இடுகைகள்

பெயரிடலும் பெயர் மாற்றமும் : ஒரு வரலாறு

படம்
பேச்சு வழக்கில் ஒரு பெயரைச் சுருக்கிச் சொல்வது குற்றமில்லை. ஆனால் அதுவே அவரது அதிகாரப்பூர்வ பெயராக ஆகாது. இவை அரசு பின்பற்றும் தரப்படுத்தப்பட்ட மொழியின் வழக்காறல்ல. இலக்கியப் பரப்பில் இருந்த சுந்தர ராமசாமி என்ற பெயரைச் சுருக்கி அவரது அன்பர்கள் சு.ரா. என்று அழைத்தனர். அவரை அழைத்ததுபோல அ.ராமசாமி என்ற பெயரை அ.ரா. என்று சுருக்கிச்சொல்லும் நண்பர்கள் எனக்குண்டு. ஒரு ஆளின் பெயரையோ, இடத்தின் பெயரையோ நினைத்தால் மாற்றிக் கொள்ளலாம் என்ற நிலை இல்லை. அதற்கெனத் தனி நடைமுறைகள் உள்ளன.

வரலாற்றில் ஒளிந்துகொண்டு பகடி ஆடுதல் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி

படம்
சில பொதுக்குறிப்புகள் புதிய சிந்தனைகள் அல்லது சோதனை முயற்சிகள் எதுவும் இல்லாமலேயே சில சாதாரண நிகழ்வுகள் கவனிக்கத்தக்க நிகழ்வுகளாவதும், மறுதலையாக விவாதிக்கத் தக்க சிந்தனைகளையும் புதுப்புது பரிசோதனைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் பல நிகழ்வுகள் கவனிக்கப்படாமலும் விவாதிக்கப்படாமலும் போவதும் நிகழ்கின்றன. மனித வாழ்க்கை கண்டு கொள்ளப்படுவதிலும் கவனிக்கப்படாமல் போவதிலும் வினை யாற்றும் பொது அம்சங்கள் இவைதான் எனச் சொல்வதும் விளக்குவதும்கூடத் தற்காலிகமானவைதான்.

நவம்பர் கதை : நடப்பியல் நடிப்பின் வலிமை

படம்
  ”தமன்னாவின் வீட்டில் ரெய்டு” என இணையப்பக்க விளம்பரமாக வரும் இணையத்தளத் திரைத் தொடர் கதைப்பின்னல், விடுவிப்பு என்ற அடிப்படையில் துப்பறியும் கதை. எல்லாத் துப்பறியும்/குற்றவிடுவிப்புக் கதைகளின் தன்மையில் இருப்பதில் கூடுதல் கவனத்துடன் இருக்கிறது.

இரண்டு எதிர்வுகளும் பொதுப்புத்தியின் நகர்வுகளும்

படம்
பத்மசேஷாத்ரியின் ஆசிரியர் ராஜகோபாலன் x அப்பள்ளியின் மாணவிகள் - இது ஒரு எதிர்வு பாடலாசிரியர் வைரமுத்து x பாடகி சின்மயி. இது இன்னொரு எதிர்வு இவ்விருவெதிர்வுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் தான். பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று பேசுவது கலையின் வேலை; கலைஞர்கள் வேலை. பொதுப்புத்தியும் கூடப் பாதிக்கப்பட்டோருக்காக இரங்கும்; கூக்குரல் எழுப்பும். அந்த வகையில் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்காக வாதாடும் நபர்கள் பாடகி சின்மயிக்காகவும் வாதாட வேண்டும்; ராஜகோபாலனைக் கண்டிப்பது போலவே வைரமுத்துவையும் கண்டிக்க வேண்டும்; தண்டிக்கும்படி கோரவேண்டும். இதுதான் நேர்மையான/ மனசாட்சியுள்ளவர்களின் வாதம்

தில்லையின் விடாய்: உடலரசியலின் வெளிப்பாடுகள்

படம்
  அவன் தூங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடிக்கும் என் நெஞ்சில் புடைத்து எழுகின்ற வலியைப் பொத்திக்கொண்டு நான் உயிர்க்கின்றேன்  

பத்மசேஷாத்ரியும் அதன் தொடர்ச்சியும் : சில குறிப்புகள்

படம்
நான்கு குறிப்புகள் 1.  பாலியல் கல்வி: உடனடித்தேவை 2. விதிகள்: மாற்றமும் மாற்றமின்மையும் 3. முன்னோடியாக இருப்பதின் சூட்சுமம் 4  கிறித்தவப்பள்ளிகளே மாதிரிகள். ஆனால் 

கவிதைப் பொருள்கொள்ளல் - சில குறிப்புகள்

கூற்று அல்லது மொழிதல் கவிதை வாசகர்கள் எப்போதும் இருக்கவே செய்கிறார்கள். இரண்டாவது அலையின் தனிமையில் -கடந்த இரண்டு மாதங்களில் 50 -க்கும் அதிகமான கவிகளின் ஒரு கவிதையை முகநூலில் பதிவேற்றம் செய்கிறேன். அந்தந்தக் கவிகளின் ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்று என்பதாக நான் நினைக்கும் கவிதையல்ல. அதே நேரத்தில் கவிதையின் சிறப்புகளில் ஏதாவதொன்றைக் கொண்டதாக நான் நினைக்கும் கவிதைகளில் ஒன்றாக இருக்கும். என்னிடமிருக்கும் கவிதைத்தொகுப்புகளிலிருந்து அதனைத் தெரிவு செய்கிறேன். அப்பதிவேற்றத்தில் ஒரு தொகுப்புப் போட்டவர்களின் கவிதைகளும் உண்டு ஓராயிரம் கவிதைகள் எழுதியவர்களின் கவிதைகளும் உண்டு. செய்யுளியல் என்னும் இலக்கியவியலைப் பேசும் தொல்காப்பியம் கூற்று என்னும் சொல்லைத் திரும்பத்திரும்பப்பயன்படுத்துகிறது. யார் இந்தக் கவிதையின் கூற்றாளராக இருந்து சொல்கிறார் என்பதை விளக்கிப் பேசுகிறது. அகத்திணைக் கவிதைகளில் யாரெல்லாம் கூற்றாளராக இருக்க முடியும் என்பதையும் வரையறுத்துக் கூறுகிறது. அவ்வளவு விரிவாகவும் கறாராகவும் புறக்கவிதைகளுக்குச் சொல்லவில்லை. கூற்றாளர் ஒருவர் தொடங்க, கேட்குநராக ஒருவர் இருக்கும்போது கவிதையில் செயல்பாட