இடுகைகள்

அயல் பயண அனுபவங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒன்றியங்களால் ஆனது இவ்வுலகு

பெரும்பான்மை - மக்களாட்சிக் காலத்தின் புனிதச் சொல். எல்லாப் புனிதச்சொற்களின் பின்னால் தன்னலம் ஒளிரும்; அபத்தம் ஒழிந்துகொள்ளும். இது எனது நம்பிக்கை. வரலாறு பலதடவை இதை நிரூபித்திருக்கிறது. இன்று திரும்பவும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ‘பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும்’ அந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். 48.1சதவீதம்பேர் பிரியவேண்டாம் என்றுசொல்ல, 51.9 சதவீதம்பேர் பிரிவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். பெரும்பான்மையென்பதைப் புனிதச் சொல்லாக ஆக்கிய சதவீதம் 3.8 சதவீதம் தான். புனிதத்தின் முதல் பலி. அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகிவிட்டார்.

க்யூபெக் : தனி அடையாளம்பேணும் முன்மாதிரி

படம்
மாண்ட்ரியால் நகரத்திலேயே முழுமையும் பிரெஞ்சு எழுத்துகள் தான் எழுதப்பெற்றிருந்தன. 10 மாநிலங்கள் கொண்ட கனடா ஒன்றியத்தில் அண்டோரியா மாநிலத்திற்கு அடுத்துப் பெரிய மாநிலம் க்யூபெக் தான். இயற்கைவளமும் தொழிற் சாலைகளும் நிரம்பிய க்யூபெக் மாநிலத்தில் 80 சதவீதம் பிரெஞ்சு மொழிக்காரர்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றிலும் பிரெஞ்சு அடையாளத்தைத் தக்கவைப்பதில் ஆர்வத்தைக் காட்டிய க்யூபெக் மாநிலத்தின் அண்மைக்கால வரலாறு தமிழக வரலாற்றோடும் ஈழப்போராட்டத்தோடும் உறவுடையதாக இருக்கிறது.

மாண்ட்ரியால் : ஐரோப்பிய நகரத்தின் நகல்

படம்
நிலவியல் என இப்போது சொல்லப்படும் பாடம் எனது பள்ளிப் படிப்பில் பூகோளமாக இருந்தது. கனடா என்றொரு நாட்டைப்பற்றிப் பூகோளப் பாடம் சொன்னதெல்லாம் பனிப்பொழிவுகள் நிரம்பிய வடதுருவ நாடு என்பதாக மட்டுமே நினைவில் தங்கியிருந்தது. நதிகள், மலைகள், நகரங்கள், மக்கள், தொழில் என அதன் உள்விவகாரங்களெல்லாம் அப்போது ஒன்றும் தெரியாது. அந்தத் தகவல்களைத் தாண்டி மூளைக்குள் பதிந்து அழியாமல் இருக்கும் கனடிய நகரத்தின் பெயர் டொறொண்டோ; அதற்கடுத்து மாண்ட்ரியால். இரண்டுமே ஒரே வருடத்தில் திரும்பத் திரும்ப உச்சரிக்கும் பெயர்களாகவும் காதில் விழும் பெயர்களாகவும் ஆன வருடம் 1975- 76 ஆம் கல்வியாண்டு. 

தனிமனிதனென்னும் அரசியல் விலங்கு

ஒரு நிகழ்வு : பலபார்வை என்பது அறிவுச் சமூகத்தின் பண்பாடு. இன்னொரு விதத்தில் அது பன்னாட்டு மூலதனத்தின் தேவையும் கூட. அமெரிக்காவில் பன்னாட்டு மூலதனக் குழுமங்கள் தான் ஊடகங்களைக் கட்டுப்படுத்து கின்றன. கல்விக்கூடங்களை நடத்துகின்றன. ஆய்வுகளுக்கு நிதி வழங்குகின்றன. 2000 -க்குப் பின்னர் உலகமெங்கும் உருவாகிவரும் அடையாள அரசியல் சொல்லாடல்கள் கூடத் தன்னெழுச்சியாகத் தோன்றுகின்றனவா? பன்னாட்டுக் குழுமங்களின் மறைமுகத்தூண்டுதலால் உருவாக்கப்படுகின்றனவா? என்ற ஐயங்களும் முன்வைக்கப்படுகின்றன.

