இடுகைகள்

பண்பாட்டுவெளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விலகிச் செல்லும் அந்தரங்கம்

படம்
திருமணம் நடக்கும் அந்த மண்டபம் எனக்குப் புதிய ஒன்று அல்ல. திருமணத்தில் கலந்து கொள்ள வருவது இதுதான் முதல் முறை. இப்போது மண்டபம் இருக்கும் இடத்தில் திரை அரங்கம் இருந்தது. அப்போது இந்த இடத்திற்குப் பல முறை வந்திருக்கிறேன். நூறு நாட்களுக்கும் மேலும் ஓடி வெள்ளி விழாக் கொண்டாடிய படங்கள் சிலவற்றை அந்த திரை அரங்கில் தான் பார்த்தேன். எல்லா வசதிகளும் கொண்ட திருமண மண்டபமும் வணிக வளாகமும் என அந்த இடம் மாறி விட்டது.

கமலென்னும் கட்டியங்காரன்

படம்
  முன்குறிப்புகளோடு ஒவ்வொரு பாத்திரத்தையும் காட்டி, அவர்களின் முன்னடையாளங்களோடு தொடர்புடைய ஆட்டம்பாட்டம் கொண்டாட்டமெனக் கலக்கியெடுத்து உருவாக்கப்பட்ட ஆரம்பம் புதுநிகழ்ச்சிக்கான ஆரம்பம் என்ற அளவில்தான் ஈர்த்தது. அந்தத் தொடக்கம், அடுத்தடுத்த வாரங்களில் நடந்த சின்னச்சின்ன நிகழ்வுகள் வழியாக நல்திற நாடகத்தின் முடிச்சாக(Conflict) மாறியது. அம்முடிச்சுக்குப்பின்னால் பிரிந்துநின்ற அணிச்சேர்க்கை ஒருகுடும்பத்திற்குள் பிரிந்துந ிற்கும் பங்காளிகள் அல்லது உறவுகள் என்பதைத்தாண்டியது.

மயிலாடிய கானகங்கள்

கடந்த ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில் இப்படி வெயில் அடிக்கவில்லை. ஆகஸ்டு கடைசி வாரத்திலேயே வெயில் குறைந்து ஆடிக் காற்று பரபரவென வீசியது. இந்த ஆண்டு ஆடிக் காற்றின் வேகம் ஒரு சில நாட்கள் தான் இருந்தது. திரும்பவும் வெயில் பங்குனி உத்திரத்தின் போது அடிப்பது போல அடித்தது.

சல்லிக்கட்டு: சில குறிப்புகள்

ஒழிக ! வாழ்க!! குரல்களின் ஒலியளவு ======================================== ஒவ்வொருமொழியிலும் சொற்கள் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன. அவை பெயர்(Noun) வினை(Verb). இவ்விரண்டையும் கூடுதல் அர்த்தப்படுத்தப்படுவனவே இடைச்சொற்களும் உரிச்சொற்களும். தமிழில் மட்டுமே இடை, உரி என்பன தனிப்பட்ட வகையாக இருக்கின்றன. இவைகளைப் பெரும்பாலான மொழிகள் முன்னொட்டுகளாகவும் சில மொழிமொழிகளில் பின்னொட்டுகளாகச் சொல்லப்படுகின்றன. வாழ்க!, ஒழிக! இவை வினைமுற்றுகள். வேண்டும்! வேண்டாம் ! இவையும் வினைமுற்றுகளே  முன்னிரண்டும் வியங்கோள் வினைமுற்றுகள் பின்னிரண்டும் ஏவல் வினைமுற்றுகள்

பொங்கல் : எனது நினைவுகள்

மதுரை மாவட்டக்கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன் நான். சல்லிக்கட்டு தனியான விளையாட்டு அல்ல. போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் என 3 நாட்கள் கொண்டாடப்படும் விழாவொன்றின் பகுதி அது. மாடுகளும் ஆடுகளும் கோழிகளும் வளர்க்கப்பட்ட வீடுகளில் - கிராமங்களில் சாதிகள் வேறுபாடுகளை நினைக்காமல் கொண்டாடிய விழா பொங்கல் திருவிழா. வெள்ளையடித்தல், வீடு மெழுகுதல், புது அடுப்புப்போடுதல் தொடங்கி ஆடுமாடுகளும் கன்று காலிகளும் உழவுகருவிகளும் வண்டிகளும் கழுவிச் சுத்தமாக்கப்படும்போது பழையன கழிக்கப்படும். அந்தநாள் போகி.

சல்லிக்கட்டு - பொங்கல் - புத்தாண்டு.

