இடுகைகள்

ஜெயந்தன் விருது விழா

படம்
நிறைவில் ஒரு நாடகம் தொடக்கத்தில் ஒரு குறும்படம் கலையின் ஓர்மை என்பது தொடக்கத்தை எப்படி முடிக்கிறது என்பதில் இருக்கிறது. அதுபோலவே ஒரு கலைசார்ந்த நிகழ்ச்சிகளையும் நல்ல ஓர்மையுடன் அமைக்க வேண்டும் என நினைப்பவர்கள் தொடக்கமும் முடிவும் எப்படி இருக்க வேண்டும் எனக் கணித்துத் திட்டமிடுவார்கள். அப்படியானதொரு திட்டமிடல் “ஜெயந்தன் விருது வழங்கும் விழாவில் இருந்தது. வழக்கமான வரவேற்புரை, நன்றியுரையைத் தாண்டி இருந்தன. ஆனால் மொத்த நிகழ்வையும் உரைகளாகத் திட்டமிடாமல் பார்வையாளர்களுக்கு ஜெயந்தனின் எழுத்துகளைக் குறும்படமாகவும், நாடக நிகழ்வாகவும் தரவேண்டும் எனத் திட்டமிட்டிருந்தது மொத்த நிகழ்வுக்கும் ஒருவித ஓர்மையை உருவாக்கித் தந்திருந்தது.

தலைமைச் செயலகம் -சாயல்களும் பாவனைகளும்

படம்
அரசியல் சினிமாவின் முதன்மையான அடையாளமாக இருப்பது கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவூட்டும் காட்சிகளைப் படத்தில் புனைவாக உருவாக்கிக் காட்டுவதாகும். அப்புனைவில் இடம் பெறும் பாத்திரங்களுக்கு அரசியல் பிரபலங்களில் பெயர்களின் சாயலில் பெயரிடுவதன் மூலம் கூடுதலாக அரசியல் படம் எனக் காட்ட முடியும் என்ற நம்பிக்கைத் தமிழ்ப்பட இயக்குநர்களுக்கு உண்டு.

வெள்ளெருக்குப் பூத்த நிலம்

படம்
இறப்பும் பிறப்பும் நம்கையில் இல்லை. பிறப்பைக் கட்டுப்படுத்தும் வேலையைச் செய்ய அறிவியல் முயன்று வெற்றியும் பெற்றுவருகிறது. குழந்தை பிறக்கவேண்டிய நேரத்தைக் கூடத் திட்டமிட்டுத் தருகிறது நவீன மருத்துவம். ஆனால் இறப்பு? மரணங்களைத் திட்டமிடவோ, தள்ளிப்போடவோ முயன்ற முயற்சிகளுக்கெல்லாம் கிடைப்பன தோல்விதான். இறப்பின் கணம் எதுவெனச் சொல்லுதல் யார்க்கும் எளிதன்று.மரணவாசல் எப்போதும் திறந்தே கிடக்கிறது. அழைத்துச் செல்லும் வாகனங்கள் சத்தமில்லாமல் வருகின்றன. ஏறிச்செல்பவர்களும் மௌனமாய் ஏறுகிறார்கள். இருப்பவர்கள் மட்டும் கதறிக் கழிக்கிறார்கள். ஓலத்தின் உச்சத்தில் உளறிக் கொட்டுகிறார்கள். இதற்கிடையில் வரப்போகும் மரணத்தைச்சொல்லும் தூதுவன் வந்தான் என்று சொல்லும் மனிதர்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். இறப்பை முன் அறிவிப்பு செய்யும் ஆற்றல் இயற்கைக்கும் மனித உடம்புக்கும் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கவே செய்கிறது. “மதுரையில் வந்து கோவலன் தலைவெட்டப்பட்டுச் சாவான்” என்று சொல்லவில்லை என்றாலும், “இந்நகரத்திற்குள் நுழைவது நல்லதல்ல; சோகம் ஒன்று நிகழப்போகிற” தென வைகை ஆற்றில் படர்ந்திருந்த செடிகொடிகள் கண்ணீர் வ...

எழுதிப்பழகிய கைகள்- யுவன் சந்திரசேகரும் வண்ணநிலவனும்

 யுவன் சந்திரசேகர்:  காலகட்டத்தின் கதை இம்மாத உயிர்மையில் வந்துள்ள ’நகுதற் பொருட்டு’ கதையின் நிகழ்வெளிகளாகச் சேலமும் மதுரையும் உள்ளன. ஆனால், இரண்டும் ஒன்றுபோல இடம் பெறவில்லை. சேலம் நிகழ்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திக் காட்டப் படுகிறது. ஆனால் மதுரை நினைக்கப்படும் வெளியாக - கடந்த கால நிகழ்வுகளின் வெளியாக விரிந்துள்ளது.

வெப்பம் குளிர் மழை -காலப்பிழையான சினிமா

படம்
  குழந்தையின்மை அல்லது மலட்டுத் தன்மையை எதிர்கொள்ளும் கணவன் மனைவி உறவைப் பேசிவதாக வந்துள்ள வெப்பம் குளிர் மழை என்ற சினிமா இந்தக் காரணங்களாலேயே கவனிக்கப்படாத - பேசப்படாத சினிமாவாக ஆகியிருக்கிறது. குழந்தையின்மையைப் பெரியதொரு சிக்கலாகப் பேசிக் கொண்டிருக்கும் மனநிலையை மாற்றும் விதமாக நவீன மருத்துவம் பேச்சைத்தொடங்கிப் பத்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அதற்கெனத் தனியாக இயங்கும் மருத்துவமனைகள் பற்றிய பேச்சுகளை வானொலிகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் தினசரி விளம்பரங்களாகச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.