இடுகைகள்

நுழைவும் இருப்பும்- அயல் பயணத்திற்கான முன் தேவைகள், புரிதல்கள்

படம்
எந்தவொரு நாட்டுக்கும் செல்ல முதலில் தேவை அந்த நாட்டுத் தூதரகம் மூலம் பெற்றுக் கொள்ளும் குடிநுழைவு அனுமதி (Visa) தான். அதற்கு முன்தேவையாக நமது நாட்டரசு வழங்கும் கடவுச்சீட்டு (PASS-PORT)இருக்கவேண்டும். இந்திய அரசு வழங்கும் கடவுச்சீட்டு ஒருவருக்கு இந்தியக்குடி என்பதற்கான ஆதாரம். அதில் இடம்பெறும் முகவரி, பிறந்தநாள், பெற்றோர் விவரம் போன்றன சோதிக்கப்பட்ட பின்பே வழங்கப்படுகிறது. முதல் வெளிநாட்டுப் பயணம் 2011 நான் பாஸ்போர்ட் பெற்ற ஆண்டு 2005. தான் என்றாலும் மனைவிக்கு 2007 விண்ணப்பித்துப் பெற்றோம். இரண்டுமே 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.

நெடுங்கொம்பு மாடுகள்: டெக்சஸின் அடையாளச்சின்னம்

படம்
இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் காலத்தில் அமெரிக்கா இந்தியாவின் நட்பு நாடாக இருந்தது. இந்தோ -சீனா போரில் இந்தியாவிற்கு ஆதரவு காட்டியவர் அப்போதை அதிபர் ஜான் பிட்ஜிரால்டு கென்னடி. அவர் டல்லஸ் நகரத்தில் கொல்லப்பட்டார் என வானொலியில் செய்தியாகக் கேட்டிருக்கிறேன்; பள்ளிப்பருவத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால், இங்கே வந்திறங்கியபோது டல்லாஸ் (DALLAS) என உச்சரிப்பது தவறு ‘டல்லஸ்’ என்று குறிலாக உச்சரிக்க வேண்டும் என உணர்த்தப்பட்டது. இப்போது டல்லஸ் என்று உச்சரிப்பதையே அதிகம் கேட்கிறேன்; அப்படியே எழுதுகிறேன்.

கிறிஸ்துமஸ் மாதத்தில்..

படம்
அமெரிக்காவிற்கு வந்து மாதமொன்று முடிந்துவிட்டது. அமெரிக்காவிலும் கனடாவிலுமாக ஆறுமாதங்கள் இருப்பது என வந்து இறங்கியது நவம்பர் கடைசியில். இலையுதிர் காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும் காலம். டிசம்பர் தொடங்கி பிப்ரவரி வரையிலான மூன்று மாதங்கள் கடுங்குளிர் காலம். அடுத்து வருவது வசந்த காலம்; மார்ச் முதல் மே வரை.

திசைகள் எல்லாம் திசைகள் அல்ல ….

படம்
தினசரி நடக்கும் ஒன்று.  சூரியன் வருவதும்; மறைவதும். சூரியன் உதித்துவரும் திசை கிழக்கு. கிழக்கைப் பார்த்து நின்று கைகள் இரண்டையும் விரி. உன் முதுகுக்குப் பின்னால் இருக்கும் திசை மேற்கு உன் சோத்தாங்கை காட்டும் திசை தெற்கு . உன் பீச்சாங்கை காட்டும் திசை வடக்கு

பயணம் என்பதொரு பிரிவு

படம்
பயணங்கள் ஒருவித்தில் தொடக்கம்; இன்னொரு விதத்தில் பிரிவுகள். நமக்குப் பழக்கமான இடத்தில் புழங்கிக் கொண்டிருந்ததிலிருந்து விலகத் திட்டமிடுவதில் ஏற்படும் மனத்தயாரிப்பு பயணத்தை நேசிக்கத் தொடங்குகின்றது, புதிய இடத்திற்குள் நுழையத் தீர்மானித்துக் கொள்கிறது. ஏற்பாடுகளுடன் கிளம்பும்போது பழைய இடத்தைப் பிரிகிறது. பயணத்தைப் பற்றி எழுதுவதென்றால் பிரிவதில் தொடங்கிச் சொல்லத்தான் வேண்டும். பிரிவதென்பது இடத்தை, இடத்திலிருந்த தாவரங்களை, தாவரங்களிலிருந்த கொழுந்திலைகளை, மலராத மொட்டுகளை, பழுக்கத்தயாரான காய்களை, உதிரப்போகும் சருகுகளை, மியாவெனக் கத்திவிட்டு மறையும் பூனைக்குட்டியை, வாலாட்டி நிற்கும் நாயின் நெருக்கத்தை, ம்மாவெனக் குரலெழுப்பும் பசுவின் மடியை, போகும்போதும் வரும்போதும் கண்களைச் சுழற்றிவிட்டுச் செல்லும் பள்ளிச் சிறுமியை, அடித்த பந்தை விரட்டும் இளைஞனின் கைவிரல்களை, கணவரின் வருகைக்குக் கதவு திறக்கக் காத்திருக்கும் குறுக்குத் தெருப் பெண்ணை எனப் பிரியப்போகும் பட்டியல் பெரியது. வீட்டில் வளர்த்த செடிகளுக்குத் தண்ணீர் விடவேண்டும் என்ற கவலையிலிருந்து பல கவலைகள் தொற்றிக்கொண்டு உடன் பயணிக்கவும் செய்யு...