இடுகைகள்

மே, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நல்ல சினிமாவாக ஆகத்தவறிய இரண்டு படங்கள்

படம்
சினிமாவை வழங்கும் இணையச் செயலிகள் வழியாகக் குற்றம், வழக்கு, துப்பறிதல், தண்டனை என வடிவமைக்கப்படும் மலையாளப் படங்கள் சலிப்பைத் தருகின்றன. அதனால்    தமிழ்ப் படங்களின் பக்கம் போகத் தோன்றியது. அடுத்தடுத்து இரண்டு படங்களைப் பார்த்தேன். இதற்கான தூண்டுதலாக முகநூலில்  நண்பர்கள் எழுதிய குறிப்புகள் இருந்தன. எழுதியவர்கள் ஏன் அந்தப் படங்களைப் பார்க்கவேண்டும் என்று   சொல்லவில்லை என்றாலும் ‘பார்க்கலாம்’ என்று பரிந்துரைத்து ஒதுங்கினார்கள். அதனால் கொஞ்சம் ஆர்வம் தூண்டப்பட்டது. தூண்டப்பட்ட ஆர்வத்தில் முதலில் பார்த்த சினிமா 'பெரிசு' இரண்டாவதாகப் பார்த்தது "ஜெண்டில் வுமன்".

திக்கு விஜயம்- பின்னணியால் அர்த்தங்கள் விரியும் ஒரு சிறுகதை

படம்
இந்தியக் குடும்பங்களின் மையவிசை ஆண்கள் என்று  நம்பப் படுகிறது. குடும்பத்திற்கு அவனே தலை. அதனால் அவனே குடும்பத்தின் அன்றாடச் செலவுகளுக்கான வருமானத்திற்கு உழைக்க வேண்டியவன் என்பது அந்த நம்பிக்கையின் தொடர்ச்சி. பிள்ளைகளைப் பெற்றுத்தருவது பெண்களின் வேலையாக இருந்தாலும் அவர்களை வளர்த்துப் படிக்கவைத்து ஆளாக்கும் பொறுப்பும் ஆண்களுக்கே இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது.

சந்தேகத்தின் பலனை... -சல்மாவின் மறுபக்கம் கதை மீதொரு விவாதம்

படம்
ஒரு புனைகதையை விளக்கிச் சொல்வதற்கும் விவாதிப்பதற்கும் விமரிசனம் செய்வதற்குமான முறைமையை அல்லது திறனாய்வுச் சொற்களை உருவாக்கித் தரும் கதை, தீவிர வாசிப்பை விரும்பும் வாசகருக்கு அல்லது விமரிசகருக்கு உற்சாகம் எழுத்தாகத் தோன்றும். இம்மாதக் (மே, 2025) காலச்சுவடுவில் வந்துள்ள சல்மாவின் ‘மறுபக்கம்’ அப்படியொரு உற்சாகத்தைக் கடத்தும் சிறுகதையாக இருக்கிறது.

சுஜாதாவை வாசித்தல்: இரண்டு சிறுகதைகளை முன்வைத்து

கலை இலக்கியங்களின் வெளிப்பாட்டுக்கு நோக்கமொன்று இருக்கவேண்டும் எனச் சொன்னால், கலை கலைக்காக என்பதை நம்புகிறவர்கள் மறுப்பார்கள். கலைக்கு எந்தவிதமான நோக்கமும் தேவையில்லை; கலை எதையும் செய்யாது; மாற்றங்களை நிகழ்த்தாது எனக் கூறி, "எழுத்துக்கோ, கலைக்கோ நோக்கமே தேவையில்லை" எனச் சொல்வதோடு, நோக்கம் வேண்டுமெனச் சொல்பவர்களைக் கலையின் விரோதிகள் என முத்திரை குத்துவதும் உண்டு. ஒரு கலைப்படைப்பு, அது கலையாக - எழுத்தாக இருந்தால் போதும் என்று வாதம் செய்வார்கள். ஆனால் நோக்கமில்லாமல் எந்தக் கலையும், எழுத்தும் இல்லை. ஒரு கலைப்படைப்பை அல்லது எழுத்தை இன்னவகையான எழுத்து எனச் சுட்டிக்காட்டி விவாதிப்பதற்கு உதவுவதோ கலைஞர் அல்லது எழுத்தாளர் தனது உருவாக்கப் படைப்பில் காட்டும் ஆதரவும் மறுப்பும் என்பதான நிலைப்பாடுதான் உதவுகிறது.