இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வட்டார தேசியமும் வாரிசு அரசியலும்.

படம்
அதிகாரப் பரவலாக்கம் பற்றி ஜனநாயக ஆர்வலர்களும் அறிவுஜீவிகளும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். மையப்படுத்தப்படும் அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் போக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் வெளிப்பாடு. மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்பில் சில மாநில மக்களின் நலன்களும் , மாநில அரசுகளின் உரிமைகளும் கண்டு கொள்ளப்படவில்லை; அதிகாரம் பரவலாக்கப் பட வேண்டும்; மேலிருந்து கீழ் நோக்கி அப்பரவல் நகரவேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டதுண்டு. ஒற்றைக் கட்சியின் ஆட்சி மைய அரசில் இருந்த போது இத்தகைய குரல்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டன.

ஜெயந்தி: மாமனிதர்களின் அடையாளங்கள்

படம்
ஜெயந்தி என்பது வேறொன்றும் இல்லை. பிறந்த நாள் தான். பிறந்த நாளை, பிறந்த நாள் என்று கொண்டாடுவதற்குப் பதிலாக ஜெயந்தி என்று கொண்டாடுவது வெறும் பெயரளவு மாற்றம் அல்ல. ஜெயந்தி என்ற சமஸ்கிருதச் சொல்லால் பிறந்த நாள் அழைக்கப்படும்போது சமஸ்கிருதமயமாக்கப் பட்டதாக மாறி மேல்நிலையாக்கமும் பெறுகிறது. அதனால் சமஸ்கிருதக் கருத்தியலும் சேர்ந்து கொள்கிறது . பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வெறும் மனிதர்களுக்கானது. ஜெயந்தி மனிதர்களுக்கானதல்ல; மகான்களுக்கானது என்பது அதன் உள்கிடை.