படம்
பண்பாட்டுத் தளத்தை முதன்மைப்படுத்தித் தமிழ் நாட்டின் ஆட்சியை த் திராவிட முன்னேற்றக் கழகம் பிடித்து அரைநூற்றாண்டு ஆண்டு ஆகப்போகிறது. ஆயிரத்தித் தொள்ளாயிரத்து அறுபத்தியேழில் சி.என். அண்ணாதுரை முதல்வராக ஆனவுடன் முதன்மை அளித்துச் செய்தவைகள் இரண்டு. ஒன்று சென்னை மாகாணம் என அழைக்கப் பட்ட பெயரைத் தமிழ்நாடு என மாற்றும் சட்டத்தைக் கொண்டு வந்தது. இரண்டாவது படியரிசித் திட்டத்தை நிறைவேற்றியது. இந்த இரண்டில் ஒன்று லட்சியம் சார்ந்தது ; இன்னொன்று வாக்குறுதிகள் சார்ந்தது.

மதுரை மாவட்டத் திருவிழாக்கள்...

திருவிழாப் பார்க்கும் ஆசை யாருக்குத்தான் இருந்ததில்லை. சின்ன வயசிலிருந்தே பலவகையான திருவிழாக்களைப் பார்த்திருக்கிறேன். வருடந் தோறும் எனது கிராமத்தில் நடக்கும் மாரியம்மன் திருவிழாவைத் திருவிழா என்று சொல்வதில்லை. ‘சாட்டு’ என்றுதான் சொல்வோம். வைகாசிமாதம் கடைசி செவ்வாய் ஊர்கூடி மாரியம்மன் சாட்டு நடந்தால், அடுத்த வாரம் செவ்வாய் ‘கலயம்’ எடுப்புவரை ஊர் சுத்தமாக இருக்கும்.

தொடரும் பாவனைப் போர்கள்

படம்
தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டுவிழாவை முன்வைத்து  -------------------------------------------------------------------------------------------------------  தனித்தமிழ் இயக்கத்திற்கு வயது 100 ஆகிறது. 1916 இல் தோற்றம்கண்ட அவ்வியக்கத்திற்கு அந்த நேரத்தில் ஒரு தேவை இருந்தது. ஒருவிதத்தில் தமிழ்மொழி சந்தித்த நெருக்கடியினால் உருவான பெருநிகழ்வு. செய்யுள் வடிவில் இருந்த தமிழ்க்கல்வி மற்றும் வெளிப்பாட்டு நிலைகள் உரைநடைக்கு மாறியபோது உருவான நெருக்கடிகளின் விளைவாக உருவானது தனித்தமிழ் இயக்கம்.  மணிப்ரவாளத்தின் ஆதிக்கம் தமிழ்நடையைச் சீர்குலைக்கிறது எனக் கருதிய தமிழ்ப் புலவர்களும் தமிழர்களும் இணைந்து உருவாக்கிய தனித்தமிழ் இயக்கம் வரலாற்றின் தேவை. தமிழ் மொழியில் சொல்லுருவாக்கத்தின் அடிப்படைகளைச் சொன்ன முதன்மைத் தமிழ் இலக்கணமான தொல்காப்பியம் மொழிமுதல் எழுத்துகள், மொழியிறுதி எழுத்துகள், மெய்மயக்கம் போன்றவற்றைச் சொல்லியிருக்கிறது. அதாவது ஒருசொல்லின் முதலில் நிற்கக்கூடிய தமிழ் எழுத்துகள் எவை; சொல்லின் இறுதியில் நிற்கக்கூடிய எழுத்துகள் எவை; இடையில் நிற்கும்போது உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் எவ்வாறு அடுத்தட

பாரதீய ஜனதாவின் நமதே நமது :பின் காலனியத்தின் நான்காவது இயல்

படம்
இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய். நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும் மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும். வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது. நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத்தொடர்களில் எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது. அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரவுகின்றன. இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!

தினங்களைக் கொண்டாடுதல்

படம்
எல்லா தினங்களையும் கொண்டாடித் தீர்ப்பதென்று முடிவெடுத்துக் கொண்டாடி மகிழ்கின்றோம். ஜூலை 6, உலக முத்த தினம். முகநூலில்  வாசித்த முத்தக்கவிதைகளைத் தொகுத்தால் சத்தமிடும் முத்தம் என்றொரு தொகுதி நிச்சயம் கிடைக்கும். முத்தமிட்டுக்கொள்ள வாய்ப்பற்றவர்கள் சத்தமாய்ச் சொல்லிக் கவிதையெழுதி யிருக்கிறார்கள். சொல்லாமல் முத்தமிட்ட ஜோடிகள் சில கோடிகள் இருக்கலாம்.

