இடுகைகள்

பெண்கள் தினக்கொண்டாட்டங்களும் நெல்லைப் பல்கலைக்கழகமும்

படம்
மனோன்மணியத்தில் நான் இணைப் பேராசிரியராக இணைந்து கொண்ட நாள் 1997,பிப்ரவரி,14, பிப்ரவரி கடைசி வாரத்தில் ஒருநாள், நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்த முனைவர் மரியஜான் என்னிடம் வந்து ‘மேடம், மகளிர் தினக்கொண்டாட்டத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ளச் சொன்னாங்க’ என்றார்.

பேரா. இராம.சுந்தரம்: நினைத்துக்கொள்கிறேன்

படம்
  முதுகலை படிக்கும் காலத்திலேயே அறிமுகமாகிச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நண்பர்களைப் போலப் பேசிக்கொண்ட பேராசிரியர்கள் பலருண்டு. அவர்களில் ஒருவர் பேரா.இராம.சுந்தரம். நண்பர்களாகத் தொடரும் பேராசிரியர்கள் பலரையும் எனது நெறியாளரின் இருக்கைக்கு முன்புதான் சந்தித்திருக்கிறேன். அவர்களின் பேச்சில் நானும் கலந்துகொண்டதின் வழியாக ஆசிரிய - மாணவ உறவைத் தாண்டி நண்பர்களாகிவிடுவோம். தனிப்பட்ட அன்பும் நட்பும் கொண்டவர்.

மாற்றப்படும் சொல்லாடல்கள்

தமிழ்நாட்டு அரசியல் சொல்லாடல்களில் திரும்பத் திரும்ப உருவாகி உருண்டுகொண்டே இருக்கும் முதன்மையான எதிர்வு பிராமணர் x பிராமணர் அல்லாதோர் என்பது. இதனை உருவாக்கியவர்கள் பிராமணர் அல்லாதோரிலிருந்து உருவான பெரியாரும் அவரது வழித்தோன்றல்களும். அதனை மாற்றித் தமிழின் முதன்மைச் சொல்லாடலாக ஆக்கப்பட்ட சில எதிர்வுகள் உண்டு. அவற்றுள்,ஏழைகள் x பணக்காரர்கள் எனப்பேசிய வர்க்க அரசியல் முற்பட்டது. அதனைத் தொடர்ந்து உருவான தலித்துகள் x தலித்தல்லாதோர் எனப்பேசிய விளிம்பு நிலை அரசியல் காலத்தில் பிற்பட்டது. வர்க்க அரசியலும் விளிம்புநிலை அரசியலும் தலா பத்தாண்டுகள் செல்வாக்கோடு இருந்தன. 

மத்தேயு என்னும் தன்மை, முன்னிலை, படர்க்கை

படம்
தன்மை , முன்னிலை , படர்க்கை   இந்தச் சொற்களை இலக்கண ப் புலமையின் அடிப்படைச் சொற்களாக அறிமுகம் செய்துள்ளது நமது கல்வியுலகம். தான், யான், நான் என்பன தன்மைகள்- தன்மை ஒருமைகள். அவற்றின் பன்மைகளாக தாம், யாம், நாம், நாங்கள். முன்னிலையில் நீ என்பது ஒருமை; நீங்கள் என்பது பன்மை. அவன், அவள், அவர்,அது என்பன படர்க்கை யொருமைகள்; அவர்கள், அவை பன்மைகள். இ ச்சொற்களை உச்சரிக்கும்போது நான் என்னும் தன்னிலையும் நீ என்னும் மாற்றுநிலையும் அவள்/அவன் /அவர்-கள் , அவை என்னும் விலகல் அல்லது சுட்டுநிலையும் உருவாவ தைப் பற்றி இலக்கணப்புலம் விரிவாகப் பேசுகின்றது. இந்த உருவாக்கமே மொழியின் அடிப்படை வினையாற்றுக்கூறு. இவற்றி லிருந்தே அறிவுத்தோற்றம் நிகழ்கிறது.

சிங்கப்பூர் சேர்ந்துகொண்டது

படம்
பல்கலைக்கழக வேலைகள், கல்விசார்ந்த பயணங்கள் என்றால் தனியாகவே பயணம் செய்வேன். அதிலும் தமிழக/ இந்திய பயணங்களில் எப்போதும் குடும்ப உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்வதில்லை. குறிப்பிட்ட பயணங்களோடு குடும்ப நிகழ்வுகள் அடுத்தோ, தொடர்ந்தோ வரும் சூழ்நிலையில் நானும் மனைவியும் சேர்ந்து போய்விட்டுப் பணி நேரத்தில் பிரிந்துவிடுவோம். ஆனால் வெளிநாட்டுப் பயணங்களில் அப்படி இருக்க நினைப்பதில்லை.

கோலாலம்பூரில் ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடு

படம்
எனது அயல் பயணங்கள் என்பன பெரும்பாலும் கல்விப்பயணங்கள் தான். உலகத்தமிழ் மாநாட்டிற்காக மலேசியாவின் கோலாலம்பூருக்குச் செல்வது மூன்றாவது அயல்நாட்டுப் பயணம். 2011 இல் பல்கலைக் கழகத்தில் தொலைதூர மையங்களைச் சௌதி அரேபியாவின் தம்மாமிலும் ரியாத்திலும் ஆரம்பிக்க அனுமதிக்கலாமா என்று பார்க்கச் சென்ற ஒருநபர் குழுவுப் பயணம்தான் எனது முதல் வெளிநாட்டுப் பயணம்.