இடுகைகள்

இன்னுமொரு போரை நினைத்தல் : ஆசி கந்தராஜாவின் நரசிம்மம்

படம்
ஈழத்தமிழ்ப் புனைகதைகள் இன்னும் போர்க்கால நினைவுகளிலிருந்து மீளவில்லை. 2009 முள்ளிவாய்க்கால் பேரழிவுகளையும் அதற்கு முந்திய கால் நூற்றாண்டுப் போர்க் காலத்தையும் மறந்து விட்டு ஈழநிலப்பின்னணியில் புனைவுகள்  எழுதவேண்டும் என்றால் அதன் கோரத்தை - வடுக்களை- பாதிப்பை உணராத தலைமுறை ஒன்று உருவாகி வரவேண்டும். அதுவரை போர்க் காலம் என்பது நேரடியாகவும் நினைவுகளாகவும் பதிவு செய்யப்படுவது தவிர்க்க முடியாதது. உள்ளே இருப்பவர்களும் வெளியே புலம்பெயர்ந்தவர்களும் திருப்பத்திரும்ப அதையே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏலி ஏலி லாமா ஜபக்தானி - செய்வது இன்னதென்று அறியாமல்...

படம்
நோய்களுக்கு மருந்தே தீர்வளிக்கும். தொற்று நோய்களுக்கோ உடனடி மருந்துகளும் தடுப்பு மருந்துகளும் மட்டுமே தீர்வளிக்கும். அதே நேரத்தில்  ஒதுங்கி யிருத்தலும் ஒதுக்கி வைத்தலும் தொற்று நோய்களைப் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். இவையெல்லாம் கரோனாவின் வருகைக்கு முந்திய உலக அனுபவங்கள். 

தேர்வுகள்- தேர்வுகள்- எழுதும் தேர்வுகள்

நாம் நமது மாணவர்களின் அறிவை மதிப்பெண்களின் வழியாக அளவிடுகிறோம். மதிப்பெண்களை வழங்குவதற்கு நாம் பின்பற்றும் முதன்மையான முறை தேர்வுகள். அறிவின் அளவைத் தீர்மானிப்பதில் தேர்வுகளின் இடம் தவிர்க்கமுடியாதவைதான். ஆனால் தேர்வுகள் - எழுத்துத்தேர்வுகளும் மதிப்பெண்களும் மட்டுமே அறிவை அளக்கும் கருவிகள் அல்ல. நமது நாட்டில் பின்பற்றும் தேர்வுகளும் மதிப்பெண்களும் இளம்வயதினரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாகப் தடுத்து நிறுத்த - பின்னால் தள்ளிவிட நினைக்கும் ஒருமுறையாக இருக்கிறது.  மதிப்பெண்களின் எதிர்மறைத் தன்மை கருதியே உலகநாடுகள் பலவும் மதிப்பெண்களுக்குப் பதிலாக, மதிப்பலகுகளால்  -Credits- மாணாக்கர்களின் நிலையைக் குறிக்கின்றன. நேற்று இந்திய ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதேசியக் கல்விக்கொள்கை -2020 அடுத்தடுத்துத் தேர்வுகளைப் பரிந்துரைத்துள்ளது.

தன்மைக்கூற்றின் பலவீனம்: நோயல் நடேசனின் கதையொன்றை முன்வைத்து ஒரு விசாரணை

படம்
 ” இராமேஸ்வரத்திலிருந்து உங்களுரில்   அநேக ஆவிகள் சுற்றித் திரிவதை   என்னால் பார்க்க முடிகிறது . அவற்றில் நல்ல ஆவிகள் மற்றும் தீய ஆவிகள் என இரண்டு பிரிவுகள் உண்டு. அவை அனைத்துமே மரணம் அடைந்தவர்களின் ஆவிகள். ஒருவர் மரணம் அடைந்துவிட்ட பின்பு ,  அவர்கள் உடலில் இருந்து வெளியேறும் ஜீவன் ,  உடனேயே இன்னொரு பிறவி எடுக்க முடியாது. மறுபிறப்படைய வழக்கமாக ஒரு வருடகாலமாகும் . இந்த   மறுபிறப்பிற்காகவே திதி செய்கிறோம் . ஆனால் ,  நீங்கள் பலருக்குச் செய்யவில்லை. அதனால் அவை ஆத்மாக்களாகவே   சுற்றித்திரியும் . எண்ணிக்கைகள் கட்டுப்படுத்த முடியாத அளவு உங்கள் ஊரில் உள்ளன. இதில்   கெட்ட ஆத்மாக்கள்   நாட்டுக்கும் சமூகத்திற்கும் மறைமுகமாகக் கெடுதலை செய்யும். தற்போது உங்களூரில் போரில்லை என்பது உண்மை ,  ஆனால் ,  அமைதியில்லை. கெட்ட ஆத்மாக்களின் தீவினை இன்னமும் பலமாக உள்ளது. அவைகளே ஆபத்தானவை”

