பெண் உடலை உணர்தல் : உமாமகேஸ்வரியின் இரண்டு கதைகள்

ஆர்வமூட்டும் தொடக்கமொன்றைக் கதை கொண்டிருக்க வேண்டும்' என்ற இலக்கணப்படியான மரபான தொடக்கம்தான். 'கதவு தட்டப்படுவதான உணர்வு. ஆனால் யார் தட்டியது என்று தெரியவில்லை' என்பது போன்ற திகில் தன்மையை ஆரம்பமாகக் கொண்ட கதை உமா மகேஸ்வரியின் குளவி.(காலச்சுவடு, 200/ஆகஸ்டு, 2016) ஒற்றை நிகழ்வைக் கொண்டதாக - கதைக்குள் இருக்கும் நடுத்தர வயதுப் பெண்ணின் செயல்பாடுகளை மட்டுமே விவரிப்பதாக இருந்த கதைக்குள் வேலைக்காரப் பெண்ணொருத்தியோடு நடத்தும் அந்த ஒரேயொரு கூற்று அவளைப்பற்றிய இன்னொரு பரிமாணத்தை உருவாக்குகிறது.