பிராமணியம் என்பது நபர்கள் அல்ல.
ஒரு காலகட்டத்தில் ஏற்புடையவர்கள் இன்னொரு காலத்தில் எதிர்ப்பாளர்களாகவும் எதிரிகளாகவும் ஆவதற்குப் பல காரணங்கள் இருக்கும். நமது கருத்து மாற்றங்கள் காரணங்களாக இருப்பதுபோல, அவர்களின் செயல்பாடுகளும் காரணங்களாவதுண்டு. சமூக ஊடகங்களின் வரவுக்கு முன்பு இவ்வகை மாறுபாடுகள் வெளியில் தெரியாமல் ஒதுங்குவதும் ஒதுக்குவதுமாக இருந்துள்ளது. இப்போது சமூக ஊடகங்களில் பாவனையாக இருக்கும் நட்புப்பட்டியல் என்பது உண்மையில் நட்புப்பட்டியல் அல்ல. தெரிந்தவர்; சந்தித்தவர்; நம்மை ஏற்கக்கூடியவர்; எதிர்ப்புநிலையை அறிந்துகொள்வதற்காகக் கவனிக்கப்படுபவர் எனப் பலநிலைகளில் இருப்பவர்களைக் கொண்ட பட்டியலே நட்புப்பட்டியல்.