இடுகைகள்

நாவல் என்னும் பெருங்களம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பண்பாட்டு நிலவியலும் தமிழ் நாவல் வாசிப்பும்

உலக இலக்கிய வரலாற்றின் ஆதியிலக்கிய வடிவம் எது? எனக் கேட்டால் ஐரோப்பியச் செம்மொழிகளான கிரீக், லத்தீன் மொழிகளிலிருந்து தொடங்கும் ஐரோப்பிய இலக்கியங்களைக் கற்றவர்கள் நாடகங்கள் தான் ஆதி இலக்கியங்கள் எனச் சொல்லக் கூடும். ஆனால் அவை கவிதைகளால் ஆன நாடகங்கள் எனத் தடுமாறவும் கூடும். அதேபோல் இந்தியச் செம்மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்திலிருந்து இலக்கிய வடிவங்களை உருவாக்கிக் கொண்டவர்கள்கூட நாடகங்களே ஆதியிலக்கிய வடிவங்கள் என நினைக்கவே செய்வார்கள். ஆனால் வேதங்களையும் ஸ்மிருதிகளையும் கணக்கில் கொண்டு கவிதைகளே ஆதியிலக்கிய வடிவம் என்று மயக்கங்கொள்ளவும் செய்வர். ஆனால் இன்னொரு செம்மொழியாகிய தமிழ்ச் செம்மொழியிலிருந்து உருவாக்கப்பெற்ற இலக்கிய மரபை அறிந்தவர்கள் கவிதையே ஆதியிலக்கிய வடிவம் என்று தயங்காமல் சொல்வர். நாடகத்தன்மையைக் கொண்ட தொடர்நிலைச் செய்யுளாகிய சிலப்பதிகாரம் கூட உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் தான்.

காலில் ஒட்டாத கரிசல் மண்

படம்
வேதபுரத்தார்க்கு நல்ல குறி சொல்லு என்றொரு தொடரைக் குமுதம் இதழில் கி.ராஜநாராயணன் ஆரம்பித்தபோது நான் இந்தியாவில் இல்லை. போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தில் போலந்து நாட்டுக்காரர் களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களைப் படித்த நண்பர் ஒருவர் ‘உனது பெயரும் அவ்வப்போது இடம்பெறுகிறது’ எனத் தொலைபேசியில் சொன்னார். சொன்ன பிறகும் அதை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவுக்கு வந்த பிறகு தான் கிடைத்தது.

ஜோ.டி. குருஸ் : அங்கீகரிக்கப் பட வேண்டிய படைப்பாளி

படம்
எல்லாத் துறைகளிலும் விருதுகள் அளிக்கப்படுகின்றன. ஓர் அமைப்பின் விருது என்பது அது வழங்கும் பணமுடிப்பாக மட்டும் இருப்பதில்லை. அடையாளச் சின்னம் தாங்கிய பதாகையும் சேர்ந்தது. விருது என்பது ஊக்கமும் அங்கீகாரமும் இணைந்த ஒன்று. அடையாளப்படுத்தும் இன்னொரு பணியும் விருதுக்குப் பின்னால் இருக்கிறது.

சிவகாமியின் பழையன கழிதலும்… : தலைமுறை இடைவெளியின் இன்னொரு பரிமாணம்

படம்
இலக்கிய இயக்கங்களில் அதிகம் கொண்டாடப்படாத இயக்கம் நடப்பியல் (Realisam) இயக்கம் ஆனால் நீண்ட கால வாழ்வையும் நிகழ்காலத் தேவையையும் கொண்ட இயக்கமாக இருப்பது. நடப்பியலின் சிறப்பு. அதன்  விளைநிலம் புனைகதை. புனைகதையின் வரவோடு நடப்பியல் வந்ததா? நடப்பியலின் தோற்றத்தோடு புனைகதைகள் உருவாக்கப் பட்டனவா? என்ற ஐயத்தைத்  தீர்க்க முடியாத அளவுக்கு இரண்டும் பின்னிப் பிணைந்தனவாக இருக்கின்றன.

