இடுகைகள்

கொரோனாவோடு வாழ்ந்தது -ஏப்ரல் வரை

  ஏப்ரல் 15 க்குப் பிறகு   நாடு தழுவிய ஊரடங்கு விலக்கப்படவேண்டும் . முதன்மையாக உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் சீராக நடக்கவேண்டும் . வேளாண் உற்பத்தியை உறுதிசெய்யும் விதமாக ஊரடங்கு விதிகளில் தளர்வு நடைபெற்றால் மட்டும் போதாது . உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை உண்ணும் வகையிலான வடிவங்களில் மாற்றவேண்டும் . அதனை நுகர்வோருக்குக் கொண்டு சேர்க்கவேண்டும் . இவை நடக்கவில்லை என்றால் இந்தியா போன்ற நாடுகள் நோயைத் தாண்டிய பெரும்பிணியாகப் பசியை எதிர்கொள்ள நேரிடும் . பசியின் வெளிப்பாடுகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன . அதனைக் கவனித்துச் சொல்லும் திசையில் ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லை .  அதனால் பொதுச்சமூகம் அறியாமல் இருக்கிறது . 

பெரும்பொறுப்புகளைச் சுமக்கவிரும்பாதவர் க.அன்பழகன்

  பெரியாரின் அரசியல் முன்மொழிவுகளைக் குறிப்பிடும் சொல்லாடல்களாக அறியப்படுபவை பகுத்தறிவுவாதம், சுயமரியாதைச்செயல்பாடுகள், சமூகநீதிக்கான போராட்டங்கள், இவற்றை அடையும் நோக்கத்தில் தடைக் கற்களாக இருப்பனவாகப் பெரியார் அடையாளப்படுத்தியன மத நம்பிக்கைகளே. எல்லா மதத்தின் மீதான பிடிமானங்களும் நம்பிக்கைகளும் எதிர்க்கப்பட வேண்டியவை எனப் பரப்புரைகள் செய்தபோதிலும் இந்தியாவின்/ தமிழகத்தின் பெரும் சமயமாக இருக்கும் இந்துமதத்தின் மீதே கடும் விமரிசனங்களையும் எதிர்ப்பையும் காட்டினார். சமய நம்பிக்கைகளை எதிர்க்கும் வகையில் தான் அதனைக் காக்கும் நடவடிக்கையில் இருந்த பிராமணர்களையும் கடுமையாகச் சாடினார்.

அலைதலும் தனிதலும் -1

அலைந்து திரிதலின் பல நிலைகளைக் கடந்திருப்பதுபோலவே தனித்திருத்தலின் அனுபவங்களும் இருக்கவே செய்கின்றன. முதல் தனித்திருத்தல் பத்து வயதில். நான்காம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடுமுறை.கமலை வடத்தில் தாவி ஏறிச்சாடித் தடுமாறாமல் இருக்க இரண்டு பக்கத்திலும் கைகளை நீட்டி மாடுகளின் பின்முதுகில் கை வைத்தபோது விழுந்தது ஒரு அடி. இடது பக்க மயிலைக்காளை அடித்தால் முதுகில் விழும். வலதுபக்கச் செவலையின் அடி கன்னத்தில் விழுந்தது.கன்னம் வீங்கியது. கண்ணுக்கு வந்தது கன்னத்தோடு போனது என்று நினைத்திருந்த நேரத்தில் மாட்டு வாலில் கட்டியாக இருந்த சாணித்துகளொன்று கண்ணுக்குள் இறங்கி ஒருவாரத்திற்குப் பின் ரத்தச் சிவப்பில் கொப்பளம் காட்டியது. முலைக்கட்டியிருக்குன்னு பெரியம்மா அத்திபட்டி மாரியம்மனுக்கு விளக்குப் போடுவதாக நேர்ந்தார். வெங்கலத்தாம்பாளத்தில் வெண்சங்குரசி ஒத்தடம் கொடுத்துப் பார்த்தார்கள். வெளிமருத்துவம் தாண்டி அமுதப்பால், நந்தியாவட்டைச் சாறு என்ற கைமருத்துவத்தில் இறங்கி உள்மருத்துவத்திற்கு நகர்ந்தது. ஒருமாதம் பள்ளிக்கூடம் போகவில்லை. சுத்திப்பட்டிக்கெல்லாம் தாய்க்கிராமம் எழுமலை. அங்கிருந்தவர் அரை வைத்திய

சொல்லித்தீராத சுமைகள்

படம்
எல்லாவகையான வாசிப்பும், வாசிக்கப்படும் பனுவலைப் புரிந்து கொள்ள முதலில் தேடுவது பனுவலுக்குள் இருக்கும் ஆட்களைத்தான். நம்மிடம் சொல்லப் போகும் -காட்ட நினைக்கும் வெளி ஒன்றின் ஒரு பகுதியையும் காலத்தின் வெட்டுப்பட்ட துண்டையுமே எழுத்தாளர்கள் நம்மிடம் எழுதிக்காட்டுகிறார்கள்.

அரங்கியல் அறிவோம் :மார்ச் 27. உலக அரங்காற்று தினம்

படம்
சர்வதேச அரங்காற்று நிறுவனம்(International Theatre Institute) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 - ஆம் தேதியை உலக அரங்காற்று தினமாக (world Theatre day ) கொண்டாடி வருகிறது.

ஆவணப்படங்கள்-நோக்கங்கள், அழகியல், திசைவிலகல்கள்

படம்
ஆவணப்படங்கள் என்பன பிரச்சினையை முன்வைத்து தீர்வை வேண்டி நிற்பன. பிரச்சினைகளின் தன்மைகளைப் போலவே தீர்வுகளும் விதம்விதமானவை. பிரச்சினைகள் ஒவ்வொருவர் முன்னாலும் நிகழ்வனதான். நீண்ட காலமாக நடந்துகொண்டே இருப்பனவற்றைப் பார்க்கும் கண்கள் இல்லாலமல் வெகுமக்கள் தங்கள் பாடுகளுக்குள் தங்களைக் கரைத்துக்கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும்போது அதன் வரலாற்றையும் இருப்பையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் ஒரு ஆவணப்பட இயக்குநர் அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு, தரவுகளைத் திரட்டித் தரும் வேலையைச் செய்கிறார். அத்தகைய ஆவணப்படங்களில் இயக்குநரின் பார்வைக்கோணம் தொடங்கி, அழுத்தம் கொடுப்பது, விவரிப்பது எனப் பலவற்றில் தீவிரத்தைக் கொண்டுவரமுடியும். அதற்கு மாறானவை தற்காலிகப் பிரச்சினைகள். திடீரென்று தோன்றும் விபத்து, பேரிடர், போன்றவற்றை ஆவணப்படுத்தும்போது காட்சிப்படுத்துவதில் குறைகள் இருக்கலாம். விவரிப்பதில் போதாமைகள் இருக்கும். தீர்வு கோருவதில் கூட முடிவான ஒன்றைச் சொல்லமுடியாமல் போகலாம். இந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்ட மனநிலையோடுதான் ஆவணப்படங்களைப் பார்க்கவேண்டும். இங்கே நான் பார்த்த சில தமிழ் ஆவணப்படங்களைப் பற்றிய அ