மூடுதல் அல்ல; திறப்பு

படம்
கனடாவின் அரசியல் தலைநகர் ஒட்டாவா. அங்கே பார்க்கவேண்டியன என்று பட்டியல் ஒன்றைத் தயாரித்தபோது பட்டியலில் நாடாளுமன்றம் முதலில் இருந்தது. பிறகு நதியோரத்துப் பூங்காவும் ராணுவத்தின்காட்சிக்கூடமும் விலங்குப் பண்ணையும் இருந்தன. அப்புறம் வழக்கம்போல கடைகள் நிரம்பிய நகர்மையம். விலங்குகளையும்,   ஆயுதங்களையும்   பார்ப்பதற்குப் பதிலாகப் பக்கத்திலிருக்கும் கிராமங்களைப் பார்க்கும் விதமாக நகரத்தைவிட்டு விலகி எனது கருத்தைச் சொன்னேன். அதன்படி ஒட்டாவா சுற்றல் திட்டம் உருவானது. முதல் இடம் நாடாளுமன்றம். அடுத்து பூங்கா, பிறகு ஆற்றோர நடைப் பயணம். அதன் பிறகு 50 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மலையருவியும் அதன் வழியான கிராமங்களும் இதுதான் வரிசை.

ஆயிரம் தீவுகளுக்குள் ஒரு நீர்ப்பயணம்

படம்
யோர்க் பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டோடு துறைசார்ந்த ஒரு நிகழ்வு முடிந்தது. இனிச் சுற்றுலா தான். பாஸ்டனிலிருந்து கிளம்பும்போதே கனடாச் சுற்றுலாத் திட்டம் தயாராக இருந்தது. அதை வட்டச்சுற்று எனச் சொல்ல முடியாது. நீண்ட செவ்வகமென்று சொல்லலாம்.  வணிகத் தலைநகரமான டொறொண்டோவுக்குப் பிறகு அரசியல் தலைநகரமான ஒட்டாவா. அதன் பிறகு பிரெஞ்சு அடையாளங்களோடு இருக்கும் மாண்ட்ரியாலும் க்யூபெக்கும். இடையில் வரும் ஏதாவது இடங்களைப் பார்ப்பதுதான் திட்டம்.

டொறொண்டோவில் மூன்று நாட்கள்

படம்
மே. 6 முதல் 8 வரை மூன்று நாட்கள் டொறொண்டோவில் தங்குவது என்பது திட்டம். மூன்று நாளில் இரண்டு நாட்கள் எனது இருப்பு கருத்தரங்கு நடக்கும் யோர்க் பல்கலைக்கழகம். குடும்பத்தார் டொறொண்டோவைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். இந்தத் திட்டமிடலெல்லாம் மகன் பொறுப்பு. அவர்களுக்கு முழுமையான சுற்றுலா; எனக்கோ பாதிதான் சுற்றுலா. மீதிப்பாதி இலக்கியச் சந்திப்புகள் சார்ந்த கல்விச்சுற்றுலா.

“தெள்ளத்தெளிவாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்”

படம்
சாட்சியமாய்த் தங்குதல் புலப்படாத வன்கொடுமைகள், பேசமுடியாக் குற்றங்கள் -   மே, 6, 7 தேதிகளில் நடந்த அக்கருத்தரங்கின் தலைப்பு. கருத்தரங்கு நடந்த இடம் கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில். இந்தக் கருத்தரங்கம், தமிழியல் ஆய்வுகள் என்னும் பொருண்மையில் டொறொண்டோவில் நடக்கும் 11 வது கருத்தரங்கம். 2006 தொடங்கி நடக்கும் தமிழியல் ஆய்வுகள் என்னும் இருமொழிக்கருத்தரங்கின் ஏற்பாட்டில் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் கவிஞர் சேரன்.

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும்

படம்
வேறுவழியில்லை; சாளரங்களைத் திறந்தே   ஆகவேண்டும்.   நான் கடல், நான் ஆறு, நான் நதி, நான் ஓடை,   நான் அருவியெனத் தட்டும்போது இழுத்துமூடி இருப்பது எப்படி? மழை. இது மழையைத் தவிர வேறென்ன?

