இடுகைகள்

நூல்களின் உலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நினைவில் நின்ற நூல்கள்

எழுத வேண்டியதை முடிவு செய்து விட்டு எழுத உட்கார்ந்தால் எழுதி விடலாம் என்ற பயிற்சியை உருவாக்கிக் கொண்டு விட்ட என்னைப் போன்றவர்களை இடைநிலைப் பத்திரிகைகளின் பெருக்கம், அதிகமாக எழுதும்படி தூண்டியுள்ளது. அதே நேரத்தில் அதுவரை இருந்து வந்த வாசிக்கும் பழக்கத்தையும் அடியோடு மாற்றி விட்டது.

முழுமையைத் தவற விட்ட முன் முயற்சி

தேர்தல் அரசியலை ஏற்றுத் தமிழ் நாட்டில் இயங்கும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளும் தங்கள் கருத்துகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க அதிகம் நம்புவது பேச்சு மேடைகளையும் அச்சு ஊடகங்களையும் தான். அச்சு ஊடகமான பத்திரிகை மற்றும் நூல்களை வெளியிட அதிகாரபூர்வமான கட்சி அமைப்புகளை நீண்டகாலமாகக் கொண்டுள்ளன அக்கட்சிகள். அவ்வதிகாரபூர்வமான அமைப்புகள் வழியாகச் செய்ய முடியாத சில வேலைகளைச் செய்யச் சில துணை அமைப்புகளை உருவாக்குவதும் உண்டு. அத்துணை அமைப்புகளைப் பொறுப்பேற்று நடத்தும் தனிநபரின் விருப்பம் மற்றும் தொடர்புகளின் அடிப்படையில் அத்துணை அமைப்புகளின் எல்லைகளும் செயல்பாடுகளும் விரிவடையும்.

ஈழம்:மாற்றுவிவாதங்களை முன் வைக்கும் கருத்துரைகள்

1.ஈழம்:தேவை- ஒரு நேர்மறையான மீளாய்வு , புதிய ஜனநாயகம் வெளியீடு, இரண்டாம் பதிப்பு, ஜுன்,2009 110.இரண்டாம் தளம், 63,என்.எஸ்.கே.சாலை,கோடம்பாக்கம், சென்னை-600 024 2.ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் புதிய ஜனநாயகம் வெளியீடு, இரண்டாம் பதிப்பு, ஜுன்,2009 110.இரண்டாம் தளம், 63,என்.எஸ்.கே.சாலை,கோடம்பாக்கம், சென்னை-600024 3.இந்திய அரசே நியாயந்தானா? முதல்பதிப்பு: ஏப்ரல், 2009,சி.மகேந்திரன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142,ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600 014 ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக இருந்து அரசியல் விடுதலை அடைந்துள்ள பின்காலனிய நாடுகளில் இன்றளவும் தொடரும் உள்நாட்டுப் பிரச்சினைகளின் மூலத்தைத் தேடிப் போனால் அவற்றின் தொடக்கப் புள்ளியாக, காலனிய ஆதிக்கவாதிகளின் தேச உருவாக்கமே காரணமாக இருப்பதை அறியலாம். காலனிய ஆதிக்கவாதிகள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஒன்றிணைத்து ஏற்படுத்திய தேசம் என்னும் ஒற்றைக் கட்டுமானம் தொடர்ந்து தன்னைத் தக்க வைக்க முடியாமல் தவிக்கும் தவிப்பின் விளைவுகள் பலவிதமானவை.

வட்டார வரலாற்றுக்கான ஆதாரங்கள்

அரசதிகாரத்தின் வரலாறாகவும் அதனைக் கைப்பற்றிட நடந்த போர்கள் மற்றும் சதிகளைப் பற்றிய தொகுப்பாகவும் இருந்த வரலாற்று நூல்கள் இன்று புனைகதைகளின் இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன. அதன் காரணமாகவே அத்தகைய வரலாற்று நூல்களை வாசிப்பவர்களும் குறைந்து விட்டனர். புனைகதை வாசிப்பின் விதிகளுக்குள்ளும் எல்லைகளுக்குள்ளும் நின்று போன வரலாற்றை உயிர்ப்புடன் வளர்த்தெடுக்கும் முயற்சிகளும் இல்லாமல் இல்லை.அந்த முயற்சியின் ஒரு பகுதியாக வரலாற்றையும் வரலாற்றெழுதியலையும் மையத்திலிருந்து விளிம்புக்கு நகர்த்திய போக்கைச் சொல்ல வேண்டும். விளிம்பு என்ற பதத்திற்குள் இன்று எல்லா வகையான விளிம்புகளும் இடம் பிடிக்க முனைகின்றன என்பது தனியாக விரித்துப் பேச வேண்டிய ஒன்று.

