தேடிப்படித்த நூல்கள் அல்லது பழைய புத்தகக் கடையில் கிடைத்த நூல்கள்
கல்விப்புல வாசிப்பிற்கும் கல்விப்புலத்திற்கு வெளியே இருப்பவர்களின் வாசிப்புக்குமிடையே முதன்மையான வேறுபாடுகள் உண்டு. மொழி, இலக்கியத்துறைகளில் இருக்கும் வேறுபாட்டை என்னால் விரிவாகச் சொல்லமுடியும். ஆனால் இந்த வேறுபாடு எல்லாத்துறைகளிலும் இருக்கிறது என்பதுதான் உண்மை. இங்கே எனக்குப் பழைய புத்தகக்கடைகளில் கிடைத்த நூல்களின் பட்டியல் ஒன்றைத் தருகிறேன்.மதுரையிலொரு திண்டுக்கல் ரோடு உண்டு. செண்ட்ரல் சினிமா தியேட்டர் சந்துக்குள் நுழைந்து திண்டுக்கல் ரோட்டில் வந்தால் வரிசையாகப் பழைய புத்தகக் கடைகள். மீனாட்சி அம்மன் கோயில் தெற்குக் கோபுரவாசல்வரை விரித்துப் பரப்பிவைத்திருப்பார்கள். திருப்பத்தில் இருந்த மூலைக்கடை பெரியது. அங்குதான் எனது ஆய்வுக்கான பழைய நூல்கள் பலவற்றை நூலை வாங்கினேன். சென்னையிலும் அப்படியொரு தெருவாகத் திருவல்லிக்கேணியில் கடற்கரை நோக்கிப் போகும் சாலையைச் சொல்வேன். பைகிராப்ட்ஸ் சாலை திரும்பும் இடத்திலிருந்து பழைய புத்தகங்கள் சாலையில் விரிக்கப்பட்டிருக்கும். அங்கும் பல நூல்களை வாங்கியிருக்கிறேன் 15 .வடகரை ஆதிக்கத்தின் சரித்திரம் இதனைத் தேடிப்படித்த நூல் என்று சொல்வதைவிட தேடியபோது கிடைத்த ...