இடுகைகள்

தமிழில் எடுக்கப்பட்ட வலைத்தொடர்கள்

படம்
காட்சி ஊடகச்செயலிகளின் தேவைக்காகத் தயாரிக்கப்படும் வலைத் தொடர்களில் சில பொதுத் தன்மைகள் காணப்படுகின்றன. வெளிப்பாட்டு மொழியின் அடையாளத்தைத் துறத்தல் என்பது முதல் பொதுத்தன்மை. வணிக நிறுவனங்களின் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என நினைப்பது இரண்டாவது தன்மை. இத்தன்மை மாற்றத்தில் காட்சிச் செயலிகளின் இலக்குப்பார்வையாளர்கள் பற்றிய கணக்கீடுகளும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இந்தப் பின்னணியில் சில குறிப்பிட்ட வகையான வலைத்தொடர்களே முதன்மையாகத் தயாரிக்கப்படுகின்றன. அவற்றைத் திகில்/மர்மம், அமானுஷ்யம்/இறையருள் நம்பிக்கை, குற்றச்செயல்/துப்பறியும் தொடர் என்பதான வகைப்பாட்டுக்குள் அடக்கிவிடலாம்.

மாஜீதா பாத்திமாவின் சிறுகதைத் தளங்கள்

படம்
வாசிக்கப்படும் இலக்கியப் பிரதியொன்றை ஆண்மையப் பிரதியா? பெண் மையப் பிரதியா? என அடையாளப்படுத்திக் கொண்டு விவாதங்களை முன்வைப்பது பெண்ணிய அணுகுமுறை. ஒரு பிரதியை அடையாளப்படுத்தும் கூறுகள் அதன் தலைப்பு தொடங்கி, சொல்லும் பாத்திரம், விசாரிக்கப்படும் பாத்திரங்கள், உண்டாக்கப்படும் உணர்வுகள், வாசிப்பவர்களுக்குக் கிடைக்கும் சிந்தனை மாற்றம் எனப் பலவற்றில் தங்கியிருக்கக் கூடும். தனது எழுத்துக்கள் ஒவ்வொன்றிலும் பெண்மையங்களையே எழுதும் மாஜிதா பாத்திமா, அதற்காக உருவாக்கும் பாத்திரங்களை எவ்வகையான பாத்திரங்களாகக் காட்டுகிறார் என்பதின் வழி தான் நம்பும் பெண்ணியச் சிந்தனையை - அதன் வழியாகப் பெண் விடுதலையைப் பேசுகிறார்.

அசோகமித்திரனின் சிறுகதைத் தொனிகள்

படம்
சமூக யதார்த்தத்தை எழுதுவதில் இரண்டு போக்குகள் உள்ளன. முதல் போக்கு குறிப்பான இலக்கு எதனையும் வைத்துக் கொள்ளாமல் சமூகத்தின் இருப்பையும் அதன் விசித்திரங்களையும் அதற்கான சமூகக் காரணங்களையும் தனிநபர் செயல்பாடுகளையும் எழுதிக் காட்டும் முறை. இதன் தொடக்கப் புள்ளியாகப் புதுமைப்பித்தன் எழுத்துக்களைச் சொல்லலாம். அவர் தொடங்கிய இந்தப் போக்கின் நீட்சியாகச் சுந்தரராமசாமி, சா.கந்தசாமி, அசோகமித்திரன், பிரபஞ்சன், பாவண்ணன், சுப்ரபாரதி மணியன் போன்றவர்களின் சிறுகதைகளும் நாவல்களும் இருக்கின்றன எனக்கூறலாம். 

கெட்டுப்போகும் பெண்கள்

படம்
மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் என்று வரையறுத்துச் சொல்ல முடிவதுபோல் அடிப்படை உணர்வுகள் இவைதான் என்று வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. அடிப்படைத்தேவைகளைப் பெறவும் தனதாக்கிக்கொள்ளவும் உரிமைகொண்டாடவும் உருவாக்கப்படும் நடைமுறைகளே உழைப்பின் விதிகளாக மாறுகின்றன. உழைப்பு விதிகளின்படி கிடைக்கும் அடிப்படைத்தேவைக்கான பொருட்களைப் பிரித்துக்கொள்ளும் முறைகள் உருவாக்கப்படும்போது பொருளியல் அல்லது தொழில்முறை நடைமுறைகள் உருவாகின்றன.

கலை அடையாளங்களும் காமத்தின் ஈர்ப்பும்

படம்
  கலைகளில் ஒன்றை உருமாற்றம் செய்து ஒரு மொழி சார்ந்த குழுமத்தின் அல்லது நிலம் சார்ந்த பண்பாட்டின் அடையாளமாக மாற்றமுடியும் என்பதை இந்திய மாநிலங்களின் கலை பண்பாட்டு அமைப்புகள் செய்து காட்டியுள்ளன. தமிழ்நாட்டின் பண்பாட்டு அமைப்புகளும் பல்கலைக்கழக அழகியல் சார்ந்த துறைகளும் அதனைச் செய்ய முயற்சிக்கவில்லை என்றே தோன்றுகிறது.    நாடகம், நடனம், இசை, இலக்கியம் எனப் பலவற்றில் நாம் இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

திரைப்படங்கள் பார்த்த ஒரு ரசிகனின் பயணம்

படம்
என் நினைவில் இருக்கும் ஆகப் பழைய படத்துக்கு வயது அரை நூற்றாண்டு ஆகப் போகிறது. கலையரசி (இயக்கம்: A.காசிலிங்கம்) திரைக்கு வந்த 1963 ஆம் ஆண்டிலேயே படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மதுரையில் இருந்து 35 மைல் தொலைவில் இருக்கும் எழுமலை டூரிங் டாக்கீஸுக்கு ஒரு படம் வந்து சேர குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும். எனது ஊரிலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்த தாய்க்கிராமம் எழுமலையில், எம்.ஜி.ஆர்- பானுமதி நடித்த கலையரசியை இரண்டாம் ஆட்டமாகப் பார்த்துவிட்டு நள்ளிரவுக்குப் பின்னால் வீடு வந்து சேர்ந்த நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது. அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும்.

திறமையாளர்களைக் கண்டறிதலும் திறப்புகளை உருவாக்குதலும் -மு.க.வும் மு.க.ஸ்டாலினும்

படம்
நான் முதல்வன் திட்டம் 2022, மார்ச், ஒன்றாம் தேதி, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ‘நான் முதல்வன்’ என்னும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். அதனால் விளைந்துள்ள பலன்களைத் தமிழக இளையோர்கள் உணரவும் பயன்படுத்திக் கொள்ளவும் தொடங்கியுள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டம் வழியாகப்  பள்ளிக்கல்வியைச் சரியாகவும் திறனுடனும் முடித்துக் கல்லூரிக் கல்விக்குள்  நுழைந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களாக இருக்கப் போகின்றது.