இடுகைகள்

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்

படம்
தமிழ்க் கவிதையின் மரபைப் பற்றிப் பேசும் கல்வியாளர்கள் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் தமிழ் மரபின் தொடக்கம் எனக் கொள்வதில் பின் வாங்குவதில்லை. கல்வித்துறை சாராத இலக்கியத் திறனாய்வாளர்களும் கூடத் தமிழ்க் கவிதையியலின் தொடக்கம் இவையே என்பதை ஒத்துக் கொள்ளவே செய்வர். புதிய ஐரோப்பியத் திறனாய்வாளர்கள் அல்லது திறனாய்வுக்கோட்பாடுகள் எப்போதும் அரிஸ்டாட்டிலை மறந்துவிட்டுச் சொல்லாடல்களைத் தொடங்குவதில்லை. அவர் முன்வைத்த இலக்கிய அடிப்படைகளை உள்வாங்கியவர்களாகவும் அதிலிருந்து கிளர்ந்தெழுந்த கருத்தியல்களை முன்வைப்பவர்களாகவுமே தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். அரிஸ்டாடிலின் தொடர்ச்சி நான் அல்லது நானொரு புதிய அரிஸ்டாடிலியவாதி (New Aristotelian) என்று சொல்வதில் அவர்களுக்கு விருப்பம் இருக்கிறது; மகிழ்ச்சி இருக்கிறது.

இருவகைக் கவிதையாக்கம் - திட்டமிடலும் இன்மையும்

படம்
எழுத்தின் இயக்கம் இப்படிப்பட்டதுதான் என உறுதியாகச் சொல்லமுடியாது. கதைப் பின்னல் கொண்ட புனைகதை, நாடகம் போன்றனவற்றை முன் திட்டமிடலின்றி எழுதிவிட இயலாது. ஆனால் கவிதைக்குப் பெரிய அளவு முன் திட்டமிடல் தேவைப்படுவதில்லை. ஆனால் திட்டமிடாமல் எழுதிய கவிதைகளைப் பின்னர் ஒழுங்குபடுத்தும்போது ஒருவகைத் திட்டமிடல் அமையவே செய்யும். அண்மையில் முன்னுரைகள் எழுதுவதற்காக வாசித்த இவ்விரு பெண்கவிகளின் தொகுதிக்குள் ஒன்று முழுமையும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தன்மையைக் காணமுடிந்தது. இன்னொன்றில் பெரிய திட்டமிடல்கள் இன்றிய அன்றாட நிகழ்வுகளுக்குள் உணர்வுகளைத் தேக்கிவைக்கும் இயல்பைக் காணமுடிந்தது. 

இணைநேர்கோட்டுப் பயணிகள்

படம்
கடந்த ஐம்பதாண்டுத் தமிழ் அரங்கியலுக்குள் இருப்பதாக நினைப்பவர்கள் திருப்பத்திரும்ப உச்சரிக்கும் பெயர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எண்ணத்தொடங்கும்போதே முதல் கைவிரல்கள் மடங்குவதற்கு முன்பே வந்து விடக்கூடிய பெயர்களில் இவ்விரண்டு பெயர்களும் – சி.மௌனகுரு, இந்திரா பார்த்தசாரதி – கட்டாயம் இருக்கும். தமிழ் அரங்கியலுக்குள் இருப்பவர்கள் என்று சொன்னதை வைத்து, நடிகர்களாக, பின்னணிக் கலைஞர்களாக, இயக்குநர்களாக இருப்பவர்கள் என நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. தமிழ் மொழியைப் பாவித்து அரங்கியல் நிகழ்வுகள் நடக்கும்போது தவறாமல் பார்த்துவிடவேண்டும் என நினைக்கும் பார்வையாளர்களாக இருந்தால்கூடப் போதும் அவர்கள் இந்த இரண்டு பெயர்களையும் உச்சரித்து வியந்த பின் தான் நகரமுடியும்

பொன்னிநதி -சொல்லிலிருந்து காட்சிக்கு....

படம்
பொன்னியின் செல்வனில் இடம் பெறப்போகும் "பொன்னி நதி பார்க்கணும்” என்ற பாடலை நேற்று இரவு இரண்டு தடவை பார்த்தேன்; பின்னர் ஒரு தடவை கேட்டேன். இன்று காலையில் நடக்கும்போதும் இரண்டு தடவை ஒலிக்கோர்வையாகக் கேட்டேன். பிறகு காட்சி விரிவோடு ஒரு முறை பார்த்தேன். ”காவிரியாள் நீர்மடிக்கு .... ”என்ற சொல்லோடு அந்தக் காட்சி விரிகிறது என்றாலும் ‘பொன்னிநதி’ என்ற சொல்லோடுதான் பாடல் அழைக்கப்படப்போகிறது.

வகைப்படுத்துதல் வெளிப்பாடுகள்

தனது கவிதைகளை வாசிக்க நினைக்கும் வாசகருக்கு ஏதாவது ஒருவிதத்தில் உதவவேண்டும் என்று பெரும்பாலான கவிகள் நினைப்பதில்லை. கால வரிசையில் அடுக்கப்படும் கவிதைகள் கூடக் கவிதையை எழுதிய கவியின் மனப்பாங்கு மாற்றத்தைப் புரிந்துகொள்ள உதவும். அதைத் தாண்டி வகைப்பாடு செய்வதற்குச் சில அடிப்படைகள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவதொன்றைப் பின்பற்றலாம். அதனைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டால் வாசிப்பவர்கள் அதனைப் பின்பற்றிச் செல்வார்கள்.

பேச்சுமரபும் எழுத்துமரபும்

படம்
பேச்சும் எழுத்தும் உலகப்புகழ்பெற்ற பேச்சுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கன்னிப் பேச்சு, கடைசிப்பேச்சு, காவியப்பேச்சு, உரைவீச்சு, தீப்பொறி, வெடிப்பேச்சு, நரிப்பேச்சு எனப் பேச்சுபற்றிய பெயர்ச்சொற்களை நினைக்கும்போது பலர் நினைவுக்கு வரலாம். பேச்சால் வாழ்ந்தவர்களும் உண்டு; வீழ்ந்தவர்களும். ஆண்டவர்களும் உண்டு ; மாண்டவர்களும் உண்டு.