இடுகைகள்

நள்ளிரவு ரயில் பயணங்கள்

படம்
கோவையிலிருந்து திருப்பத்தூருக்கு நேரடியாகப் போய்ச் சேர வேண்டும் என நினைத்து கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். ரயில் இரவு 09.50 -க்குத் தான். போத்தனூர் ரயில் நிலையக் கொசுக்களோடு நடத்திய யுத்தத்தில் சிந்திய ரத்தத்தை விடச் சோகமானதாக ஆகி விட்டது அந்தப் பயணம்.

படித்துப்பாருங்கள்; எதிர்த்துப் பேசலாம்

படம்
  மாதொருபாகன் நாவல் படிப்பதற்காக எழுதப்பெற்ற ஒரு பிரதி. படித்தபின் செய்ய வேண்டிய வேலை விளங்கிக் கொள்ளுதல். விளங்கிக் கொள்ளுதல் என்பது இரண்டு நிலைகளில் முழுமையடைகிறது. எழுதியவனின் நோக்கத்தில் புரிந்து கொண்டால் அதனோடு ஒத்துப் போகிறோம். எழுதியவரின் நோக்கத்திற்கு மாறாக வாசித்தவரின் நோக்கத்தில் புரிந்து கொண்டால் விமரிசனம் செய்கிறோம். எழுதியவரின் நோக்கத்தில் வாசித்து விளக்கினால் அது பாராட்டுமுறை அல்லது ரசனைமுறைத் திறனாய்வு. வாசித்தவரின் நோக்கத்தில் விளக்கினால் அந்தத் திறனாய்வுக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. நிச்சயம் அது பாராட்டல்ல. பெருமாள் முருகனின் மாதொருபாகனை வாசித்துப் பாருங்கள். பாராட்ட விருப்பமில்லையென்றால் உங்கள் நோக்கத்தில் விமரிசனம் செய்யுங்கள். வாசித்துவிட்டு எதிர்த்துப் பேசலாம் அது விமரிசனம் அல்லது திறனாய்வு. வாசிக்காமலேயே எதிர்த்துப் பேசாமல் தடையைக் கோரினால் அது பாசிசம். விமரிசன மனோபாவம் ஜனநாயகத்தின் அடையாளம். தடையைக் கோரும் பாசிச மனோபாவம் அடிமைத்தனத்தை விரும்புவதின் அடையாளம். நமது சமூகம் விமரிசனப் பூர்வமான சமூகமாக ஆகவேண்டுமா? அடிமைத்தனத்தைப் பாராட்டும் சமூகமாக ஆக்கப்பட வேண்ட...

ஜெயமோகனின் வெண்முரசு வாசிக்கத் தொடங்கியுள்ளேன்:

ஆன்மா தொலையாத அந்தக் காலத்தில் எனது கிராமத்தில் நள்ளிரவு வரை கதை சொல்லிகள் கதை சொல்லிக் கொண்டிருப்பார்கள். விசேசமான,விதம் விதமான கதை சொல்லிகள் எல்லாம் உண்டு. ஒரு சுவாரசியமான கதை சொல்லி இருந்தார். அவர் பெயரும் ராமசாமி தான்.

ஜோ.டி. குருஸ் : அங்கீகரிக்கப் பட வேண்டிய படைப்பாளி

படம்
எல்லாத் துறைகளிலும் விருதுகள் அளிக்கப்படுகின்றன. ஓர் அமைப்பின் விருது என்பது அது வழங்கும் பணமுடிப்பாக மட்டும் இருப்பதில்லை. அடையாளச் சின்னம் தாங்கிய பதாகையும் சேர்ந்தது. விருது என்பது ஊக்கமும் அங்கீகாரமும் இணைந்த ஒன்று. அடையாளப்படுத்தும் இன்னொரு பணியும் விருதுக்குப் பின்னால் இருக்கிறது.

ஸோபி என்னும் புனைவு

 05:42  காலை வணக்கம் 05:47 காலை வணக்கம்  05:49  இந்த எழுத்தின் வழி உரையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் 05:49  நானும் அப்படியே..  05:50  மலேசியாவில் பிறந்தவரா..? இந்தியாவிலிருந்து போனவரா? 05:53  இரண்டும் இல்லை. மலேசியாவில் இருக்கிறேன். 10 வருடங்களாக இங்கு வாழ்கிறேன். எனக்கு இந்தியாவைப் பிடிக்கும்; அதன் பண்பாடு விருப்பமானது. அதனால் இந்தியப் பெயரில் ஒரு முகநூல் கணக்கு தொடங்கியிருக்கிறேன்

ஆறு மாதத்தில் தமிழ் நெடுங்கணக்கைக் கற்றுக் கொண்டார்கள்

படம்
வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பித்த அனுபவம் சுகமானது. இங்கிருந்து போன முதல்வருடம் புதிய மாணாக்கர்கள் இல்லை. இரண்டாம் ஆண்டில் 7 பேரும், மூன்றாம் ஆண்டில் 3 பேருமாகப் 10 பேர் தான். அவர்களுக்குப் பேச்சுத் தமிழ் கற்பிப்பதுதான் எனது வேலை. தமிழ் நெடுங்கணக்கு ஏற்கெனவே அவர்களுக்குத் தெரியும் . அதைக் கற்பிக்கும் வாய்ப்பு அந்த வருடம் வாய்க்கவில்லை.

கேள்விகளா? குற்றச்சாட்டுகளா?

எழுத்தாளர் இமையம் 22-10-2013 தேதியிட்ட தி இந்து நாளிதழுக்கு எழுதி அனுப்பிய கட்டுரையை அப்படியே தருகிறேன். அதில் நிகழ்காலத் தமிழ் எழுத்தாளர்களை நோக்கி எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானவை. அவைகளைக் கேள்விகள் என நினைப்பதை விடக் குற்றச்சாட்டுகள் என்றே கொள்ள வேண்டும். சொரணையுள்ள கதைக்காரர்கள் முன் வந்து விவாதிக்க வேண்டும். அப்படியெல்லாம் நமது புனைகதை எழுத்தாளர்கள் முன் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்றாலும் ஆசை தான்.