இடுகைகள்

காட்சிகள் நகர்கின்றன

படம்
ஒரு சினிமா வெளிவந்து முதல் காட்சி முடிவதற்கு முன்பே சில நூறு விமரிசனக் குறிப்புகள் வந்துவிழும் காலத்தில் இருக்கிறோம். சமூக ஊடகங்களின் வரவால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தில் தமிழ்ச் சினிமா உலகம் -சினிமாவைத் தொழிலாக நம்பியிருக்கும் தொழிலாளர்களும் வணிகர்களும் பெரிதாகப் பாதிக்கப்படுகிறார்கள் எனப் பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்னைக் கேட்டால் சமூக ஊடகங்களின் வரவால் அதிகம் பாதிக்கப்பட்டது சினிமா உலகம் அல்ல; பத்திரிகை உலகம் என்றே சொல்வேன். குறிப்பாகத் தினசரிகளிலும் வார இதழ்களிலும் சினிமா விமரிசனங்களை எழுதிவந்த பத்திரிகையாளர்கள் தான் முதன்மையான நெருக்கடியைச் சந்தித்திருக்கிறார்கள். பல இதழ்கள் அவை வெளியிடும் சினிமா விமரிசனங்களுக்கு எந்தப் பொருத்தமும் பலனும் இல்லையென்று தெரிந்து அவற்றை வெளியிடுவதை நிறுத்திவிட்டன. அப்படி நிறுத்தாத பத்திரிகைகளின் விமரிசனங்களை வாசித்துவிட்டுத் திரையரங்கிற்குப் போவதா? அல்லது போகாமல் தவிர்ப்பதா? என்று முடிவெடுத்த காலமெல்லாம் இப்போது இல்லையென்று தெரிந்தபோதிலும் பழக்கத்தை நிறுத்த முடியாத மனநிலையில் சினிமா விமரிசனங்களை வெளியிடுகின்றன.

நாடக ஆசிரியரைத் தேடும் பாத்திரங்கள்

படம்
தமிழில் கவிதைகளும் கதைகளும் எழுதப்படும் அளவுக்கு நாடகங்கள் எழுதப்படவில்லையே? எழுதப்பட்ட நாடகங்களும் நிகழ்கால மனிதர்களைப் பாத்திரங்களாக்காமல் கடந்த காலத்திற்குள் நுழைகின்றனவே? தொன்மங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் நினைவூட்டும் நாடகப்பனுவல்களே எழுதப்பட்டு மேடையேற்றப்படுகின்றனவே? இதன் பின்னணிகள் என்னவாக இருக்கும் என்ற கேள்வியைப் பல இடங்களில் சந்தித்ததுண்டு. புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறையில் பணியாற்றி விட்டு வெளியேறிய பின்னும் நாடகங்கள் குறித்தும் அரங்க நிகழ்வுகளையும் அதன் தொடர்ச்சியாகத் திரைப்படங்களையும் ஊடகங்களையும் கவனித்து எழுதுபவன் என்பதால் இந்தக் கேள்விகளுக்கு என்னிடம் பதிலை எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால், நான் இதற்கான பதில்களை உடனடியாகச் சொன்னதில்லை. ஆனால் சொல்ல வேண்டிய கேள்விகள் இவை என்பதையும் மறுக்கவில்லை; மறக்கவில்லை.

கலாப்ரியாவின் நகர்வு

படம்
கலாப்ரியா, தனது கவி அடையாளத்தை மாற்றிப் ’புனைகதையாளர்’ அடையாளத்தை உருவாக்கத்தைத் தொடர்ச்சியாக முயன்று வருகிறார். அந்த முயற்சியில் ஓர் எல்லையைத் தொட்ட சிறுகதையாக இந்த மாத உயிர்மையில் வந்துள்ள ”கொடிமரம்” கதையைக் குறிப்பிடத் தோன்றுகிறது. இந்தக் கதையை வாசித்ததற்குச் சில நாட்கள் முன்பு தான் பிப்ரவரி மாத அந்திமழையில் வந்த ‘ பிள்ளைப்பூச்சி’ கதையை வாசித்தேன். அதற்கு ஒரு வாரம் முன்பு பிப்ரவரி மாத உயிர்மையில் வந்த ‘ஆர்மோனியம்’ கதையையும் வாசித்திருந்தேன்.

