இடுகைகள்

வெகுமக்கள் எழுத்தின் இரண்டு ஆளுமைகள்: யுவகிருஷ்ணா, அதிஷா

தமிழில் எழுதப்படும் வலைப்பூக்கள்,   முகநூல், ட்விட்டர் என இணையத்தின் அச்சு ஊடகத்தில் வேலைபார்க்கும் ஒருவருக்கு இணையவெளிப் பயணம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட காலம் நமது காலம். தமிழகத்தின் பிரபலமான அச்சு ஊடகங்களுக்குள் பணியாற்றும் இந்த இரண்டு  பெயர்களையும் இணையவெளியில் அலையும் ஒருவர் சந்திக்காமல் இருந்தால் ஆச்சரியம்.  ஒருவர் யுவகிருஷ்ணா, இன்னொருவர் அதிஷா..

சேகுவோரா

படம்
[மலையாள மூலம்: கோபன். தமிழில் ;  அ.ராமசாமி]       காட்சி.1 நாடகம் தொடங்கும்பொழுது மேடையில் ஒரு சவப்பெட்டி. அதனுள் விகாரமான தோற்றம் கொண்ட முதியவன் அண்ணாந்து பார்த்தபடி கிடைத்தப்பட்டுள்ளான். சவப்பெட்டியினுள் முழுமையான வெளிச்சம். சவப்பெட்டியின் முன்பாக மூன்று ராணுவ அதிகாரிகள் நடந்து வருகின்றனர். சவப்பெட்டியிலிருந்த வெளிச்சம் மங்கிக் குறைகிறது. மேடையில் உள்ள மூன்று மேஜை விளக்குகள் அடுத்தடுத்து எரிகின்றன. சேகுவோராவின் ஓவியம் பின் திரையில் தெரிகின்றது.

தொல்காப்பியம்; இலக்கணத்தைத் தாண்டி...

முன்னுரை தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என முப்பொருண்மையை விரிவாகப் பேசும் இலக்கணம் என்பது நமது கல்விபுலம் சொல்லும் தகவல். பின்னர் யாப்பு, அணி என இரண்டும் தனி இலக்கணங்களாக விரிவுபட்டதின் தொடர்ச்சியாகத் தொல்காப்பியத்திலேயே ஐந்திலக்கணம் குறித்த செய்திகள் உண்டு எனப் பேசத்தொடங்கியது தமிழ்க் கல்விப்புலம். இன்று உலக அறிவு விரிவடைந்துள்ள நிலையில் தொல்காப்பியத்தை இலக்கண நூலாகக் கற்பிப்பதைத் தாண்டி ஓர் அறிவுத் தோற்றவியல் நூலாகக் கற்பிக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. ஐரோப்பியர்கள் அரிஸ்டாடிலின் எழுத்துகளைத் தொகுத்து வைத்துக்கொண்டு ஐரோப்பிய அறிவின் தொடக்கமாக முன்வைக்கிறார்கள். அப்படியொரு ஆளுமையாகத் தொல்காப்பியரை முன்வைக்க முடியும். தொல்காப்பியப் பனுவலுக்குள் மனித அறிவுருவாக்கம் குறித்த விளக்கங்கள், சமூகவியல் அறிவு, உடலைப் பயன்படுத்தி உணர்வுகளைக் காட்டும் நடிப்புக்கோட்பாடு, நூலறிவியல் சிந்தனைகள், இடம்பெற்றுள்ளன.

தமிழ் அறிவுத்தோற்றவியலின் பரிமாணங்கள்- கல்வி,கேள்வி அதிகாரங்களை முன்வைத்து

மனித நாகரிக வளர்ச்சி என்ற சொல்லாடலில் இலக்கியங்களுக்குப் பெரும்பங்கு இருக்கின்றன என்ற கருத்து இன்று ஏற்கப்பெற்ற கருத்து. அதிலும் தமிழ் போன்ற செவ்வியல் மொழிகளிலிருந்து உருவான இலக்கியங்கள், அம்மொழி பேசுகின்றவர்களின் வளர்ச்சியில் மட்டுமல்லாமல், உலகந்தழுவிய பொதுமைக் கூறுகளை முன் வைத்து உலக நாகரிக வளர்ச்சிக்கே காரணிகளாக ஆகியிருக்கின்றன. இக்கட்டுரை தமிழ்ச் செவ்வியல் பரப்பிற்குள் இருக்கும் திருக்குறளின் கல்வி, கேள்வி என்ற சொல்லாடல்கள் முன் வைக்கும் கருத்தியல் மற்றும் இயங்குநிலையைப் பற்றிப் பேசுகின்றது. ஆளுமைப் பண்பு உருவாக்கம் : மனிதன் என்னவாக இருக்கிறான்? என்ற கேள்வி தத்துவம் சார்ந்ததாக இன்று அறியப்படுகிறது. ஆனால் இந்தக் கேள்வி அடிப்படையில் உலகில் உள்ள மனிதன் உள்ளிட்ட உயிரினங்களும், கடல், வான், அண்டம், பூமி, கோள்கள் என இயங்கும் இயற்கைப் பொருட்களும், இவ்வியற்கைப் பொருட்கள் தரும் பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பெறும் செயற்கைப் பொருட்களும் எவ்வாறு இருக்கின்றன? என்ற அறிதலுக்கான அடிப்படைக் கேள்வியிலிருந்து உருவாகும் அறிவுத்தோற்றவியல் ( Epistemology) கேள்வியே என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்ட...

குற்றவியலின் தர்க்கங்கள்-ஆப்பே கடையில் நடந்த 236 ஆவது மேசை உரையாடல்

படம்
ஒரு கவிதையை வாசிப்பதற்கும் நாடகத்தை வாசிப்பதற்கும் அடிப்படையான வேறுபாடுகள் இருப்பதுபோலப் புனைகதையை வாசிப்பதற்கும் அடிப்படையான வேறுபாடு இருக்கவே செய்கிறது. புனைகதைகளுக்குள்ளும்  சிறுகதை வாசிப்பும் நாவல் வாசிப்பும் வேறுபட்டது.

தற்காலிகமா? நிரந்தரமா?

படம்
ஐரோப்பியர்களுக்குக் கல்யாணத்திற்கு முன் சேர்ந்து வாழ்தல் (Living together) தவிர்க்க முடியாத நெருக்கடியின் விளைவு. இந்தியர்களுக்கு சேர்ந்து வாழ்தல் நெருக்கடி அல்ல;தேர்வு (Choice). இரண்டில் எது ? பந்தம் தொலைத்துக் கொஞ்சும் - கொஞ்ச காலமா? பந்தமென்றறியாத பந்தம் தொடரும் நீண்ட காலமா? தற்காலிகமா? நிரந்தரமா? 

எளிமையின் பயங்கரம்

கொம்பனை முன்வைத்துத் தமிழின் வட்டார சினிமாக்களைப்  பற்றி ஓர் அலசல் ‘அதிகத் திரையரங்குகள்; குறைந்த நாட்கள்; கூடுதல் கட்டணம்; வசூல் வெற்றி’ என்ற சூத்திரம் செயல்படும் இந்தக் காலகட்டத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் வந்த சகாப்தம், நண்பேன்டா, கொம்பன் மாதிரியான படங்களின்  விமர்சனத்தை மே முதல் வாரம் வாசிப்பது அபத்தமான ஒன்று.