சமஸ்: அமைப்புகளை நோக்கி அதிகம் பேசும் குரல்

படம்
காலைத் தினசரிகளில் நான் காலையில் வாசிப்பன செய்திகள். நீண்ட செய்திகள் - பலரும் பங்கேற்ற நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இருந்தால் அன்றைய காலை வாசிப்பில் செய்திக் கட்டுரைகள் ஒதுக்கி வைக்கப்பட்டு மாலைக்குரியதாக மாறிவிடும். அலுவலகம் போய்விட்டு வந்து மாலையில் படிப்பேன். மாலையில் படிக்கலாம் என வைத்துவிட்டுப் போன பல செய்திக் கட்டுரைகள் படிக்கப்படாமலே நின்றுபோய்விடுவதுமுண்டு.

பூமணி! நீண்ட நாள் வாசகனின் இந்த வாழ்த்தை ஏற்றுக் கொள்ளுங்கள்

படம்
1960- களுக்குப் பின்பு எழுதத் தொடங்கிக் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களாக அறியப்படும் பலரும் அவர்களின் முதல் நாவலின் வழியாகவே திரும்பத் திரும்ப அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.பூமணியும் அதற்கு விலக்கில்லை அவரது முதல் நாவலான பிறகு வோடு சேர்த்தே அடையாளம் காணப்படுகிறார். வட்டாரம் சார்ந்த எழுத்தாளர்களாக அறியப்படும் பலரும் அத்தகைய அடையாளம் பெறாமல் தப்பிக்க முடியாது. ஆனால் ’முதல் படைப்பே முதன்மையான படைப்பு’ என்ற மனோபாவம் விமரிசன அடிப்படைகள் அற்று உருவாக்கப்படும் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் எனக்கில்லை.

தமிழ் என்பது நபர்கள் அல்ல

படம்
வெற்றித்தமிழர் பேரவை - 2014,நவம்பர்,11 இல் உத்தர்கண்ட் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் என்பவருக்குச் சென்னையில் பாராட்டுவிழா ஒன்றை நடத்திய அமைப்பு அல்லது அறக்கட்டளை. இவ்வமைப்பு பாடலாசிரியர் வைரமுத்துவின் தமிழ்ப் பணியோடு தன்னை இணைத்துக் கொண்ட ஒன்று.

ஜெயமோகனின் வெண்முரசு வெளியீட்டு விழா: பின் நவீனத்துவ கொண்டாட்டங்களின் வகைமாதிரி

படம்
வெண்முரசு வெளியீட்டுவிழாவைச் சென்னையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்தப் போகிறது. இந்நிகழ்வின்மூலம் திரு மு. கருணாநிதி, இரா. வைரமுத்து ஆகியோர் வரிசையில் இணைக்கப்படுகிறார் ஜெயமோகன். தங்களின் எழுத்துகளைச் சந்தைப்படுத்தும் உத்தியில் இதுவரை அவ்விருவரும் பின்பற்றிய அதே உத்திதான் இதுவென்றாலும் நிலைப்பாட்டில் பாரதூரமான வேறுபாடுகள் உள்ளன.

ஜெயமோகனின் வெண்முரசு வாசிக்கத் தொடங்கியுள்ளேன்:

ஆன்மா தொலையாத அந்தக் காலத்தில் எனது கிராமத்தில் நள்ளிரவு வரை கதை சொல்லிகள் கதை சொல்லிக் கொண்டிருப்பார்கள். விசேசமான,விதம் விதமான கதை சொல்லிகள் எல்லாம் உண்டு. ஒரு சுவாரசியமான கதை சொல்லி இருந்தார். அவர் பெயரும் ராமசாமி தான்.

தமிழர்கள் இப்படி மட்டும் தான் இருக்கிறார்களா ஜெயமோகன்?

படம்
இப்படி இருக்கிறார்கள் என்று தலைப்பு வைத்து ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=36719 எழுதிய அந்தக் கட்டுரை ”இப்படிப் பட்ட ஒரு கூட்டம்  தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறது” என்று எழுதிக் காட்டியதோடு முடித்திருந்தால் தனது வலைப்பூவில் அவர் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளில் ஒன்று என நினைத்து வாசிக்கப்பட்டு விடப்பட்டிருக்கும். அந்த வாய்ப்பை வழங்காமல் இப்படிப்பட்ட கூட்டம் இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து சொல்ல முயன்றதன்

