இடுகைகள்

ஒதுக்கி வைத்தல்- பங்கேற்றல்- கொண்டாடுதல்

படம்
எனது முகவரிக்கு மாதந்தோறும் வந்து சேரும் ஏழெட்டு இடைநிலைப் பத்திரிகைகளின் துணுக்குச் செய்திகளை முதல் புரட்டுதலில் வாசிப்பது வழக்கம். இலக்கியவாதிகளுக்கான அஞ்சலிக் குறிப்புகள், பெற்ற விருதுகள் பற்றிய குறிப்புகள், அந்தந்த பத்திரிகைகளின் உள்வட்டாரத்திற்குரிய இலக்கிய நிகழ்வுகள், கூட்டங்கள், பற்றிய பதிவுகள், இலக்கியக் கிசுகிசுக்கள், வம்பளப்புகள் போன்றன அந்த முதல் புரட்டுதலில் கவனம் பெற்று விடும். இந்த மாதம் –பிப்ரவரி- மிகுந்த கவனத்தோடு ஒரு பெயரையும் குறிப்பையும் காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா, புத்தகம் பேசுது, உயிர் எழுத்து, தீராநதி, புதிய கோடாங்கி என என் வீட்டுக்கு வந்து சேரும் எல்லாப் பத்திரிகைகளிலும் தேடினேன். ஒரு பத்திரிகையிலும் அந்தக் குறிப்பு இல்லை.

நகரவாசியான கதை

திருநெல்வேலி , கட்டபொம்மன் நகர், ஏழாவது தெரு, செந்தில் நகர், மனை எண் 10. இந்த முகவரிக்கு நான் குடிவந்தது 2002, பிப்ரவரி மாதம் ஆம் தேதி. தனிக் குடித்தனம் தொடங்கிய பின் குடியேறும் எட்டாவது வீடு. இதற்கு முன் குடியிருந்த ஏழு வீடுகளும் வாடகை வீடுகள். இது சொந்த வீடு.

துயரத்தின் பாடல்கள்

சட்டையின் பாடல்

ஒரு பாடல்

எட்டுத் திக்கும் மதயானை

படம்
போருக்குப் பல கட்டங்கள் உண்டு.   கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளோடு போராடும் போரை நான் சொல்லவில்லை. கண்ணுக்குத் தெரியாத பண்பாட்டு வெளிகளில் நடக்கும் போர்களின் கட்டங்களையே இங்கு குறிப்பிடுகிறேன். இன்றைய தேதியில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் ஒற்றை எதிரி யாராக இருக்க முடியும்? தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றியும், தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவம் பற்றியும் அறியாமல் தான் தோன்றித்தனமாக கருத்து சொல்லும் பெண்களாக இருக்க முடியும். கருத்துச் சொல்பவர்கள் மட்டுமல்ல; நடந்து கொள்பவர்களும்கூட. அப்படி நடந்துகொண்டவர் ஸ்ரேயா என்னும் நடிகை.

அமானுஷ்யத்தின் அடிப்படைகள்:தளவாய் சுந்தரத்தின் சாவை அழைத்துக் கொண்டு வருபவள்

கடவுள் அல்லது தெய்வம் உண்டா? இல்லையா? என நடக்கும் விவாதம் போலவே பேய்கள் அல்லது பிசாசுகள் உண்டா? இல்லையா? என்ற விவாதமும் தொடரும் நிகழ்வாகவே இருக்கிறது. இவ்விரு விவாதங்களுக்கும் இடையில் பலவிதமான ஒற்றுமைகள் இருந்த போதிலும் அடிப்படையான வேறுபாடும் உண்டு.

நம்பிக்கைகள் சிதையும் தருணங்கள்:எக்பர்ட் சச்சிதானந்தத்தின் தேவனுக்குரியதை தேவனுக்கும் ராயனுக்குரியதை ராயனுக்கும்..

படம்
ஒரு மாதத்திற்கு முன்பு உருவாக்கப்பட்ட நித்தியானந்தப் புயல், சாதாரண மக்களின் பொதுப்புத்தியிலிருந்து நகர்ந்து விட்டது. ஆனால் நமது ஊடகங்கள் அதன் மர்மமுடிச்சுகளை இன்னும் அவிழ்ப்பதாகப் பாவனை செய்து கொண்டே இருக்கின்றன. தேர்ந்த மர்மத்திரைப்பட இயக்குநர் அடுத்தடுத்து ரகசியங்களை அவிழ்த்துப் பரவசப்படுத்துவதுபோல காட்சிகளை விரித்துக் கொண்டிருக்கின்றன தமிழகத்து ஊடகங்கள்