இடுகைகள்

ஒக்கூர் மாசாத்தியின் கவிதைகளில் நடத்தை உளவியல்

முன்னுரை: ஐரோப்பியர்கள் அனைத்துச் சொல்லாடல்களையும் அறிவியலின் பகுதியாக பேசத் தொடங்கிய காலகட்டம் 18 ஆம் நூற்றாண்டு. தொழிற்புரட்சிக்குப் பின்பு மதத்தின் இடத்தைப் பிடித்த அறிவுவாதம், தர்க்கம் என்னும் அளவையியல் வழியாக ஒவ்வொன்றையும் விளக்கிக் காட்டியது. மனிதனின் மனச் செயல்களை விளக்கமுடியாத ஒன்றாகவும், காரணகாரியங்களுக்கு உட்படாத ஒன்றாகவும் இருந்த போக்குக்கு மாறாக அதனைச் சமூக உளவியலின் ஒரு பகுதியாகப் பேசி விளக்கிக் காட்டியது.

பட்டினப்பாலையில் புழங்குபொருட் பண்பாடு

முன்னுரை ஒரு மனித உயிரி தனது வாழ்தலுக்காக அளிக்கப்பெற்றதாக நம்பும் காலத்தின் ஒரு பகுதியை தன்னை வந்தடையும் ஒரு பிரதியை வாசிப்பதற்காக ஒப்புக் கொடுத்து வாசிக்கும்போது வாசகராக ஆகிறார். பிரதி வாசிக்கப்படும் நோக்கத்திலிருந்து வாசிப்பவர்களின் அடையாளம் உருவாகிறது. நோக்கம் அற்ற வாசிப்பும் கூட வாசிப்பு தான்.

கையறு நிலையின் கணங்கள்

படம்
 இந்த ஆண்டு( 2021) இல் வெளிவந்த   கவிதைத் தொகுதிகள் இரண்டு அடுத்தடுத்து வாசிக்க க் கிடைத்தன. முதலில் வாசித்தது ரூபன் சிவராஜா வின் எழுதிக் கடக்கின்ற தூரம். இரண்டாவதாக வாசித்தது சுகன்யா ஞானசூரி யின் நாடிலி. எழுதியவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாமலேயே கூட இந்தக் கவிதைத் தொகுதிகளின் தலைப்பை   வைத்துக் கொண்டு கவிதைகள் எழுப்பப் போகும் சாராம்சத்தைப் பேசிவிடலாம்.

பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை : கிழக்கும் மேற்கும் சந்திக்கும் புள்ளி

படம்
ஐரோப்பாவில் நடந்த நடந்த அரசியல் மற்றும் தொழில் புரட்சிகளின் பின்னணியில் இருந்த சிந்தனைப் புரட்சிகளை உலகம் அறியும். தனிநபர்களின் சிந்தனை வெளிப்பாடுகளே சமூகத்தில் செயல் வடிவம் பெறுகின்றன. காலனிய காலத்து இந்தியாவில் தோன்றிய ஆளுமைகளின் சிந்தனை வெளிப்பாடுகளின் திரட்சியே இந்தியாவின் தேச விடுதலைப் போராட்டமாக மாறியது. தமிழ்நாட்டில் தோன்றிய தாய்மொழிப் பற்றின் வெளிப்பாடான தமிழிய இயக்கத்தின் தோற்றக்காரணிகளாக இருந்ததும் சில ஆளுமைகளின் சிந்தனை வெளிப்பாடுகளே. தமிழர்கள் தங்கள் தாய்மொழி மீது தீவிரமான பற்றையும் ஆன்மீகம் சார்ந்த தேசப்பற்றின் மீது ஈடுபாடும் பொருளியல் வாழ்க்கை சார்ந்து உலகப்பார்வையும் கொண்டவர்களாக இருப்பதின் பின்னணியில் சில குறிப்பிடத் தக்க ஆளுமைகளின் சிந்தனை வெளிப்பாடுகள் உள்ளன. அத்தகைய ஆளுமைகளில் முதன்மையானவர் எம் பல்கலைக்கழகத்தின் பெயராக இருக்கும் பேரா. சுந்தரம்பிள்ளை அவர்கள்.

தி.க.சண்முகத்தின் நாடகவாழ்க்கை

படம்
வரலாற்றை எழுதிவைக்கவும், வரலாற்றை எழுதுவதற்கான தரவுகளைத் தொகுத்து வைக்கவும் தவறிய சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்துவந்துள்ளது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நிலப்பரப்பான தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதுவதற்கான போதிய அடிப்படைச் சான்றுகளைத் தேடும் பணிகளே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நாட்டு வரலாற்றைத் தாண்டி கலை இலக்கிய வரலாறுகளை உருவாக்குவதற்கான தரவுகளைத் தேடுவதோடு ஓர்மையுடன் எழுதவேண்டும் என்ற அக்கறைகளும் குறைவாகவே உள்ளன. எழுத்துக்கலைகளான கவிதை, கதை, கட்டுரை போன்றவற்றின் வரலாற்றை உருவாக்குவதற்கு அந்தந்த வடிவங்களில் எழுதப்பெற்ற பனுவல்கள் நூலகங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தேர்ந்த வரலாற்றாய்வாளர்கள் முறையான இலக்கியவரலாறுகளை எழுதிவிடமுடியும்.

உலகின் தலைசிறந்த தேநீர்

படம்
தேநீர் குடிக்கத் தொடங்கிய காலத்திலேயே தேயிலைக் காடுகளைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கியது எங்களூரின் மலைக்காரர் குடும்பம். ஒரு பஞ்ச காலத்தில் பிழைப்புத் தேடி மூணாறு மலைத் தேயிலைத் தோட்டத்தில் வேலைக்குப் போனவரின் அடுத்த தலைமுறையினர் திரும்பவும் ஊரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். அப்போது நேரடித் தேயிலையை ஊருக்கு அறிமுகம் செய்தார்கள். அவர்கள் வீட்டுத் திருமணம் ஒன்றிற்கு மூணாறுக்கும் மேல் விரியும் தேயிலைக் காடுகளில் ஒருவாரம் தங்கியிருந்த நாட்கள் தேயிலைச் செடிகளைப் பார்க்கும் ஆர்வத்தை எப்போதும் தூண்டக்கூடியன. திருநெல்வேலியில் இருந்த காலத்தில் ஊத்துக்குச் செல்லும் அரசு பேருந்தில் ஏறி மாஞ்சோலைக்குச் சென்று திரும்பி விடலாம். அதைவிட்டால் செங்கோட்டை வழியாகக் கேரளத்திற்குள் நுழையும் பாதையில் தேயிலைக் காடுகளைப் பார்க்கலாம்.