மரத்தில் மறைந்த மாமத யானை மதத்தில் மறையும் மாமத யானை

நாடகக்காரரும் நாடகம் பற்றிய பதிவுகளைப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்துசெய்து வருபவருமான சி.அண்ணாமலை எழுதி காவ்யா வெளியிட்டுள்ள நாடகம் வெங்காயம்.வெங்காயம் -பெரியார் பற்றிய நாடகம் என்ற குறிப்புடன் வந்துள்ள இந்த நாடகப்பிரதியைப் பற்றிப் பேசத் தொடங்கும் போது மிகுந்த எச்சரிக்கையோடு பேச வேண்டியுள்ளது. ஏனென்றால் தமிழ் நாட்டில் நவீன நாடகத்தளத்தில் செயல்படுகிறவர் களாகக் கருதிக் கொள்ளும் பலரும் நாடகத்தைப் பற்றிய விமரிசனங்களையும், நாடகப் பிரதிகளைப் பற்றிய விமரிசனங்களையும், விமரிசனங்களாகக் கருதி விவாதிப்பதில்லை என்பது எனது சொந்த அனுபவம்.

இயக்கத்தை முன்னெடுக்கும் எழுத்து

பலதுறைகளிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு சிந்தனையாளர் ஒரு பத்திரிகையில் தொடர்ந்து தனது கருத்துக்களை எழுதிவரும் ஒருவடிவம் பத்தி எழுத்து. ஒரு துறையின் நிபுணர் அவர்சார்ந்த துறையில் நடந்துவரும் மாற்றங்கள், போக்குகள் பற்றிக் கருத்துரைக்கவும் ஏற்ற வடிவமாகவும் இந்தப் பத்தி எழுத்து முறை இருக்கிறது. ஆங்கிலப்பத்திரிகைகளில் மட்டுமே இருந்துவந்த பத்தி எழுத்து என்னும் வடிவம், சமீப ஆண்டுகளில் தமிழிலும் முக்கியம் பெற்று வருகிறது.பத்தி எழுத்தின் மிகமுக்கியமான அம்சம் அதன் சமகாலத்தன்மை தான். தனது சமகால நிகழ்வுகளைக் கவனித்து, அதனை அரங்கேற்றும் நபர்கள் அல்லது கருத்துகள் பற்றிய பின்னணிகளை அறிந்து அவற்றின் மீதான விமரிசனங்கள்; ஏற்பு அல்லது மறுப்புகள்; கூடுதல் தகவல் அல்லது மறைக்கப்பட்ட செய்திகள்; நேர்மறை அல்லது எதிர்மறை விளைவு கள் எனத்தொடர்ந்து வெளிப்படுத்த்¢க்கொண்டே இருக்க வேண்டும்.

தொடர் ஓட்டக்காரனின் பிடிவாதங்கள் (அ.மார்க்ஸின் நான்கு நூல்கள்)

படம்
2001 தொடங்கி 2003 ஆம் ஆண்டு வரை பல்வேறு பத்திரிகைகளில் அ.மார்க்ஸ்,எழுதிய கட்டுரைகளைக் கருப்புப் பிரதிகள் என்னும் புதிய பதிப்பகம் நான்கு தொகுப்புக்களாகத் தொகுத்து வெளியிட்டுள்ளது. ஒரே தேதியில் ஒரே பதிப்பகத்தின் வழியாக ஓர் ஆசிரியர் தனது நான்கு நூல்களை வெளியிடுவது என்பது ஒரு சாதனை தான். கடந்த கால் நூற்றாண்டுக் காலத் தமிழ்ச் சிந்தனையில்,- குறிப்பாகத் திறனாய்வுத் துறை சார்ந்த சிந்தனையில்-குறிப்பிடத்தக்க பங்களிப்புக்கள் செய்துள்ள அ.மார்க்ஸ் இச்சாதனைக் குரியவர்தான் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை.

முப்பரிமாணமென்னும் மாயவலை.

படம்
கயிறு திரித்தல் தமிழ் நாட்டுக் கிராமங்களின் ஒரு கைத்தொழில். வணிகரீதியாக விற்பதற்காக என்றில்லாமல் விவசாயிகள் அவர்களின் தேவைக்கென அவர்களே கயிறுகளைத் திரித்து உருவாக்கிக் கொள்வார்கள். என்னுடைய தந்தை எங்கள் வீட்டில் இருந்த மாடுகள், ஆடுகள் போன்ற வற்றைக் கட்டுவதற்கும்,மூக்கணாம் கயிறுகளுக்கும் தேவையான கயிறுகளை அவரே தான் திரிப்பார்.

