இடுகைகள்

செவ்வியல் : ஒரு விவாதம்

முகநூலில் எப்போதாவது தொடர் விவாதம் நடப்பதுண்டு. அண்மையில் நான் போட்ட ஒரு முகநூல் பதிவைத் தொடர்ந்து பலரும் பங்கேற்று விவாதித்தனர். அந்த விவாதத்தை செவ்வியல்: ஒரு விவாதம் எனத் தொகுத்துச் சொல்லலாம் எனத்தோன்றுகிறது. முகநூல் பக்கம் வராதவர்களுக்காக இங்கே தருகிறேன்.

கமல்ஹாசனின் விஸ்வரூபம்- விமரிசனம் அல்ல; விவாதம்

படம்
லண்டனிலிருந்து வெளிவரும் இணைய இதழ் எதுவரை?. கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் வெளிவருவதில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து ஏற்படுத்திய தாக்கம் குறித்து வினாக்களை அனுப்பி பதில்களைப் பெற்று வெளியிட்டது. அந்த வினாக்களும் விடைகளும் இங்கே தரப்படுகிறது.  

சி சு.செல்லப்பாவைச் சந்தித்த வேளைகள்

படம்
1985 ஆம் ஆண்டு என்பது ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் மாதம் நினைவில் இல்லை. சிவசங்கரி படைப்புகள் குறித்த மூன்று நாள் கருத்தரங்க ஏற்பாட்டின் பரபரப்பில் இருந்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் வாசலை நோக்கி அவர் வந்து கொண்டிருந்தார். அதே கசங்கிய அழுக்கேறிய வேட்டி, தொளதொளப்பான சட்டைக்குள் ஒல்லியான உருவம்.. எனக்கு அவரைத் தெரியும். அதற்கு முன்பு அவரை இரண்டு தடவை பார்த்திருக்கிறேன். ஆம். பார்த்திருக்கிறேன்; சந்தித்ததில்லை.

ஆஸ்லோவில் பொங்கல் விழா

படம்
பங்கேற்ற பொங்கல் விழாக்களில் இப்போதும் நினைவில் இருக்கும் இன்னொரு பொங்கல் விழா நார்வே நாட்டுத் தலைநகர் ஆஸ்லோவில் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள். தங்கள் அடையாளமாக இருக்கும் மொழியின் வழியாக மட்டும் அல்லாமல் அதன் மையமான கொண்ட்டாட்டத்தின் வழியாகவும் தமிழ் அடையாளத்தைத் தக்க வைக்க வேண்டும் என நினைக்கும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள், தாங்கள் வாழும் நாடுகள் ஒவ்வொன்றிலும் பொங்கல் விழாவினைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். ஆஸ்லோவில் நடந்த இந்த விழாவில் (2013, ஜனவரி, 19) கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

தோழர் ஜி.என்

படம்
  ஒரு குறிப்பு: எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைக்க முயன்றதன் மூலம் தமிழ் எழுத்தாளர்களில் தனக்கான இடத்தை உருவாக்கியவர். நான் மாணவனாக இருந்த காலத்தில் மதுரைத் தெருக்களிலும் சில நண்பர்களோடும் அவரைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் அப்போது அவரது எந்த எழுத்தையும் வாசித்ததில்லை. அவரது எழுத்துக்களைப் படித்து முடித்தபோது அவரது வாழ்க்கையைப் பார்க்க அவர் இல்லை. அவரது அலைவு வாழ்க்கைப் பின்னர் வந்த எழுத்தாளர்களுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் தொடர்ந்து கொண்டிருந்த ஒன்று.அதனைச் சில எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் புனைவுகளாக்கிப் பதிந்தும் வைத்துள்ளனர். அவையெல்லாமே நியாயமான பதிவுகளாகவே படுகின்றன என்றாலும், திலீப்குமாரின் இந்தக் கதை கச்சிதமான ஓரங்க நாடகமாக எனக்குத் தோன்றியது. கதையை நாடகமாக ஆக்கியபோது கதைசொல்லியை திலீப்குமாராகவே வாசித்தேன். அதனால் அவரது பெயரையே பாத்திரத்தின் பெயராக ஆக்கியிருக்கிறென். கதையின் தலைப்பு: ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும்.(மூங்கில் குருத்து,க்ரியா,1985). இனிக் கதையை நாடகமாக வாசிக்கலாம். பாத்திரங்கள்:         ...

மன்மோகன் சிங் மட்டும் தான் பொறுப்பா?…

படம்
மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் எல்லா நடவடிக்கைகளையும் கேலியும் கிண்டலுமாகப் பதிவு செய்யும் நபர்கள் தான் எனது முகநூல் வட்டத்தில் நண்பர்களாக இருக்கிறார்கள். இப்படிக் கேலியும் கிண்டலும் செய்பவர்கள் தங்களை இடதுசாரிகள் அல்லது இடதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகளின் ஆதரவாளர்கள் எனக் கருதிக் கொள்பவர்கள்.   நானும் கூட என்னை இடதுசாரிக் கருத்தியலிலும் பொருளாதாரக் கட்டமைப்பிலும் நம்பிக்கை கொண்டவ னாகவே இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் மற்றவர் களுக்குத் தோன்றுவது போல போகிற போக்கில் புறங்கையால் ஒரு பதிவைப் போட்டுக் கேலியாக ஒதுங்கிப் போக மனம் தயாராக இல்லை. ஐரோப்பாவில் இருப்பதால் இப்படித் தோன்றுகிறது என என்னை அறிந்த நண்பர்கள் நினைக்கக் கூடும்.  

ஜோடிப் பொருத்தம்

எளிய வரவேற்பறை. பேராசிரியர் சர்மாவும் திருமதி சர்மாவும் யாருடைய வரவுக்காகவோ காத்துள்ளனர். பேராசிரியர் செய்தித்தாள் வாசிப்பதிலும், திருமதி சர்மா பின்னல் வேலையிலும் கவனமாக உள்ளனர். அவர்கள் அமைதியாக இருக்க, தேவதத்தன் அவர்களைக் கவனிக்காமல் கடந்து செல்கிறான். அவன் அவர்கள் முன் சென்று, கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறான்.