சாதியின் இருப்பு: சந்திக்கும் நெருக்கடிகள்

படம்
சாதி: அடக்கமும் அதன் நிமித்தங்களும் இந்திய அறிவு என்பது சாதி்யை விவாதிப்பதில் தங்கியிருக்கிறது. எல்லாவகைச் சிந்தனைகளும் வெளிப்பாடுகளும் ‘சாதி’யைச் சொல்லாடல்களாக மாற்றுவதை அகத்திலும் புறத்திலும் மேற்கொள்கின்றன. கொண்டாட்டமாயினும் பெருந்துயரமாயினும் அதன் உள்ளோட்டத்திற்குள் சாதியும் அதன் இயங்குநிலைகளும் இருக்கின்றன. இல்லையென்று நினைப்பது பாவனைகள் மட்டுமே. சகமனிதனைச் சகித்துக் கொண்டு வேலைகள் செய்வதில் பாரதூரமான வேறுபாடுகள் இருப்பதாக இந்திய மனிதர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஜனநாயக அரசின் உறுப்பினர்களாக மாறி எழுபது ஆண்டுகள் ஆன பின்பும் இதுதான் நிலைமை. மக்களை மையப்படுத்தும் ஜனநாயகம் அதன் சாராம்ச குணமான சகிப்பு என்பதை ஏற்றுக் கொண்டவர்களாக ஆக்கவில்லை. அதனை நோக்கிய பயணத்தைக் கூடத் தொடங்கவில்லை. ஜனநாயக அரசின் கல்வி நிறுவனங்கள், கலை இலக்கியம் உள்ளிட்டவைகளை வடிவமைக்கிற பண்பாட்டு நிறுவனங்கள், சட்டம் ஒழுங்கைப் பேணும் காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், சட்டமன்றங்கள், இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் ஊடகங்கள் என அனைத்தும் சகிப்பின்மையைக் குற்றமாகக் கருதாமல் அடக்கத்தைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்ட...

அருண் மாதேஸ்வரனின் இரண்டு சினிமாக்கள்

படம்
ஒரு இயக்குநர் முந்தைய படங்களைப் போலவே தான் அடுத்தடுத்துப் படங்கள் செய்வார் என்று நினைக்கவேண்டியதில்லை. சினிமாவில் இயங்கும் ஒருவர் வெவ்வேறு வகைப்பாட்டில் வெளிப்படுவார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்குவார் என்ற தகவலின் பேரில் அவரது இயக்கமுறைமையைப் பற்றிப் பேசவேண்டியுள்ளது. 

இசைக்கலைஞர் இளையராஜா

படம்
வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் ஆளுமையைக் குறித்த சினிமா என்பது தமிழுக்குப் புதிய ஒன்று. இளையராஜாவின் வாழ்க்கைக்கதை சினிமாவாக வந்தால் அது ஒரு தொடக்கமாகக் கூட இருக்கலாம். தாங்கள் வாழுங்காலத்தில் அவர்களே எழுதிய நூல்களாகவும் பத்திரிகையாளர்களின் உதவியோடு எழுதப்பெற்ற தொடர்கட்டுரைகள் வழியாகவும் வெவ்வேறு நகரங்களில் நிற்கும் சிலைகளாகவும் தங்கள் ஆளுமைப்பிம்பங்களை உருவாக்கிய அரசியல் ஆளுமைகள் கூட ஒரு சினிமாவாகத் தங்கள் வரலாற்றை எடுத்துப் பார்க்கும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவில்லை. இசைக்கலைஞர் இளையராஜா இப்போது முன்வந்துள்ளார்.

எனது வாசிப்பு- நினைவுகள்-1

படம்
பாண்டிச்சேரியிலிருந்து திருநெல்வேலிக்குக் கிளம்பியபோது எனது வயது 38. அங்கே எனது வேலை வாசிப்பாளர்(Reader ) . பாண்டிச்சேரியில் எனது பணியின் பெயர் விரிவுரையாளர் (Lecturer) வாசிப்புக்கு வயது 25 க்கும் மேல். வாசிக்கிறேன் என்ற உணர்வோடு வாசித்தபோது வயது 14. 1960 களின் பிற்பாதியில் வயசான கிழவனுக்காக ஒரு பேரன் திண்ணையில் உட்கார்ந்து விராட பர்வம் படித்துக் கொண்டிருந்தான். அந்தச் சிறுவன் வாசிப்பு என்னவென்று தெரியாதபோது அதனை ஒரு கடமையாக -நிகழ்வாகச் செய்துகொண்டிருந்தான். அவனைப்போல அல்லாமல் அவனது தாய்மாமா பாரதக் கதை வாசிப்பாளராக எங்கள் ஊரான தச்சபட்டியிலும் வெளியூர்களிலும் அறியப்பட்டவர். பக்கத்து ஊரான உத்தப்புரம் சாவடியில் உட்கார்ந்து பாரதம் படிப்பதைப் பலரும் சுற்றி உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள்.