நவீன நாடகமும் தலித் நாடகமும்
நாடகம் என்றால் என்ன? “ராமசாமி கந்தசாமியாக நடிப்பதை முத்துசாமி பார்த்துக் கொண்டிருப்பது தான் நாடகம். நாடகத்தை அதன் மற்ற அலங்காரங்களையெல்லாம் களைந்துவிட்டு சாராம்சமான விஷயம் எது என்று பார்த்தால் இது தான் நாடகம்“ நான் வாசித்த நோ்காணல் ஒன்றின் முதல் கேள்வியும் அதற்கான பதிலின் தொடக்கமும் இது. (நோ்காணல் செய்யப்பட்டவர்; கே. எஸ். ராஜேந்திரன், டெல்லி, தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் மாணவா், இந்நாள் ஆசிரியா். நோ்காணல் செய்தவா்; சி. அண்ணாமலை, பத்திரிகையாளா்) இதில் பதிலை விடவும் கேள்வியை முக்கியமானதாகக் கருதவேண்டியுள்ளது.