவுகளுக்கு வாய்ப்பே இல்லாத நிகழ்வுகளால் மொத்த இரவும் விழித்திருந்த இரவாகிவிட்டது. பத்துமணி வாக்கில் பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரனின் முகநூல் குறிப்புதான் ஆரம்பம். அதில் ஆவேசமாக எழுதியிருந்தார். எனக்குக் கிடைத்த தகவல்களின் படி: விஜய் நாமக்கலில் பேசுவதற்கு அனுமதிபெற்ற நேரம் காலை 8.45. அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நேரத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளனர். ஆனால், அவர் சென்னை விமானநிலையத்தில் புறப்பட்டதே 8.45 மணிக்குத்தான். பிறகு திருச்சி விமானநிலையம் 10 மணிக்கு வந்தார். சென்று அங்கிருந்து நாமக்கல் சாலை மார்க்கம் செல்ல வேண்டும் (90 கிமீ) பொதுவாக சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். எனில் 8.45 க்கு வர வேண்டியவர் கிளம்பியிருக்க வேண்டிய நேரம் என்ன? ஏற்படும் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு எப்போது கிளம்ப வேண்டும்? சுமார் 2.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அவர்கள் கரூரில் பேச பெற்ற நேரம் 12 ! வந்து சேர்ந்தது சுமார் 7 . இந்தக் கால தாமதத்திற்கு பொறுப்பு ? கூட்டத்தால் நடந்த கா...