எழுத்துகள் - எழுத்தாளர்கள்

அபிலாஷின் பத்தி எழுத்துகள் உயிர்மை.காம் இணைய இதழில் அபிலாஷ் இன்னொரு பத்தித் தொடரை எழுதப் போகிறார் என்றொரு விளம்பரத்தை மனுஷ்யபுத்திரன் பகிர்ந்துள்ளார். உயிர்மை கண்டுபிடித்து வளர்த்தெடுத்த எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன். அவரது புனைவுகளில் -சிறுகதைகளிலும் நாவலிலும் - அதிகப்படியான விவரணைப் பகுதிகளும், தர்க்கம் சார்ந்த விவரிப்புகளும் இடம்பெற்று புனைவெழுத்தின் அடையாளங்களைக் குறைத்துவிடும் விபத்துகளைச் சந்தித்திருப்பதாகக் கருதியிருக்கிறேன்; ஆனால் அவரது கட்டுரைகள் - அவை தனிக்கட்டுரைகள் ஆனாலும் சரி, பத்தித்தொடர்களாக எழுதப்படும் கட்டுரைகளும் முன்மாதிரி இல்லாத வகைமை கொண்டவை.