அது ஒரு தத்துவப்போராட்டம்

படம்
உலகமயத்திற்குப் பின் தமிழக இளைஞர்களும் யுவதிகளும் இல்லாத பெருநகரங்கள் இல்லை என்னுமளவிற்குச் சின்னச்சின்ன நாடுகளிலும் வாழ்கிறார்கள் தமிழர்கள். அதிலும் மனிதவளத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், கனடாவிலும் ஒவ்வொரு பெருநகரத்திலும் குடும்பத்தோடு வாழும் இந்தியர்களைத் தேடி அலையவேண்டியதில்லை. வாரக்கடைசியைக் கழிப்பதற்கான இடங்களில் அரைமைல் தூரம் நடந்தால் ஒரு இந்தியக் குடும்பத்தைப் பார்க்கலாம். ஒரு மணிநேரம் செலவிட்டால் ஒரு தமிழ்ப் பேச்சைக் கேட்கலாம்.

நீளும் வாரக்கடைசிகள்

படம்
ஒவ்வொரு கம்பத்திலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடியை ஏற்றித் தேசப்பற்றைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கர்கள், தேச முக்கியத்துவம் வாய்ந்த யாராவது இறந்ததைக் கொடியை இறக்கி அடையாளப்படுத்துகிறார்களோ என்ற ஐயத்தோடு இணையத்திற்குள் நுழைந்தபோது அப்படியொன்றும் நடக்கவில்லை என்பது புரிந்தது.  அரைக்கம்பத்தில் கொடியை இறக்கிப் பறக்கவிடுவது நினைக்கப்படும் நாளின் அடையாளம் என்பது புரிந்தது.

நீர்நெருப்பு :கலைப்பொருள் உருவாக்கிய பெருநிகழ்வு

படம்
புரொவிடென்ஸ், ரோட் தீவின் தலைநகரம் அந்த நகரின் மையத்தில் ஓடுகிறது வூனாஸ்க்வாடக்கெட் என்னும் சிற்றாறு. அதன் கரையில் இருக்கும் சட்டசபை மேடான பகுதியாக இருக்கிறது. அங்கிருந்து தொடங்குகிறது. நீர்வழிப் பூங்கா.பூங்காவின் முடிவில் தொடங்கும்  நகர்மையத்திலிருக்கும் அந்தப் பெருஞ்சிலையிலிருந்து விழா நடக்கும் அந்த மூன்று குறுக்குப்பாலங்களும் இருக்கின்றன.  20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருகலைஞனின் கொடையாகத் தொடங்கிய நீர் நெருப்புப் பெருவிழாவைப் பெரும் நிகழ்வாக்கியிருக்கிறார்கள் அந்த நகரவாசிகள். ஒவ்வொரு கோடையிலும் மே கடைசியில் தொடங்கி நவம்பர் முதல்வாரம் வரை நடக்கும் அந்நிகழ்வுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகமுழுவதுமிருந்து வந்துபோகிறார்கள். நேற்றுக் கூடியிருந்த கூட்டத்தினிடையே நடந்துபோனபோது இதுவரை காதில் விழாத மொழிகளின் ஒலிகளும் கேட்டன; அனைத்துக் கண்டத்து முகங்களும் தெரிந்தன. இந்த ஆண்டில் மொத்தம் ஒன்பது நிகழ்வுகளைத் திட்டமிட்டிருக்கிறார்கள். முதல் நிகழ்வு நேற்று (28/05/16).

வெயில் நன்று; கடல்காற்று இனிது

படம்
தொடர்ச்சியான பனிப்பிரதேச வாழ்க்கை மஅனிதத்தோலின் நிறத்தை உருவாக்குவதில் பங்குவகிக்கிறது. வெள்ளைத்தோல் கொண்ட ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்கக் கண்டத்து மனிதர்களுக்கும் வெள்ளைத்தோல் ஒருவரம் என்றால், அதற்குத் தேவையான வைட்டமின் தேடுவது ஒருவேலை. சூரியவெளிச்சமும் வெப்பமும் தொடர்ச்சியாகக் கிடைக்காமல் போகும் நிலையில் வைட்டமின் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவது அவர்கள் சந்திக்கும் ஒருபிரச்சினை.