அசோகமித்திரன் 18 வது அட்சக்கோடு: நிலவியல் வரலாற்றுப் பின்னணியில் மனிதர்கள்

படம்
முதலில் ஒரு நிலவியல் குறிப்பு: பூமியுருண்டையின் மீது கோடுகள் வரையப்பட்டிருப்பதை நிலவியல் ஆசிரியர்கள் காண்பித்திருப்பார்கள். கற்பனையான இந்தக் கோடுகளுக்குச் சில பயன்பாடுகள் உண்டு. தென் வடலாகச் செல்வதாக நம்பப்படும் தீர்க்கரேகைகள் காலக்கணக்குப் பயன்படுகின்றன. கிரின்விச் நகரத்தின் வழியே செல்லும் கற்பனைக் கோட்டை சுழியன் எனக் கணக்கு வைத்துக் கொண்டு ஒவ்வொரு தீர்க்க ரேகையையும்  சூரியன் தாண்டிச் செல்ல நான்கு நிமிட நேரம் ஆகிறது எனக் கணக்கிடுகிறார்கள். அதேபோல் பூமிப் பந்தின் மத்தியில் ஓடும் கோட்டை புவிமத்தியக் கோடு எனப் பெயரிட்டுள்ளனர். அதற்கு மேலே இருப்பன அட்ச ரேகைகள்; கீழே இருப்பன கடகரேகைகள். அசோகமித்திரனின் நாவலின் கதைக்களமான செகந்திராபாத் 18 வது அட்சக் கோட்டில் இருக்கும் ஒரு நகரம். ஆந்திரா மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்துடன் இணைத்து இரட்டை நகரமாக அறியப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தின் தலைநகரத்தின் பெயரும் ஹைதராபாத் என்பதே. அடுத்து வரலாற்றுக் குறிப்பு: 1947 இல் ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடம் ஆட்சியதிகாரத்தை வழங்கிவிட்டுக் கிளம்பியபோது பிரிட்டிஷாரிடம் சிறப்புச் சலுகை பெற்று

வரங்களும் சாபங்களும் - தொன்மங்களைத் திரும்ப எழுதுதல் எம்.வி. வெங்கட்ராமின் வேள்வித்தீ

படம்
பொழுதுபோக்கு எழுத்திலிருந்து தீவிர எழுத்தைப் பிரித்துக் காட்டும் வரையறைகளைக் கறாரான விமரிசன அளவுகோல்கள் கொண்டு இதுவரை யாரும் விளக்கிக் காட்டவில்லை. அப்படி விளக்கிக் காட்ட நினைக்கும் விமரிசகன் முதலில் கவனப் படுத்த வேண்டியது எழுத்தில் வெளிப்படும் காலப் பிரக்ஞை என்பதாகத் தான் இருக்க முடியும்.

ஜெயமோகனின் கொற்றவை திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து

படம்
ஜெயமோகன் தனது 25 ஆவது   வயதில் முகிழ்த்த கருவை 43 ஆவது வயதில் எழுதி முடித்த பிரதி கொற்றவை. 600 பக்கங்களில் டெம்மி அளவில் , அச்சுத் தொழிலின் நுட்பங்கள் கைவரப் பெற்ற தொழிலாளர்கள்-பதிப்பாசிரியரின் கூட்டுத் தயாரிப்பில் அச்சிடப் பட்டு 2005 இன் வெளியீடாக வந்தது.கொற்றவைக்கு முன்பு ஜெயமோகனின் எழுத்துகள் பல வடிவங்களில்,சில வகைப்பாடுகளுடன் அடையாளப்படுத்தத் தக்கனவாய் அச்சிடப்பட்டிருந்தாலும், அவர் அதிகம் அறியப்பட்டது புனைகதை ஆசிரியராகத் தான். சிறுகதை ஆசிரியராக முதலில் வெளிப்பட்ட போதிலும் விரிவான காலம் மற்றும் வெளி சார்ந்த எல்லைகளுக்குள் கதாபாத்திரங்களை அலையவிடும் நாவல் வடிவமே அவருக்கு லாவகமான வடிவமாக இருக்கிறது.

ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே : எழுத்ததிகாரம் தொலைக்கும் எழுத்து

படம்
எல்லாச் சிக்கல்களுக்கும் காரணமாக இருப்பது அதிகாரத்தின் மீதான பற்றும், அதை அடைவதற்கான முயற்சிகளும்   என்பது அரசியல் சொல்லாடல் என்பதாகக் குறுக்கப்பட்டிருக்கிறது. அதிகாரம் செலுத்துதல் என்பது மற்றவர்களைத் தன்பால் ஈர்த்தலில் தொடங்குகிறது. அடுத்தகட்டம் அவர்களின் நிலையைக் குலைத்துத் தன் நிலையை நிறுவி அதன்படி செயல் படத் தூண்டுதலில் முடிகிறது.

