ஊடக நண்பர்களே! ஒவ்வொருவரும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்த போதிலும் இந்தத் தகவலைச் சொல்லாமல் மறைப்பது சரியாக இருக்காது. நமது அருமை நண்பன் ழான் க்ளோத் இவான் யர்மோலா (1918 - 2014) தனது தொண்ணூற்று நான்கு முடிந்து தொண்ணூற்றைந்து நடந்து கொண்டிருக்கும்போது இறந்து விட்டான் என்பதை உறுதியான தகவலின் வழியாக உறுதி செய்கிறேன். சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு நமது ஊடகம் இதழுக்காக விரிவான நேர்காணலை வழங்கிய அவனுக்கு ஒரு அஞ்சலிக் கட்டுரையை எழுதுவது நம்முடைய கடமை. நம்மில் யார் அந்தக் கடமையைச் செய்வது என்று தீர்மானிக்கும் பொறுப்பை வழக்கம்போல் உங்கள் ஒவ்வொருவரிடமும் விட்டு விடுகிறேன். என்னுடைய பொறுப்பு, நீங்கள் எழுதியனுப்புவதைத் தொகுத்து வெளியிடுவது மட்டும் தான் என்பதை நான் மறுக்கவில்லை. அல்லது வெளியாள் பங்கேற்பாக (out sourcing) யாராவது ஒருவர் நீண்ட அஞ்சலிக் கட்டுரை எழுதி வைத்திருந்தால் வாங்கிப் போடலாமா? நீங்களே அப்படியொன்றை வாங்கி அனுப்பினால் ஏற்றுக் கொள்வதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. அஞ்சலிக் கட்டுரைக்குப் பதிலாகக் கவிதை தான் வெளியிட வேண்டுமென்றால் அதை மற்றவர்கள...