தொ.பரமசிவன்: அலைப்பரப்பில் தவிக்கும் கப்பல்

  பேராசிரியர் வீ.அரசு ஒருங்கிணைப்பில், கங்கு வெளியீடாகத் தமிழில் சில ‘அரசியல்’ நூல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. எல்லாமே அரசியலிருந்து தொடங்குகிறது அல்லது அரசியலை நோக்கிப் போகிறது [Everything must be from politics or towards politics ] என நம்பும் கங்கு தொடர்ந்து எட்டுச் சிறு வெளியீடுகளுக்கான திட்டத்தையும் அவற்றை எழுதுவதற்குக் கைவசம் அறிஞர்களையும் வைத்திருக்கிறது. ராஜ்கௌதமனின் தலித்திய அரசியல், ந.முத்துமோகனின் இந்திய தத்துவங்களின் அரசியல் என்ற இரண்டு நூல்களை அடுத்து அந்த வரிசையில் இப்பொழுது வந்துள்ள சமயங்களின் அரசியல் நான்காவது நூல்.இந்நூலை எழுதியுள்ள தொ.பரமசிவன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைப் பேராசிரியர் தமிழ் நாட்டின் சமுதாய வரலாற்றை வாய்மொழி வழக்காறுகளின் வழியாக ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுள் ஒருவராக அறியப்படுபவர்.அரசியல் என்ற பின்னொட்டோடு நூல்கள் வெளியிடும் கங்குவின் தொடக்கம் எஸ்.வி.ராஜதுரையின் பூர்தியவும் மார்க்சியமும். . நிகழ்கால வாழ்வில் தொலைக்காட்சி போன்ற நவீன ஊடகங்களின் இயங்குநிலை,ஊடகச் செயல்பாடுகளைத் தாண்டி அரசியல் செயல்பாடுகளாக இர

சுந்தரராமசாமி என்னும் நவீனத்துவக் காதலன்

தமிழ்ச் சிந்தனைமரபு,  நவீனத்துவத்தைத் தனதாக்கிக்கொண்டதின் தொடக்கப் புள்ளியின் வெளிப்பாடு யார்? எனக் கேட்டால் சட்டென்று வரக் கூடிய பதில் ‘ கவி பாரதி ’ என்ற பெயர்தான். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் நடந்து விட்ட அந்தத் தொடக்கத்தை இன்று பலரும் மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கின்றனர். அத்தகைய மறுபரிசீலனைகள் பல நேரங்களில் படைப்பாளிகளை அவர்கள் தோன்றி வாழ்ந்த சூழலில் வைத்து விமரிசிக்காமல் இன்றைய சூழலில் வைத்து விமரிசித்துப் புதிய அடையாளங்களைச் சூட்டி வருகின்றன. இத்தகைய மறுபரிசீலனைகள் தவறான நோக்கம் கொண்டன என்று சொல்ல முடியா விட்டாலும் சில நேரங்களில் ஆபத்தான போக்குகளுக்கு இட்டுச் செல்லக் கூடியன என்பதையும் மறுத்து விட முடியாது.

பழைய புத்தகக்கடையில் கிடைத்தவை: தேடிப்படித்த புத்தகங்கள்

படம்
 சில நேரங்களில் குறிப்பான நூலொன்றைத் தேடிப் பழைய புத்தகக்கடைக்குப் போவதுண்டு. சில இலக்கின்றித் தேடும் இடமாகவும்  பழைய புத்தகக்கடைகள் இருக்கும். ஒன்றைத்தேடி இன்னொன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்ச்சி வாசிப்பின் போக்கை மாற்றிவிடும். அப்படித் திசைமாற்றிய இரண்டு நூல்கள் இவை. 

தொகுப்புப்பார்வை: தேடிப்படித்த நூல்கள்

படம்
 குறிப்பிட்ட வகையான  இலக்கியப் போக்கை அதன் தோற்றம், வளர்ச்சி, விரிவு, சிறப்புக் கூறுகள் என விவரித்து எழுதும் எழுத்துகள் இலக்கிய வரலாற்றின் ஒரு பகுதியாக அமைந்துவிடும். அப்படி அமைந்த  முக்கியமான  மூன்று நூல்கள் என இவற்றைச் சொல்லலாம். இவற்றைத்தேடிப் படித்ததோடு பத்திரமாகவும் வைத்துள்ளேன். அவ்வப்போது பார்த்துக்கொள்ள வேண்டிய பார்வை நூல்கள் இவை.