மழலையர் பள்ளிகள்.

படம்
கூட்டுக்குடும்ப அமைப்பைத் துறந்து தனிக்குடும்ப அமைப்புக்குள் நுழையவேண்டிய நெருக்கடியை உருவாக்கியது முதலாளித்துவப் பொருளாதாரம். முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கருத்தியல் உருவாக்கத்தின் நல்விளைவுகளில் ஒன்று

கலையைப் பொதுவில் வைப்பது

படம்
தன்னிடம் ஒரு கலையுணர்வு இருக்கிறது; அதனைப் பொதுவில் வைக்கும்போது முழுமையடைகிறது என்ற நம்பிக்கை இந்திய மனிதர்களிடம் இல்லையென்றுதான் கூறவேண்டும். கோ இல்கள் தான் கலை வெளிப்பாட்டுக்களங்களாக இருந்திருக்கின்றன.

துலிப் மலர்க்காட்சி: நன்றியின் வண்ணங்கள்.

படம்
அந்த விழாவைக் காணும் வாய்ப்புக் கொஞ்சம் தவறிவிட்டது.  கனடாவில் தேசியத்தலைநகர் ஒட்டாவிற்கு இன்னும் இரண்டு நாள் கழித்து வந்திருந்தால் அந்தப் பெருவிழாவைக் கண்டு களித்திருக்கலாம். ஒவ்வோராண்டும் 5 லட்சம் பேருக்கும் அதிகமாக வந்து களித்துக் கொண்டாடிப் போகும் துலிப் மலர்க்காட்சி விழாவிற்காக ஒட்டாவா நகரம் தயாராகிக் கொண்டிருக்கிறது இந்த ஆண்டுக்கான ( 2016) துலிப் மலர் விழா மே, 12 முதல் 23 வரை நடக்கப்போகும் இன்னும் இரண்டு நாள் கழித்து வந்திருந்தால் விழாவில் பங்கேற்றிருக்கலாம். என்றாலும் மலர்கள் வந்திறங்கிவிட்டன. நடப்பட வேண்டிய இடங்களில் நட்டுவிட்டார்கள். மொட்டாகவும் விரிந்தும் மலர்கள் வண்ணவண்ணமாய் விரிந்துகிடக்கின்றன.

ஆஸ்லோவில் பொங்கல் விழா

படம்
பங்கேற்ற பொங்கல் விழாக்களில் இப்போதும் நினைவில் இருக்கும் இன்னொரு பொங்கல் விழா நார்வே நாட்டுத் தலைநகர் ஆஸ்லோவில் கொண்டாடப்படும்   தமிழர் திருநாள் கொண்டாட்டங்க ள். தங்கள் அடையாளமாக இருக்கும் மொழியின் வழியாக மட்டும் அல்லாமல் அதன் மையமான கொ ண்ட்டாட்டத்தின் வழியாகவும் தமிழ் அடையாளத்தைத் தக்க வைக்க வேண்டும் என நினைக்கும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் , தாங்கள் வாழும் நாடுகள் ஒவ்வொன்றிலும் பொங்கல் விழாவினைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். ஆஸ்லோவில் நடந்த இந்த விழாவில் (2013, ஜனவரி, 19) கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டுக் குழுமங்கள்: ஒரு நேரடி அனுபவம்

படம்
சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டுக் குழுமங்களுக்கு அனுமதி என்ற கொள்கை முடிவை மத்திய அரசு எடுத்து விட்டது. ஊடகங்களிலும் மேடைப் பேச்சிலும் எதிராக இருப்பது போலப் பாவனை பண்ணும் ஆளுங் கட்சியின் கூட்டணிக் கட்சிகளும், ஆளுங்கூட்டணியை எதிர்ப்பதாகப் பாவனை செய்யும் எதிர்க்கட்சியும், அதன் கூட்டணிகளும் வெளியில் மட்டுமல்ல; பாராளுமன்றத்திலும் எதிர்த்துப் பேசத்தான் போகிறார்கள்.