அந்நியமாகும் ஆசைகள்:சி.என்.அண்ணாதுரையின் செவ்வாழை
‘அவ அந்நியக்காரி; அதனாலே தான் மாமனையோ அத்தைக்காரியையோ கவனிக்க மாட்டேங்குறா. சொந்தபந்தத்திலயிருந்து ஒருத்தி வந்திருந்தா இப்படி ஆயிருக்குமா? ’ - இந்தப் பேச்சில் வரும் அந்நியம் என்ற சொல் அயல் நாடு , அயல் மாநிலம், வேறு மாவட்டம் என இடம் சார்ந்த அந்நியத்தைக் குறிக்கும் சொல் அல்ல. வேற்று மதம், வேறு சாதி அல்லது துணைசாதிகளில் மாறுபாடு என்பதான பண்பாட்டு அந்நியங்களையோ கூடக் குறிக்கவில்லை.