இருத்தலையும் இருத்தல் நிமித்தங்களின் வண்ணங்களையும் வரைதல்..தேன்மொழி தாஸின் கவிதைகள்-

பத்து ஆண்டுகளுக்கு முன்பே அந்தப் பெயர்- தேன்மொழிதாஸ்- என்ற பெயர் ஒரு கவியின் பெயராகப் பதிந்திருந்தது. பலராலும் சொல்லப்பட்டு உருவான தமிழ்க்கவிதைப்போக்கு ஒன்றிற்குள் இருக்கும் அடையாள வெளிப்பாடாகவோ, நானே வாசித்து உருவாக்கிக்கொண்ட தனித்துவமான கவியின் அடையாளமாகவோ அந்தப் பெயர் பதிந்திருக்கவில்லை.