ஜெயகாந்தனின் பாரிஸுக்குப் போ: காலத்தை எழுதுவதற்கான முன்மாதிரி

படம்
விடுதலைக்குப் பிந்திய இந்திய சமூகத்தின் திசை வழிகள் சரியானவை தானா? என்ற கேள்வியைப் பல்வேறு தளங்களில் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்த கால கட்டமாக 1950-களின் பின் பாதியையும் 60-களின் முன்பாதியையும் சொல்ல வேண்டும்.. சிந்தனை மற்றும் பண்பாட்டுத் தளத்தில் ஐரோப்பிய மாதிரிகளை இந்தியர்கள் உள்வாங்க வேண்டும் என நம்பிய ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக்காலம் அது. அவரது நிலை பாடுகளுக்கு எதிராக இருந்தவர்கள் பண்பாட்டு வெளியை முன்னிறுத்திப் பலவகையான சொல்லாடல்களை உருவாக்கினார்கள். குறிப்பாக ஐரோப்பிய வகைப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது அதிகப் படியான எதிர்ப்புணர்வுகளை வெளிப் படுத்தினர்.மேற்கத்தியக் கல்வி முறையின் அடிப் படைக் கோட்பாட்டையும் கற்பிக்கும் முறையியலையும் விட்டுவிட்டு வெறும் பணியாளர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டது என விமரிசனம் செய்யப்பட்டது.

ஹெப்ஸிபா ஜேசுதாசனின் படைப்புலகமும் கருத்துலகமும்

படம்
ஒரு நாவலாசிரியரின் ஒட்டுமொத்த படைப்புகளையும் வாசித்து முடித்து விட்டு திறனாய்வுக்கட்டுரை எழுத நினைத்த போது முதலில் தெரிவு செய்த நாவலாசிரியர் ஹெப்சிபா. இந்தக் கட்டுரையைப் படித்த பலர் என்னைப் பாராட்டினார்கள். ஹெப்சிபாவே அப்போது வந்த திணை இதழின் நேர்காணலில் இந்தக் கட்டுரையின் கருத்தை ஏற்றுச் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருந்தார். 22 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்தக் கட்டுரையை அவரது இறப்பை ஒட்டி வலைப்பூவில் ஏற்றிக் காணிக்கை ஆக்குகிறேன்.

பூமணியின் வெக்கை : தமிழ் நாட்டுக் கிராமங்களின் தகிப்பு

படம்
1960- களுக்குப் பின்பு எழுதத் தொடங்கிக் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களாக அறியப்படும் பலரும் அவர்களின் முதல் நாவலின் வழியாகவே திரும்பத் திரும்ப அடையாளப்படுத்தப் படுகிறார்கள். பூமணியும் அதற்கு விலக்கில்லை அவரது முதல் நாவலான பிறகு வோடு சேர்த்தே அடையாளம் காணப்படுகிறார். வட்டாரம் சார்ந்த எழுத்தாளர்களாக அறியப் படும் பலரும் அத்தகைய அடையாளம் பெறாமல் தப்பிக்க முடியாது.

வெளியிலிருந்த பார்த்த ஆச்சரியம்: வண்ணநிலவனின் கடல்புரத்தில்

படம்
தமிழ்ச் சிறுகதை தோன்றிய பத்தாண்டுகளிலேயே நவீன சிறுகதையாக மாறி விட்டது. ஆனால் தமிழ் நாவல் தன்னை நவீனமாக்கிக் கொள்ள எடுத்துக் கொண்ட காலம் முக்கால் நூற்றாண்டு என்பது நாவல் வரலாற்றில் சொல்லப்பட வேண்டிய உண்மை. தொடர் நிகழ்வுகளை அடுக்கி நீண்ட வரலாற்றைச் சொல்ல உரைநடையை வெளிப்பாட்டுக் கருவியாக மாற்றிக் கொண்ட போதிலும், காவியபாணியும் புராணிகத் தன்மையும், கதை சொல்லலில் கைவிடப் படாமல் தான் இருந்தன. சிறுகதை இலக்கியம் நவீன சிறுகதையாக மாறியதைப் பார்த்தே நாவல் இலக்கியம் நவீன நாவலாக மாறியது என்று கூடச் சொல்லலாம்.

