இடுகைகள்

வருத்தங்களற்ற பெண் தன்னிலைகள்

படம்
அண்மைக்காலத்தில் அதிகமும் எழுத வந்துள்ள பெண்களின் பனுவல்களை மதிப்பீடு செய்பவர்கள் தொடர்ந்து இந்தப் பிழையைச் செய்கிறார்கள். ஆனால், திறனாய்வுப் பார்வை கொண்ட வாசிப்பு அந்தப் பிழைகளைச் செய்வதில்லை. அவர்களுக்குக் கிடைக்கும் கவிதை அல்லது சிறுகதைத் தொகுப்பையோ, நாடகம் அல்லது நாவலையோ எழுதியவரின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு இது பெண் எழுத்து என்று வகைபிரித்துப் பேசத்தொடங்குகிறார்கள். இதே நிலைதான் தலித்தெழுத்து, வர்க்கச் சார்புடைய அரசியல் எழுத்து, இனவரைவியல் அடையாளங்களைப் பேசும் எழுத்து என்று வகைபிரித்துச் சொல்வதிலும் இருக்கின்றது. வாசிக்கக் கிடைத்த இலக்கியப்பனுவலின் முன்னுரையும், பின்னட்டைக் குறிப்பும் தரும் தகவல்களையும் ஏற்றுக்கொண்டு அப்படியே பேசுவதைத் தவிர்க்க நினைப்பதே தீவிர வாசிப்பின் அடையாளம்; திறனாய்வை நோக்கிச் செல்லும் வாசிப்பின் பாதை.

தொடரும் ஒத்திகைகள்

படம்
  அங்கம் : 1 காட்சி : 1 இடம் : நாடக ஒத்திகைக்கூடம் .      சுவர்களில் நடன முத்திரைகள் கொண்ட சுதை உருவங்கள் , புகைப்படங்கள் உள்ளன . நாட்டுப்புறக் கலைகளின் பாணியிலான சிற்பங்களும் திரைச்சீலைகளும் சுவர்களை ஒட்டி இருக்கின்றன . மையத்தில் சிறியதும் பெரியதுமான சதுர செவ்வக மேடைகள் கிடக்கின்றன . அவற்றில் இருவர் மூவராக அமர்ந்துள்ளனர் . அவர்களின் உடைகளில் விசேஷமாகக் குறிப்பிட எதுவும் இல்லை . மொத்தம் பதினைந்து பேர் அங்கு உள்ளனர் .

அந்த மூன்றும் இந்த மூன்றும்

  காலச்சுவடுவில் மூன்று பெண் கதைகள் 2025 ஜூன் மாதக் காலச்சுவடுவில் மூன்று சிறுகதைகள் - பெருந்தேவி, சுஜா செல்லப்பன், சுஜாதா செல்வராஜ்- எனப்பெண்கள் எழுதிய கதைகள். மூன்று கதைகளிலும் பெண்களே மையப்பாத்திரங்கள். இம்மூன்று எழுத்தாளர்களின் எழுத்துகளை முன்பே வாசித்துள்ளேன். அவர்களுக்கென்று எழுதும் பாணி அல்லது கதைகளுக்கான வெளிகள் எனத் தனித்துவத்தை உருவாக்கிக் கொண்டவர்கள். அந்த அடையாளங்கள் இவற்றிலும் தொடர்கின்றன. கிராமிய வாழ்க்கையில் துயரங்களை ஏற்றுக் கடக்கும் இன்னொரு பெண்ணை - கணவனின் மரணத்திற்குப் பின்னர் விருப்பமில்லாமலேயே - சுற்றியிருப்பவர்களுக்காக வெள்ளைச்சேலையை ஏற்றுக் கொள்ளும் பெண்ணொருத்தியை - காளியப்பனின் மனைவி ராமாயியை எழுதிக் காட்டியுள்ளார் சுஜாதா செல்வராஜ். இந்தியப் பெண்களின் குடும்ப வாழ்க்கையின் அவலங்களுக்கு வடிகாலாக இருக்கும் தெய்வங்களின் மீதான நம்பிக்கைகளும் அவற்றுக்குச் செய்யும் சடங்குகளும் கூடப் பொய்த்துப்போகும் நிலையில் கையறு நிலையில் - செய்வதறியாது திகைத்து நிற்கும் பெண்ணொருத்தியை - செல்வி என்ற பெண்ணைத் தனது 'மயானக்கொள்ளை' கதையில் எழுதிக் காட்டியுள்ளார் பெருந்தேவி. இந்தக்...