தன்னை முன்வைத்தலின் ஒரு வகைமாதிரி

படம்
  “ பெண் முதலில் தன்னைக் கவனிக்கிறாள்; பிறகு மற்றவரைக் கவனிக்கிறாள்” . இதன் நீட்சியாகப் பெண்ணெழுத்து என்னும் அடையாளத்தோடு வரும் கவிதைகளில் முதலில் பெண் தன்னிலையை எழுதிக்காட்ட நினைக்கிறார்கள்; அதன் தொடர்ச்சியாகவே மற்றவர்களை முன்வைக்கிறார்கள். இந்தக் கருத்து பெண்ணெழுத்துகளைத் தொடர்ச்சியாக வாசிக்கும் ஒருவருக்கு     உருவாக வாய்ப்பிருக்கிறது.

நினைவில் இருக்கும் ஞானி

படம்
விசுவபாரதி நடுவண் பல்கலைக் கழகத்   தமிழ்த்துறையும், பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தின் இந்திய மொழிகள் துறையும் சேர்ந்து நடத்திக் கொண்டிருக்கும்   இணைய உரையரங்கத் தொடரின் 10 -வது உரையை இன்று( 22-07-2020) முற்பகல் 11.00 மணி தொடங்கி முகநூல் நேரலையில் கேட்டுக் கொண்டிருந்தேன். தமிழ் இலக்கியத் திறனாய்வு-இயக்கங்களும் கோட்பாடுகளும் என்ற தலைப்பிலான     உரையைப் பஃறுளி பிரவீன் நிகழ்த்திக்கொண்டிருந்தார்.     அவரது பெயரைக் குறிப்பிட்டுத் தமிழ்த்திறனாய்வில் அவரது பார்வை மற்றும் பங்களிப்புகள் பற்றிப் பகல் 12 மணியளவில் பிரவீன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஞானியின் மரணம் நிகழ்ந்திருக்கும் என்றே நினைக்கிறேன். எப்போதாவது இப்படிச் சில மரணங்களுக்குத் தற்செயலான இணைநிலைகள் ஏற்பட்டுவிடுவதுண்டு. அப்படியான அனுபவங்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். எனக்கு இன்று மட்டுமல்ல; இதற்கு முன்னும் சில மரணங்களின் போது அவர்களின் பெயரைக் காதில் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன்.

அக உலகத்துப் பெண் பிரதிமைகள் : பிரமிளா பிரதீபனின் இரண்டு கதைகளை முன்வைத்து

படம்
இலங்கையின் மலையகப் பின்னணியில் தனது முதல் நாவல் – கட்டுபொல்– மூலம் பரவலான அறிமுகம் பெற்ற பிரமிளா பிரதீபன் கவனமான இடைவெளியுடன் சிறுகதைகளை எழுதிவருகிறார். அவர் எழுதிய கதைகளைப் பெரும்பாலும் வாசித்திருக்கிறேன். ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் இடையே கால இடைவெளியை உண்டாக்கிக் கொள்வதோடு பேசுபொருள், பேசும் முறை, எழுப்பும் உணர்வுகள் என எல்லா நிலையிலும் புதியனவற்றுக்குள் நுழைகிறார். தனது வாசகர்களுக்கான வாசிப்புத் திளைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார். இப்படியான கதைகளை மட்டுமே எழுதுபவர் என்ற அடையாளத்தை உருவாக்காமல் வேறுபட்ட கதைகளைத் தரக்கூடியவர் என்பதைக் காட்டுகின்றன அவரது சிறுகதைகள்.