ராஜ் கௌதமனின் தன் வரலாற்று நாவல்கள்

படம்
                                        கதை அல்லாத பிற குறிப்புகள் எப்போதும் தன்னை அந்நியனாக உணரும் சிலுவையின் அங்கதம் சமகாலத் தமிழ்ச் சமூகத்தையும் தன்னையும் கேள்விக்குள்ளாக்குகிறது. இலக்கிய உத்திகளின் துணையின்றி, தன் ‘வாழ்க்கைப் பார்வையையே’ மையமாகக் கொண்டு இயங்கும் புதிய புனைகதை முயற்சி இது. இப்படியான சிறு அறிமுகத்தைப் பின் அட்டையில் கொண்டிருக்கிறது ராஜ் கௌதமனின் இரண்டாவது நாவல் காலச்சுமை,

வாழ்ந்து கெடும் குடும்பங்களின் கதை: பாவண்ணனின் ஒரு மனிதரும் சிலவருஷங்களும்

  ரங்கசாமி நாயக்கர் காலை எட்டுமணிக்கு நாயக்கர் கடை திறப்பார். கடை திறப்பு ஒரு தினுசுதான். விசிறிக்காம்பு நீளத்துக்கு பெரிய சாவியை மடியில் வைத்திருப்பார். கடைக்கு நூறு அடி தூரத்தில் நாயக்கர் வருகிறார் என்றால் கடைவாசலில் வேலைக்காரப் பையன்கள் வந்திருப்பார்கள். பாவண்ணன் சொல்லும் கதை

ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு:பெண்ணெழுத்தின் முதல் அடையாளம்

படம்
தமிழில் புனைகதை இலக்கியம் தொடங்கிய காலந்தொட்டே இந்த வேறுபாடு உண்டு. இலக்கியத்தின் நோக்கம் சார்ந்த இந்த வேறுபாடு தமிழுக்கு மட்டும் உரியதல்ல. உலக இலக்கியம் எல்லாவற்றிலும் இருக்கும் ஒன்று தான். அதிலும் உழைப்பு , ஓய்வு என அன்றாட வாழ்க்கையைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்து வாழப் பழகிக் கொள்ளும் நடுத்தர வர்க்கத்தின் தோற்றத்தோடு தொடர்புடைய புனைகதை எழுத்தின் வரவிற்குப் பின் இந்த வேறுபாடுகள் இருப்பது ஆச்சரியம் எதுவுமில்லை. தீவிர எழுத்துக்காரர்கள் ( Serious literature ) வணிக எழுத்துக்காரர்கள் ( Commercial ) என்பதாக அணி பிரிந்து போட்ட சண்டைகளே ஒரு காலகட்டத்தில் தமிழின் திறனாய்வாகக் கருதப்பட்டது.

கூகை: முன்மாதிரிகளைத் தகர்க்கப் போகும் நாவல்

படம்
ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறுவது என்பது எல்லாத் துறையிலும் நடக்கின்ற ஒன்றுதான்.இலக்கியத் துறையில் செயல்படும் ஒருவன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு, "நிகழ்கால இலக்கியப்பரப்பில் எனது இடம் என்ன ?" என்ற கேள்வியை தனக்குத் தானே கேட்டு விடை தேட வேண்டும். திருப்தியளிக்கும் பதில் அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் வாசகர்களுக்கு அல்லது இலக்கிய வரலாற்றுக்குப் புதுவகையான படைப்பு கிடைக்க வேண்டும். தூர்வை என்ற நாவல் மற்றும் மூன்று சிறுகதைத் தொகுதிகள் வழியாகத் தமிழ்ப் புனைகதைப் பரப்பில் ஓரிடத்தை உறுதி செய்து கொண்ட சோ.தர்மன், கிடைத்துள்ள இடத்தில் திருப்தி அடை யாமல் மேலும் கேட்டுக்கொண்டதின் விளைவு அவரது இரண்டாவது நாவல் கூகையாக உருவாகியுள்ளது.

சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம் நினைவோட்டங்களின் விலகல் பயணம்

படம்
பெண்களை மையப்படுத்தியதாகவே தமிழில் புனைகதை வடிவம் தொடங்கியது. தமிழில் பட்டியலிடப் பட்டுள்ள முதல் ஐந்து நாவல்களில் மூன்று நாவல்கள் பெண்களின் பெயரால்- கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம், முத்து மீனாட்சி -அமைந்த நாவல்கள். தொடங்கி முடிக்கப்படாத பாரதியின் நாவல் முயற்சியான சந்திரிகையின் கதையும் ஒரு பெண்ணை மையப்படுத்திய புனைகதையே. இந்தியாவிற்குள் நுழைந்துள்ள நவீன வாழ்க்கைமுறை பாரம்பரியமான இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் போக்கில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ தாக்குதல் தொடுக்கிறது எனச் சொல்வதின் வழியாகவே நவீனத் தமிழ் இலக்கியம் தன்னை உருவாக்கி நிலை நிறுத்திக் கொண்டது.

இமையத்தின் செடல்:எதிர்பார்ப்புகளற்ற கீழைத் தேய வாழ்வின் மீதான விசாரணை

படம்
எழுத்தாளர்களில் ஒரு சிலர் தாங்கள் இயங்கும் இலக்கிய வகைமைகளில் ‘மைல்கல்’  அல்லது ‘திருப்புமுனைப்’ படைப்பு என்று சொல்லத்தக்க படைப்புகளை எழுதுவதன் மூலம் கவனிக்கத்தக்க படைப்பாளிகள் பட்டியலில் இடம் பிடித்துக் கொள்கின்றனர். அதுவும் ஒரு படைப்பாளியின் முதல் படைப்பே அப்படிப்பட்ட ஒன்றாக அமைந்து விடும் பொழுது படைப்பாளியின் மீது குவியும் கவனம் ஆழமானது. முதல் நாவல் கோவேறு கழுதைகள், இமையத்திற்கு அப்படியொரு கவனக்குவிப்பைப் பெற்றுத் தந்தது.

சுந்தரராமசாமியின் புளிய மரத்தின் கதை : முன்னிலைச் சொல்முறையின் சாத்தியங்களும் பலவீனங்களும்

படம்
இலக்கியப்பிரதிகள் செய்யுளைக் கைவிட்டு உரைநடைக்கு மாறியதின் வழியாகவே இக்கால இலக்கியங்கள் தோன்றின. அவற்றுள் நிகழ் காலத்தின் வாசிப்புத் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவது புனைகதை வடிவமே. புனைகதையின் அழகியல் கூறுகளுள் முதன்மையானது சொல்முறை உத்தி. சொல்முறையின் வழியாகவே புனைகதையாசிரியன் புனைவுவெளியையும், புனைவுக்காலத்தையும் புனையப்பட்ட மனிதர்களையும் உருவாக்குகிறான்.அவற்றின் முக்கூட்டு ஓர்மையில் கதை இலக்கியம் உருவாகிறது என்றாலும் சொல்முறையே படைப்பாளியின் நோக்கத்தையும் பார்வைக் கோணத்தையும் உருவாக்கும்.

கி.ரா.வின் கோபல்ல கிராமம்: நான் அறிந்த மனிதர்களும் எனக்குத் தெரிந்த கதைகளும்

படம்
நான் அறிந்த மனிதர்களும்  எனக்குத் தெரிந்த கதைகளும் நீங்கள் வாசித்த நாவல்களில் உங்களுக்குப் பிடித்த நாவல் எது ? என்ற கேள்விக்கு எந்தவிதத் தயக்கமும்  இல்லாமல் ” கி.ராஜநாராயணனின்  கோபல்ல கிராமம் ”  என நான் சொன்ன போது எனக்கு வயது 21. நிகழ்கால அரசியல் , பொருளாதாரச் சமூகச் சிக்கல்களைப் பேசும் விதமாகப் பாத்திரங்களை உருவாக்கி , அவற்றின் உளவியல் ஆழங்களுக்குள் செல்வதன் மூலம் வாசகர்களையும் உடன் அழைத்துச் செல்லும் தன்மையிலான எழுத்தே சிறந்த எழுத்து எனவும் , நாவல் என்னும் விரிந்த பரப்பில் தான் அதற்கான சாத்தியங்கள் அதிகம் எனவும் எனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களும் , நான் படித்திருந்த இலக்கியத் திறனாய்வு நூல்களும் சொல்லியிருந்தன.