இடுகைகள்

வாழ்க வாழ்க: திரள் மக்கள் அரசியலின் பேருருக்காட்சிகளும் சிற்றுரு நகர்வுகளும்

படம்
நம்கால அரசியல் நடவடிக்கைகளின் உச்சமாகத் திகழுவது தேர்தல் பரப்புரைகள். கட்சித்தலைமை கலந்துகொள்ளும்  பரப்புரை ஒன்றின் குறுக்குவெட்டுத்தோற்றத்தை வாசிப்பவர்களின் முன் விரிக்கும் எழுத்துப்புனைவின் அனைத்துச் சாத்தியங்களையும் தனதாக்கியிருக்கிறது இமையத்தின் இந்தப் புனைகதை.   சின்னக் கண்டியாங்குப்பத் துப் பெண்கள் விருத்தாசலம் நகரின் புறநகர் பகுதியான மணலூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ‘500 ரூபாய், ஒரு சேலை’ என்று பேசி அழைத்துச் செல்லப்படும்போது உருவாகும் கூட்டு மனநிலையில் தொடங்கி,  கூட்ட மைதானத்தில் கிடைக்கும் துயரம், கொண்டாட்டம், அவமானம், குற்றவுணர்வு, அச்சம் எனப்பல்வேறு உணர்வுகளின் அடுக்குகளும், சந்திக்கும் அவலங்களும் ஆவலாதிகளும் அவதானங்களும் விவரிப்புகளாகவும் உரையாடல்களாகவும் காட்சிப்படுத்தல்களாகவும் எழுதப் பெற்றுள்ளன.

கல்விப்புலப்பார்வைகொண்ட க்ரியா ராமகிருஷ்ணன்

படம்
ஒரு மொழியாசிரியனுக்கு தாய்மொழியாக இருப்பவர்களுக்கு மொழியைக் கற்பிக்கும்போது அதிகம் தேவைப்படாத அகராதிகள், இரண்டாம், மூன்றாம் மொழியாக ஒரு மொழியைக் கற்பிக்கும்போது தேவைப்படுகிறது என்பது அனுபவம் சார்ந்த உண்மை. தமிழ்மொழி சார்ந்த    அந்த அனுபவத்திற்குப் பெருந்துணையாக இப்போதும் இருப்பது க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள  தற்காலத்தமிழ் அகராதியும் மரபுத்தொடர் அகராதியும்  என்பது சொல்லப்பட வேண்டிய ஒன்று. அதனைச் சாத்தியமாக்கியவர்  ராமகிருஷ்ணன்.

சொல்லும் செயலும் -

படம்
கோழிமுந்தியதா? முட்டை முந்தியதா? என்ற குதர்க்கம் தான் நமது வாழ்க்கை நிகழ்வுகள். பெரும் நிகழ்வாயினும் சிறுநிகழ்வாயினும் எது முந்தியது என்று கேட்டால் சொற்களாக இருக்கின்றன. சாதாரணவாக்கியமாகவோ, கேள்வியாகவோ, கெஞ்சுதலாகவோ, ஆணையாகவோ சொல்லப்பட்ட சொற்களே காரணங்களாக இருந்து காரியங்களை - நிகழ்வுகளை உருவாக்குகின்றன. நிகழ்வுகள் உருவானபின் நாம் வேறுவகையான சொற்களால் உரையாடல் தொடங்குகிறோம். அன்றாட நடப்புகள் என்பவை சொல்லப்படுவதால் நிகழ்கின்றன; நிகழ்வதால் சொல்லப்படுகின்றன.

சாருவுக்கு ஒரு வாசிப்பு

படம்
நண்பர் சாருநிவேதிதா கோவிட் 19 கால எழுத்துகளாகத் தொடர்ந்து எழுதிவரும் -பூச்சி - குறிப்புகளில் இன்று ஹெலன் சிஸு- ரீடரின் விலைபற்றி எழுதியிருக்கிறார்: ஹெலன் சிஸூ ரீடர் கிடைத்து விட்டது. இனி நாடகத் தொகுப்பு மட்டும்தான் தேவை.

கொரோனாவோடு வாழ்ந்தது - ஜூன்

  பாவம் காவலர்கள் ===================== கொரோனாவிற்கு முன்னால் வீட்டிலிருந்தே நடந்து போவேன் . இப்போது சாலைகளில் - கடைப்பகுதிகளில் வாக்கூடுகள் இல்லாமல் அலையும் மனிதர்கள் இருப்பதால் வாகனத்தில் சென்று ஓரிடத்தில் நிறுத்திவிட்டு அந்தச் சாலைகளில் மாலை நடை . ஊரைவிட்டு விலகி இருக்கும் அந்தப் பகுதியை வீட்டுவசதி வாரியத்தின் வழியாக மனைகள் போட்டு விற்பதற்காகப் போடப்பட்ட சாலைகள் உண்டு . 10 ஆண்டுகளுக்கு முன்னால் போடப்பட்ட தார்ச்சாலைகள் பெயர்ந்து சரளைகளாக இருக்கும் அந்தப் பகுதியில் இப்போது முன்புபோல் நடப்பவர்கள் கூட்டம் இல்லை என்றாலும் ஜூன் முதல் தேதியிலிருந்து மாலை நடைக்காக முகக்கவசத்தோடு ஆட்கள் வரத்தொடங்கியுள்ளனர் .

சிட்டுக்குருவியின் அழகும் வல்லூறின் வலிமையும்

எது நல்லது? பரப்பளவில் பெரிய தேசமாக இருப்பதா? சிறிய தேசங்களாக மாறிக்கொள்வதா? என்ற கேள்வி எழும்போது பாடம் படித்துக்கொள்ள எடுத்துக்காட்டுகள் நிறைய இருக்கின்றன, பெருந்தேசத்தின் குடிமக்களாக இருப்பதின் நன்மைகள் பற்றிக் கனடியர்கள் அறிவார்கள். அமெரிக்கர்களுக்கும் பெரிய அளவு வருத்தங்கள் இருந்ததில்லை. சோவியத் யூனியனாக உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே வருத்தங்களோடுதான் ஒவ்வொரு தேசிய இனமும் இருந்தன. சீனர்களுக்கும் இன்னும்கூடச் சொல்லும் நினைப்பு இல்லை. இந்தியர்களும் அதே நிலையில் தான் தொடர்கிறார்கள். இதற்கு மாறாகச் சின்னச்சின்ன நாடுகளாக இருப்பதின் மகிழ்ச்சியை ஐரோப்பாவின் பால்டிக் நாடுகளும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. இத்தாலி, ஸ்பெயின், துருக்கி போன்றன வருத்தப்பட்டியலில் இருப்பவை. வளைகுடா நாடுகள் பரப்பளவு சிறியதாக இருப்பதின் நன்மைகளை அனுபவிக்கின்றன. ஆனால் ஆப்பிரிக்காவின் தேசங்கள் இரண்டுங்கெட்டான்களாக அல்லாடுகின்றன. தென்கிழக்காசிய நாடுகள் கூட சிறியதின் பலனில் சிரிக்கின்றன. ஆனால் இந்திய சிறியது கேட்கின் பெரியது நாடும்; பெரியது பார்க்கின் சிறியன தேறும் எனத் திரிசங்கு நிலையில் த