உதிரியாய்ச் சில குறிப்புகள்

படம்
அவரின் பிற எழுத்துகளை வாசித்ததில்லை. நேரிலும் அறிந்ததில்லை. ஆனால் அவரது முகநூல் குறிப்புகளின் தொடர் வாசகன். நிமோஷினி என்ற அந்தப் பெயரைக் கூடப் புனைபெயராக இருக்கும் என்றே நினைத்துக் கொண்டு வாசிப்பேன். இப்போது அவரது குறிப்புகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கும் "கொமாரன் குறிப்புகள்" வாசிக்கக் கிடைத்தது. இந்தக் குறிப்புகளைத் தொடர்ச்சியாக வாசிக்கத் தொடங்கிய அரைமணி நேரத்திலேயே ' இப்படித் தொடர்ச்சியாக' வாசிக்க வேண்டியதில்லை என்று தோன்றியது. அதனால் அந்த வாசிப்பை மாற்றிக் கொண்டு ஆங்காங்கே வாசித்தேன். தாண்டித் தாண்டி வாசித்தபோதும் அந்த எழுத்துக்குள் தனது தன்னிலையை - கடந்த கால நினைப்புகளை -இப்போதைய இருப்பை - மறைக்காமல் சொல்லிவிடத் துடிக்கும் வெளிப்படைத்தன்மை இருப்பதை வாசிக்க முடிந்தது. மாதச்சம்பளக்காரராக இருந்து நடுத்தர வர்க்க வாழ்க்கைக்குள் நுழைந்த ஒருவரின் குறிப்புகள் என்று இதனைச் சொல்லிவிடலாம். ஆனால் நடுத்தரவர்க்க நுழைவு தரும் சுகதுக்கங்களின் மீது விலகல் மனநிலையோடு அலைந்த ஒரு உதிரி மனிதனை வாசிக்கத் தரும் குறிப்புகள் என்ற நிலையில் இலக்கியப்பனுவலாக மாறிவிடும் குறிப்புகள் எனவும் சொ...

உலகத்தமிழர்களை நோக்கிய தமிழ்ச் சினிமாக்கள்

படம்
  Ace - PAN TAMIL CINEMA சட்டத்திற்குக் கட்டுப்படாத தனிமனித வீரச்செயல்கள் இன்னொரு தனிமனிதருக்கு அச்சமூட்டக்கூடியன. அதனால் ஒரு தனிமனிதர் அதனை ஏற்க மாட்டார். ஆனால் ஒரு குழுவாக - சமூகமாக அவற்றை விரும்புவார்கள்; ஏற்கவும் செய்வார்கள். ஏனென்றால் சாகசத்தில் விருப்பம் கொண்ட அந்த நாயகனின் குற்றச் செயல்களின் பின்னால் இரக்கமும் அன்பும் காதலும் இருக்கக்கூடும். சில நேரங்களில் குழுவாகப் போராடத் தயாரில்லாதபோதும் தனிமனிதனாக எதிர்த்து நிற்பவர்களாக இருப்பார்கள். இதனை வெற்றிகரமான வணிகசினிமாவின் சூத்திரமாக மாற்றியிருக்கிறார்கள்.

மதுரையின் வாசம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்

படம்
நீண்ட காலமாகச் சிறுகதைகளில் செயல்பட்டு வரும் யுவன் சந்திரசேகர் போன்ற எழுத்தாளர்களின் கதைகளை ஒற்றை அடையாளத்திற்குள் அடக்குவது எளிதன்று; தேவையானதுமல்ல. அவரது கதைகளை மொத்தமாகத் தொகுத்து வாசிக்கும் ஒருவருக்கு வெளிசார்ந்த அடையாளங்கள் கொண்ட கதைகள் எழுதியிருக்கிறார் எனச் சொல்வதும், அவை மதுரை மாவட்டப் பின்னணியில் எழுதப்பட்டிருக்கின்றன என்று சொல்வது எளிதாக சொல்லக்கூடிய ஒன்றுதான். காலகட்டத்தின் கதை இம்மாத (2024,ஜூன்)உயிர்மையில் வந்துள்ள ’நகுதற் பொருட்டு’ கதையின் நிகழ்வெளிகளாகச் சேலமும் மதுரையும் உள்ளன. ஆனால், இரண்டும் ஒன்றுபோல இடம் பெறவில்லை. சேலம் நிகழ்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திக் காட்டப் படுகிறது. ஆனால் மதுரை நினைக்கப்படும் வெளியாக - கடந்த கால நிகழ்வுகளின் வெளியாக விரிந்துள்ளது.   நிகழ்காலத்தில் - சேலத்தில் சந்தித்த பாத்திரத்தின் வழியாகக் கடந்த காலத்திற்குள் நுழையும் கதைசொல்லி பாத்திரம், தனது மாணவப்பருவத்து நண்பர்கள் இருவரின் எதிரும் புதிருமான எண்ணங்களையும் செயல்பாடுகளையும் அலசிக் காட்டுவதாகக் கதையின் காட்சிகள் வந்து போகின்றன. அந்த அலசல்கள் தனிநபர்கள் இருவரின் மனப்பாங்க...

துக்ளக் என்னும் அரசியல் மையம்

படம்
தமிழ்நாட்டின் வலதுசாரி அரசியலின் முகமாக இருக்கும் பல பத்திரிகைகளில் முதல் இடம் எப்போதும் துக்ளக் இதழுக்குத்தான். துக்ளக் இதழின் ஆசிரியர்களுக்குப் பத்திரிகையின் வணிகவெற்றியோ, வாசகப்பரப்பைக் கூட்டுவதோ முதன்மையான நோக்கங்களாக இருக்கவில்லை; அவற்றை விடவும், அரசியல் ஆளுமைகளாகத் தங்களை நிலைநிறுத்தும் நோக்கம் இருந்தது; இருக்கிறது என்பதைக் காரணமாகச் சொல்லலாம். வலதுசாரிச் சார்புக் கருத்தியல் ஆளுமையாகத் தன்னை நிலைநிறுத்த அதன் தொடக்க ஆசிரியரான சோ.ராமசாமியும் விரும்பினார்; இப்போது ஆசிரியராக உள்ள சுவாமிநாதன் குருமூர்த்தியும் விரும்புகிறார்.