வைரமுத்துவின் தோழிமார் கதை- ஒரு பார்வை

படம்
அவரே இந்த வரிகளைக் கவிதை எனச் சொல்லவில்லை. வட்டார வழக்கில் ஒரு நாட்டுப் பாட்டு என்றுதான் தொடங்குகிறார். வைரமுத்து வாசிக்கும் வரிகளை படக் காட்சித் தொகுப்போடு முதலில் பாருங்கள். நாட்டுப் பாட்டை அதற்கான பாடகர்களைக் கொண்டு பாடச் செய்யாமல், தனது கவிதையை வாசிக்கும் தொனியில் அவரே வாசிக்க, அதற்கு உரையெழுதுவதுபோல ஒருவர் படக்காட்சிகளை அடுக்கித் தந்திருக்கிறார். படக்காட்சிகளும் வரிகளின் வாசிப்பும் முடிந்தபோது எனக்கொரு சந்தேகம் எழுந்தது. அதனைச் சந்தேகம் எனச் சொல்வதைவிட எல்லாவற்றையும் ’விமரிசனப்பார்வை’யோடு வாசித்துப் பழகியதால் தோன்றிய கேள்வி என்று சொல்வதுதான் சரி. தோழிமார் கதை எனத் தலைப்பு வைத்ததற்குப் பதிலாக ஒரு புங்கமரத்தின் கதை எனத் தலைப்பிட்டிருக்கலாம் என்று தோன்றியது. மூன்று வருடங்களாக (2008 ஜூன் மாதம் 19 ந்தேதி இணையத்தின் ஒளிக்காட்சி வடிவமான யு-ட்யூப்பில் பதிவு செய்யப்பட்டு புகுத்தப்பட்டுள்ளது).இது இணையத்தில் இருக்கிறது நான் முதன் முதலில் பார்த்த போது இருந்த எண்ணிக்கை 92 078 நீண்ட நாட்களாக மாற்றம் இல்லாமலேயே இருக்கிறது. எப்போதாவது ஒன்றிரண்டு பேர் அதனைத் திறந்து பார்க்கிறார்கள்.கேட்கிறார்கள்

நாட்டுப்புற இயலைச் சுற்றி

படம்
தேசப்பற்று, தேசிய ஒருமைப்பாடு, வலிமையான பாரதம் எனத் தனக்குப் பிடித்தமான கருத்தியலின் நோக்கிலிருந்து ஆய்வுகளின் பின்னணி நோக்கங்களைக் கேள்விக்குள்ளாக்கும் ஜெயமோகனோடு ஒன்றுபட்டும் முரண்பட்டும் நிற்கும் இந்தக் கட்டுரை ஆறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. தீம்தரிகிட இதழில் வந்த கட்டுரையைச் சூழலின் தேவை கருதிப் பதிவேற்றம் செய்கிறேன்.

திரும்பத்திரும்ப வரும் கண்ணகி :

படம்
எல்லாச் சின்னங்களும் ஆபத்தானவை; இனம், இன உணர்வு உள்பட என்று  நான் சொன்னால் பலர் சிரிக்கிறார்கள். ஏதேனும் ஓர் அடையாளம் தேவை என்கிறார்கள். இப்போது கண்ணகி சில தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம், எப்படி? அவள் கற்புக்கரசி. கணவன் செய்த பச்சைத் துரோகத்தை மன்னித்து ஏற்றவள். தவறாக அவன் கொல்லப்பட்டபோது அரசனிடம் சென்று நீதி கேட்டவள். அவளது கற்பே அவளது பலம். கண்ணகியை நவீனப் பெண் தனது அடையாளமாக ஏற்க மாட்டாள் என்று நான் சொன்னபோது ஒரு எழுத்தாள நண்பர் சொன்னார். ‘ நீங்கள் பார்ப்பணர்; அதனால் தமிழ்ப் பண்பாடு புரியாது உங்களுக்கு’

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்: பண்டங்களாக்கப்படும் பண்டிகைகள்

படம்
 வெற்றி பெற்ற திரைப்படத்தின் நாயகி ஆங்கிலத்தில் சொல்லும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை பன்னாட்டு கைபேசி வியாபார நிறுவனமோ, சொகுசுக்கார் தயாரிப்பு நிறுவனமோ சொல்ல வைக்கின்றன. அதனைக் கேட்பதற்காகக் காலை எட்டு மணி முதல்  மொத்தக் குடும்பமும் தயாராகத் தொலைக்காட்சி முன்னால் அமைதியாக இருக்கிறது.  ஏழு மணிக்கு வழங்கிய சமயச் சான்றோரின் உரையை வழங்கியவர்கள் தங்க ஆபரணங்களை மீன்கடை வியாபாரம் போல் பரப்பி விற்கும் நிறுவனமாக இருக்கிறது.